மேலதிகாரிகளை ஈர்க்கும்படி பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?

ஜனவரி 4, 2012 at 1:49 முப 3 பின்னூட்டங்கள்

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட்டா  உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட்டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர் ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பலமணி நேரம் செலவு செய்தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://www.resumesimo.com

இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை  சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர் , முகவரி ,  கல்வித்தகுதி , இதரதகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.பல்வேறு வகையான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள்ள்லாம். எதையெல்லாம் மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது. எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனைவரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும்போது
பிரிண்ட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்கி நம் வாழ்க்கையில் புது திருப்பத்தை உருவாக்கும் இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்

CVMaker ( Resume Maker ) வேலை பெற்றுத்தரும் பயோடேட்டா சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.

 
வின்மணி சிந்தனை
திறமை உள்ளவர்கள் ஒரு போதும் தங்களை
வெளி உலகிற்கு வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to dare    துணிகரகமாக சாகசம் செய்தல்
to damn    குறை என்று கண்டி,சாபம் இடு
to dance    நடனமாடு
to dangle    தொங்கு , தளர்த்தியாக ஆடவிடு
to dangle    (காதலை வெளிபடுத்த) பின்தொடர்வது
to darn    கிழிசலின் மீது துணி வைத்துத் தை,
to deal with விணை மேற்கொள்
to debate    விவாதி
to debit    கணக்கிலிருந்து கழி, 
to decay   பலவீனமுறு,சேதமுறு
 
இன்று ஜனவரி 4
பெயர் : ஐசக் நியூட்டன் ,
பிறந்த தேதி : ஜனவரி 4, 1643
ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும்,
அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.
ஈர்ப்பு விதி கண்டுபிடித்தவர். புவிசார் மற்றும்
விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும்
இயற்கை விதிகளை முதன் முதலில் விளக்கியவர்.1687 ல்
ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae
Naturalis Principia Mathematica என்னும் நூலை
வெளியிட்டார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

சிறு தொழிலதிபர்களுக்கு உதவும் இலவச பயனுள்ள ஆன்லைன் அக்கவுண்டிங் மென்பொருள். அழகான பேக்ரவுண்ட் பேட்டர்ன்( Background pattern) விரும்பியபடி ஆன்லைன் மூலம் உருவாகலாம்.

3 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...