சிறு தொழிலதிபர்களுக்கு உதவும் இலவச பயனுள்ள ஆன்லைன் அக்கவுண்டிங் மென்பொருள்.

ஜனவரி 3, 2012 at 2:04 முப பின்னூட்டமொன்றை இடுக

புதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து அக்கவுண்டிங் மென்பொருள் உருவாக்க வேண்டும்  என்ற அவசியம் இல்லாமல் ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் இணையதளம் ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரிபார்த்துக்கொள்வதற்கும் நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஆன்லைன் மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவத்ற்கு வசதியாக அக்கவுண்டிங் மென்பொருள் தளம் ஒன்று உள்ளது.

இணையதள முகவரி : http://numia.biz

இத்தளத்திற்கு சென்று Register Now For Free என்ற பொத்தானை சொடுக்கி தேவையான தகவல்களை கொடுத்து ஒரு இலவச கணக்கை திறந்து கொள்ளவும்.அதன் பின் எளிதாக நம் நிறுவனத்தின் அக்கவுண்டிங் தகவல்களை கொடுக்க வேண்டியது தான். இணைய இணைப்பு மட்டும் தான் தேவை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுகுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.பல பயனார்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும்  ஒரு அக்கவுண்ட் உருவாக்கி கொடுத்து அவர்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யலாம்.தேவைப்படும் தகவல்களை Report எடுத்து பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதிதாக ஒரு மென்பொருள் வாங்கி அதை நம் கணினியில் நிறுவி , குறிப்பிட்ட தகவல் தேவைப்படும் நேரத்தில் அங்கு சென்று தேடுவதற்கு பதில் ஆன்லைன் மூலம் நம் அக்கவுண்டிங் தகவல்களை பாதுகாப்பாக சேமித்து மொபைல் போனில் உள்ள இணையம் வழியாகவும் நம் தகவல்களை அப்டேட் செய்யலாம். இதை எல்லாம் விட  இத்தளத்தில் கூடுதல் சிறப்பு ஒன்றும் உள்ளது அதாவது இத்தளத்தில் இருக்கும் Video Tutorials என்பதை சொடுக்கி ஆரம்பம் முதல் இந்த அக்கவுண்டிங் மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று Screen video உடன் சொல்லி கொடுக்கின்றனர். கண்டிப்பாக இந்தப்பதிவு சிறிய நிறுவனம் நடத்துபவர்களுக்கும், ஆன்லைன் இலவச அக்க்கவுண்டிங் மென்பொருள் தேடுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வங்கி கணக்கு முதல் அனைத்துவிதமான கணக்கிற்கும் நமக்கு உதவி செய்ய ஆன்லைன் கணக்கு பிள்ளை.

எந்த ஒரு பயனாளர் கணக்கும் இல்லாமல் ஆன்லைன் -ல் சாட்( அரட்டை) செய்யலாம்.

இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்

சென்னை முதல் அமெரிக்கா வரை ஒவ்வொரு இடத்தின் கால நிலையையும் இனி வரும் காலநிலையையும் துல்லியமாக அறியலாம்.

 
வின்மணி சிந்தனை
நம் பிறந்தநாளில் பசியால் வாடும்
ஒரு ஏழைக்காவது உணவு வழங்க வேண்டும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to call    அழை
to cadge    மற்றவரை அண்டி வாழ்
to cajole    முகத்துதி செய், புகழ்ந்துரை செய்
to calculate  கணக்கிடு
to calibrate  அளவிடு,செம்மைகட்டு
to calibration ஏகாதிபத்தியம் சார்ந்த, கம்பீரமான
to call (பெயர்) கூப்பிடு,சொற்பொழிவாற்று
to call for    தேவைபடு,கோரிக்கைவிடு,கோரு
to call in    திரும்ப அழை
to call to mind ஞாபகப்படுத்தல்

 

இன்று ஜனவரி 3

பெயர் : வீரபாண்டிய கட்டபொம்மன் ,
பிறந்ததேதி : ஜனவரி 3, 1740
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்
போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வரி கட்டாமல்
போருக்கு அழைத்த சிங்கம்.நாட்டு மானத்துக்காக
தன் உயிரை கொடுத்த உத்தமர். உங்களால் நம்
தேசத்துக்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் ” நன்றி சொல்லி கடிதம் “ எழுத உதவும் பயனுள்ள தளம். மேலதிகாரிகளை ஈர்க்கும்படி பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: