நாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்.
மார்ச் 13, 2011 at 7:37 பிப 2 பின்னூட்டங்கள்
நாம் உருவாக்கும் டூட்டோரியல் முதல் இசை, இபுத்தகம்,
புகைப்படங்கள் வரை அனைத்தையுமே ஆன்லைன் மூலம்
எளிதாக உலக அளவில் விற்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1
ஆங்கிலம் அல்லது தமிழில் நன்றாக கதை, கவிதை, கட்டுரை
எழுதும் திறமை இருக்கிறது ஆனால் இதை எப்படி விற்பது என்று
தெரியாமல் இருக்கும் நாம் இதை ஒரு இபுத்தகமாக மாற்றி
ஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம், விற்பதற்கு நமக்கு
உதவி செய்ய ஒரு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.uploadnsell.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் எடுத்த புகைப்படங்கள் முதல் நாம்
உருவாக்கிய இபுத்தகம், இசை,டூட்டோரியல் வரை அனைத்தையுமே
உலக அளவில் விற்கலாம். படம் 1-ல் காட்டியபடி Choose File என்ற
பொத்தானை சொடுக்கி நாம் விற்க விரும்புக் கோப்பை தேர்வு
செய்ய வேண்டும் அடுத்து Product Information என்பதில் நாம்
விற்கும் பொருளின் பெயர் மற்றும் விலையை தேர்ந்தெடுக்க
வேண்டும் , மூன்றாவதாக Seller’s Information உங்களைப்பற்றிய
தகவல்களையும் உங்கள் Paypal இமெயில் முகவரியையும்
கொடுத்து , நான்கவதாக சட்டப்படி வேறு யாருடைய பொருளையும்
விற்கவில்லை என்பதற்கு அடையாளமாக Agreement -ஐ டிக்
செய்து விட்டு Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும்
அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தகவல்களை வைத்து
ஒரு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டு அதன் இணையதள
முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இதை நம் பிளாக் அல்லது
இமெயில் மூலம் நமக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம்
வாங்க விருப்பம் உள்ளவர்கள் இத்தளம் மூலமாகவே பேபால்
வழியாக பணம் செலுத்தி நாம் கொடுத்த பொருளை வாங்கிக்
கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நாம் எடுத்த Photos,
நாம் உருவாக்கிய Ebook,Tutorial,Music போன்றவற்றை
எளிதாக விற்க உதவும்.
ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்.
நாமும் பிக்காஸோ மாதிரி உயிர் உள்ள ஒவியம் வரைந்து மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்.
உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம்.
வின்மணி சிந்தனை நல்ல நண்பர்களும் நல்ல இணையதளங்களும் எப்போதும் நம் வெற்றியில் துணையாக கூடவே இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஏத்தி - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன ? 2.தருக - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன ? 3.தழால் - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன ? 4.பூ - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன? 5.ஏ - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன? 6.ஞா - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன? 7.பா - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன? 8.ம- என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன? 9.’உணர்’ என்ன்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் என்ன? 10.Court என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன? பதில்கள்: 1.ஏத்து,2.தா,3.தழீ, 4.உலகம்,5.அம்பு, 6.பொருந்து, 7.பாடல், 8.இயமன், 9.உணர்ச்சி,10. நீதிமன்றம்.
இன்று மார்ச் 13பெயர் : ஜோசப் பிரீஸ்ட்லி , பிறந்த தேதி : மார்ச் 13, 1733 ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்ஸிஜனைக் (ஒட்சிசன், உயிர்வளி) கண்டுபித்தவர்.இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நாம் உருவாக்கிய Ebook, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்., Tutorial.
1.
Life Direction Network | 2:34 பிப இல் மே 5, 2011
நண்பரே, இத்தளத்தில் நாம் தயாரித்த நாடகம் போன்ற வீடியோக்களை விற்க முடியுமா!
2.
winmani | 6:04 பிப இல் மே 5, 2011
@ Life Direction Network
ஆம் விற்க முடியும்.
நன்றி