ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.
மார்ச் 14, 2011 at 8:12 பிப 1 மறுமொழி
ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷ் (English & Spanish) மொழியை
தாய்மொழியாக கொண்டவர்களிடம் இருந்து எளிதாக நாம்
ஆங்கிலம் கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
திறமைகள் பல இருந்தும் ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கும்
நம்மவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலத்தை தாய்மொழியாக
கொண்ட வெளிநாட்வர்களிடம் இருந்து நேரடியாக நாம் ஆங்கிலம்
பேசிப் பழகலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://myintercambio.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு பயனாளர் கணக்கு
உருவாக்கிக்கொண்டு நுழையலாம், Videos என்பதை சொடுக்கி
பல வகையான ஆங்கில் அறிவை வளர்க்கும் வீடியோவை
பார்க்கலாம். எந்த வீடியோ நமக்கு பிடித்திருக்கிறதோ அந்த
வீடியோவில் இருப்பவருடன் நாம் நண்பராக இணைந்து
கொள்ளலாம். இத்துடன் Speaking Practice , Contests ,Breaking
Language Barriers , How-to Introduction , Learning English,
Pronunciation , Grammar போன்ற பல பிரிவில் தனித்தனியாக
பல வகையான வீடியோக்கள் கிடைக்கிறது.ஆக்கில அறிவை
வளர்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
உண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம்.
சில நாட்கள் முறையாக பார்த்தால் ஆங்கிலம் பெற்ற திறமைசாலிகளாக மாறலாம்.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.
ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி
ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.
வின்மணி சிந்தனை ஒரு மொழியின் வளமை அதனை நாம் எப்படி உச்சரிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.Complete - என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன? 2. Empty Vessel-என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன? 3.Publication - என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன? 4. Powerful - என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன? 5.பணி-பனி ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருள் என்ன ? 6.என் - எண் ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருள் என்ன ? 7.உறு - உரு ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருள் என்ன ? 8.அளகு-அலகு ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருள் என்ன ? 9.நகைத்தல் இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன ? 10.சிந்தாமணி,சிலப்பதிகாரம்,பாஞ்சாலி சபதம், மணிமேகலை இதில் பொருந்தா சொல் எது ? பதில்கள்: 1.முழுமை,2.வெற்றுப்பாத்திரம்,3.பதிப்பகம், 4.சக்திவாய்ந்த, 5. பணி - வேலை , பனி - குளிர், 6.என் - என்னுடைய , எண் - எண்ணிக்கை, 7.உறு - மிகுதி , உரு - வடிவம் , 8.அளகு - காட்டுக்கோழி, அலகு - அளவைக்கூறு, 9.நகை, 10. பாஞ்சாலி சபதம்.
இன்று மார்ச் 14பெயர் : கார்ல் மார்க்ஸ் , மறைந்த தேதி : மார்ச் 14, 1883 ஜெர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக,எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்..
1.
♠புதுவை சிவா♠ | 11:25 பிப இல் மார்ச் 18, 2011
Thanks winmani