உங்கள் செல்லப்பிராணிகளுக்குகென்று பயனுள்ள தனி இணையதளம்
பிப்ரவரி 20, 2010 at 7:11 பிப பின்னூட்டமொன்றை இடுக
எல்லோருக்கும் தனித்தனி இணையதளம் என்று வந்துவிட்டது
அந்த வகையில் நம் செல்லப்பிராணிகளுக்கும் மிகவும் உதவும்
வகையில் புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி
தான் இந்த பதிவு.
நம் செல்ல நாய்குட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று வைத்துக்
கொள்வோம் நமக்கு டாக்டரை சந்திக்க கூட நேரமில்லை என்றாலும்
உங்களுக்கு உதவ இந்த இணையதளம் வந்துள்ளது.
இணையதள முகவரி: http://www.petfinder.com
இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் செல்லப்பிராணியை
தேர்ந்தெடுங்கள் உதாரணமாக உங்கள் நாய்க்குட்டி இரண்டு நாளாக
சரியாக சாப்பிடாமல் இருக்கிறது என்றாலும் அதற்கான தீர்வும்
இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இதைத்தவிர செல்லப்பிராணியை
எப்படி வளர்க்க வேண்டும் என்றும் சொல்லித்தருகின்றனர்.உங்கள்
செல்லப்பிராணியின் புகைப்படத்தை இந்த தளத்தில் இலவசமாக
பகிர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளது. சிலருக்கு செல்லப்பிராணிகளை
போட்டிக்கு அழைத்து செல்லும் ஆசையும் இருக்கும் அந்த வகையில்
எங்கே எந்த நாட்டில் செல்லப்பிராணிகளுக்கான போட்டி நடக்கிறது
என்பதை பற்றிய முழுவிபரத்தையும் இந்த இணையதளம்
தெரிவிக்கிறது. எப்படி போட்டிக்கு செல்லும் பிராணிகளை பழக்கலாம்
என்று வீடியோவுடன் சொல்லித்தருகின்றனர்.இதையெல்லாம் தவிர
அனைத்து வளர்ப்பு பிராணிகளுக்கும் உரிய நடவடிக்கையை விரிவாக
எடுத்துகூறுகின்றனர். இதில் ஒவ்வொரு வளர்ப்பு பிராணிகளுக்கும்
என்று தனித்தனி குரூப்-ம் உள்ளது அந்தந்த குரூப்-ல் அதைப்பற்றி
விரிவாக நாம் பேசலாம்.இந்த இணையத்ளம் செல்லப்பிராணி
வைத்திருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் getName() Returns the current thread’s name getPriority() Returns the thread’s priority as an integer
இன்று பிப்ரவரி 20பெயர் : கா. நமச்சிவாயம், பிறந்த தேதி : பிப்ரவரி 20, 1876 தமிழகத்தின் சிறந்த புலவராக தமிழறிஞராக விளங்கியவர் தமிழ்ப்பேராசிரியர்.தைத்திங்கள் முதல்நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தவர்.திருவள்ளுவருக்கு முன் - திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்தகால அளவு கிடைக்க வழிவகுத்தவரும் இவரே. இதற்கு உற்ற துணையாக உ.வே.சாமிநாதய்யரும்,மறைமலை அடிகளாரும் இருந்தனர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் செல்லப்பிராணிகளுக்குகென்று பயனுள்ள தனி இணையதளம்.
Subscribe to the comments via RSS Feed