Archive for பிப்ரவரி 5, 2010
புத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம்
ஆராய்ச்சி செய்யும் மாணவரிலிருந்து பள்ளி,கல்லூரி மாணவர்கள்,
பொழுதுது போக்கு நாவல் படிப்பவர்கள் வரை அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவு.புதிதாக இணையதளம் மூலம்
புத்தகம் வாங்க நினைப்பவரா நீங்கள் எந்த இணையதளத்தில் விலை
குறைவாக கிடைக்கும் என்று நாம் தேட வேண்டாம். நீங்கள் வாங்க
விரும்பும் புத்தகத்தின் பெயர் அல்லது ஐஎஸ்பிஎன் எண் அல்லது
புத்தக ஆசிரியர் பெயர் அல்லது புத்தகத்திற்கு சம்பந்தமுள்ள வார்த்தை
என்று ஏதாவது ஒன்றை கொடுத்து இந்த இணையதளத்திற்கு சென்று
தேடினால் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகம் மிகக்குறைந்த
விலையில் எந்த இணையதளத்தில் கிடைக்கும் என்றும் கூடவே அதே
புத்தகம் பயன்படுத்தியதாக (Used book) இருந்தால் என்ன விலை
என்று ஒரு பெரிய பட்டியலை கொடுக்கிறது.
இணையதள முகவரி: http://www.textbookpricecomparison.com
அனைத்து புத்தக இணையதளங்களையும் தேடி நமக்கு தேடுதல் முடிவு
கொடுக்கிறது.எந்த இணையதளத்தில் புத்தகம் குறைவான விலையில்
கிடைக்கிறது என்றும் அந்த இணையதளத்தில் சென்று வாங்க தொடர்பு
கொள்ளும் தொடுப்பு முகவரியுடன் நமக்கு காட்டுகிறது.ஒரு புத்தகம்
வாங்க வேண்டும் என்றால் அதன் மொத்தகொள்முதல் செய்யும்
வியாபாரி-ன் இணையதளம் என்று அத்தனையையும் வசதிகளையும்
தாங்கி எளிமையாக இருக்கிறது இந்த இணையதளம். ஒருநாள்
தேர்வுக்காக பெரிய விலை கொடுத்து இனி புத்தகம் வாங்க வேண்டாம்
ஆம் ஏற்கனவே பயன்படுத்திய புத்தகத்தை கூட இதன் மூலம்
வாங்கலாம். வெளிநாட்டு ஆசிரியர் புத்தங்களை கூட நேரடியாக
வாங்கலாம் பணம் கட்டி எத்த்னை நாட்களில் புத்தகம் நம் கையில்
கிடைக்கும் என்ற கூடவே கிடைக்கிறது. இனி நீங்கள் புத்தகம் வாங்க
வேண்டும் என்றால் விலைப்பட்டியலை உடனடியாக ஒப்பிட்டு பார்த்து
சிறந்த இணையதளத்தில் புத்தகம் வாங்கி பணத்தை மட்டுமல்ல
நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் ஜாவாவில் variable கன்வர்சனுக்கு உதவும் நிரல் String to int String myString = "420"; int myInt = Integer.parseInt(myString); String to double String myString = "42.0"; double myDouble = Double.parseDouble(myString); String to long String myString = "1000000000"; long myLong = Long.parseLong(myString);
இன்று பிப்ரவரி 5பெயர் : மகேஷ் யோகி, மறைந்த தேதி : பிப்ரவரி 5, 2008 மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியானத்தை (transcendental meditation) இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். அமெரிக்கா,மெக்சிக்கோ,ஐக்கிய இராச்சியம்,சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் ஆழ்நிலை தியான மையங்களை உருவாக்கியவர்.எந்த மதமும் இல்லாத நல்ல மனிதர்.