Archive for பிப்ரவரி 9, 2010
உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த
வகையில் இப்போது நம் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை
வைத்து ஆன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்
இதைப்பற்றி தான் இந்த பதிவு. மொபைல் டிரேஸ் அல்லது போன்
டிரேஸ் என்று சைபர்கிரைம்-ல் உள்ளவர்கள் கண்டுபிடிக்கும் அதே
தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும்
ஒரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு
போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த
இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது
போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று ( U.S or International)
தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும் அதுமட்டுமின்றி
மேப்-ம் சேர்த்தே கொடுக்கின்றனர்.
இணையதள முகவரி: www.tp2location.com

படம் 1
இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி உங்கள் போன்
நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற
பட்டனை அழுத்தவும் இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின்
விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).

படம் 2

படம் 3
அதே போன் நம்பரின் மேப்-ஐ பார்ப்பதற்கு படல் 2-ல் உள்ளது போல் map+
என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப் -ஐயும் பார்க்கலாம்.
படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் double variable value -ஐ integer ஆக மாற்ற உதவும் எளிய ஜாவா நிரல். public class TypeCastDouble { public static void main(String[] args){ double myDouble = 420.5; //Type cast double to int int i = (int)myDouble; System.out.println(i); } }
இன்று பிப்ரவரி 9பெயர் : ஜே.எம்.கோட்ஸி, பிறந்த தேதி : பிப்ரவரி 9, 1940 இவர் ஒரு தென்னாபிரிக்க எழுத்தாளர் ஆவார். இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நான்காவது கறுப்பின எழுத்தாளர். கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார்.