Archive for பிப்ரவரி 10, 2010

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

நிலநடுக்கம் எந்த நாட்டில் வந்தாலும் நம்மை அறியாமல் ஒரு அச்சம்
நமக்குள் வருவது இயற்கை தான். எந்த நாட்டில் நில நடுக்கம் வந்தது
என்பது முதல் இனி எந்த நாட்டில் எல்லாம் நில நடுக்கம் வரப்போகிறது
என்பதை பற்றிய அனைத்து தகவல்களையும் உடனடியாக மக்களுக்கு
தெரிவிக்க ஒரு இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.

பொதுமக்கள் அனைவரும் நிலநடுக்கத்தைப் பற்றிய தகவல்களை எந்த
நேரமும் இதில் பார்த்துக்கொள்ளலாம். உடனுக்குடன் விரிவான செய்தி
அளிக்கிறார்கள் கடந்த 48 மணி நேரத்தில் எங்கெல்லாம் நில நடுக்கம்
வந்தது என்பதை பற்றிய விபரங்களை மேப்பிலும் கொடுக்கின்றனர்.
பள்ளி , கல்லூரியில் மாணவர்களுக்கு இதை எப்படி எடுத்து சொல்லலாம்
குழந்தைகளுக்கு இதனை எப்படி எல்லாம் புரிய வைக்கலாம் என்பதை
மிகவும் தெளிவாக படத்துடன் விளக்குகின்றனர். ஆராய்ச்சி செய்யும்
மாணவர்கள் நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம் அனைத்தும்
தகவல்களும் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.

உங்களுக்கு நிலநடுக்கத்தைப் பற்றிய அனுபவம் இருக்கிறதா அப்படி
என்றால் நீங்களும் உங்கள் அனுபவததை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை வந்த நிலநடுக்கத்தால் எந்த நாட்டில் எல்லாம் எவ்வளவு
சேதம் என்பது முதல் அந்த நாட்டின் இன்றைய நிலை வரை
அத்தனையையும் அவர்களே கொடுக்கின்றனர்.ஒவ்வொரு
நாட்டிலும் தனித்தனியாக எங்கெல்லாம் நிலநடுக்க வந்தது என்று
தேடும் வசதியும் உள்ளது.இனி எங்கெல்லாம் நிலநடுக்கம் வரலாம்
என்பதை பற்றிய முன்னறிவிப்பு தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
அனைத்து தரப்பு மக்களும் நிலநடுக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள
வேண்டிய தகவல்கள் பல இடம் பெற்றுள்ளது.

இணையதள முகவரி: http://earthquake.usgs.gov

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
File -ஐ rename- செய்வதற்கான எளிய ஜாவா நிரல்
import java.io.File;
public class RenameFile {
public static void main(String[] args) {
File file = new File("C:\\MyFile.txt");
File newFile = new File("C:\\MyFileRenamed.txt");
file.renameTo(newFile);
}}
இன்று பிப்ரவரி 10 
பெயர் :அலெக்சாண்டர் புஷ்கின்,
மறைந்த தேதி : பிப்ரவரி 10, 1837
ரஷ்ய மொழியில் காதல் காவியங்கள் 
படைத்த ஒரு சிறந்த எழுத்தாளர்.இவர் நவீன
ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் 
மிகப்பெரிய கவிஞராகவும் பலராலும் 
கருதப்படுகிறார். புஸ்கின் தனது கவிதைகளிலும்
நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் 
முன்னோடியாக இருந்தார்.

பிப்ரவரி 10, 2010 at 4:38 முப 1 மறுமொழி


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,727 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: