Archive for பிப்ரவரி 22, 2010
உங்கள் உல்லாச பயணத்துக்கான செலவை திட்டமிட பயனுள்ள இணையதளம்.
உல்லாசப்பயணம் செய்ய அனைவருக்கும் ஆசை தான் ஆனால்
பல நேரங்களில் திட்டமிடாமல் சென்று உல்லாச பயணத்தை
மகிழ்ச்சியாக செலவிட முடியாமல் போகிறது.திட்டமிட்டு
பயணம் செய்தால் உங்கள் பயணம் இனிதாக அமையும் அந்த
வகையில் உங்கள் பயணத்தின் செலவை திட்டமிட ஒரு
பயனுள்ள இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றிதான் இந்த பதிவு.
உதாரணமாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றால்
கூட சில நேரங்களில் நம் கையில் இருக்கும் பணம் எளிதாக
கரைந்துவிடும் அப்படி இல்லாமல் நாம் பயணத்தை திட்டமிட்டு
சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்ல பேருந்து அல்லது
இரயில் மூலம் செல்லும் செலவுக்கு ஆகும் பணம் அங்கு
சாப்பாட்டுக்கு,குடிதண்ணிருக்கு,எத்தனை நாள் தங்குகிறோமோ
அத்தனை நாளுக்கான ரூம் செலவு,விளையாட்டு பொருட்கள்,
அங்கிருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்லும் செலவு என
அனத்தையும் நாம் பயணம் செல்லும் முன்பே தீர்மானித்தால்
நம் பயணம் உண்மையிலே மகிழ்ச்சியானதாகமாறிவிடும். இந்த
இணையதளத்திற்கு சென்று நாம் செல்லும் பயணத்துக்கு ஆகும்
செலவை நாமே திட்டமிடலாம்.
இணையதள முகவரி:http://www.budgetyourtrip.com
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் XML Connectors , “Then” Follow with (in sequence) | “Or” Select (only) one from the group Only one connector type per group — no mixing
இன்று பிப்ரவரி 22பெயர் : பேடன் பவல், பிறந்த தேதி : பிப்ரவரி 22, 1857 ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார்.இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.