Archive for பிப்ரவரி 4, 2010
உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்.
சராசரி மனிதன் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில இலக்குகள்
தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வார்கள் ஆனால் அப்படி
நிர்ணயித்த இலக்குகளை வாழ்க்கையில் எப்படி நடைமுறை
படுத்துவது என்று தெரியாமல் பலபேர் குழப்பத்துடனே இருக்கின்றனர்.
சில சமயங்களில் நமக்கு இலக்கை அடையும் வழி தெரிந்தாலும் அது
சரிதானா என்ற ஒரு கேள்வியும் இருந்து கொண்டே தான் இருக்கும்
இதற்கெல்லாம் நாம் தீர்வு காண யாரிடமும் செல்ல வேண்டாம்
நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்
பற்றி தான் இந்த பதிவு.
இலக்கை அடைய பல வழிகள் இருந்தாலும் அதில் சிறந்த வழிஎது,
அதிகமான பேர் எந்த வழியில் சென்று இலக்கை
அடைந்திருக்கின்றனர் என்று சொல்கிறது இந்த இணையதளம்.
இலக்கை அடைவது மட்டுமல்ல நாம் சில நேரங்களில் உடல்
எடையை குறைப்பதற்கு என்ன வழிமுறைகளை எல்லாம் பின்பற்ற
வேண்டும் என்று கூட கேட்கலாம்.எபோதும் மகிழ்ச்சியாக இருக்க
என்ன செய்ய வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு அவர்கள்
திட்டங்களை வகுத்து நமக்கு சொல்கின்றனர். இலக்கை
அடைவதற்கு எளிய வழிமுறைகளை ஒவ்வொரு படியாக(step)
தெரிவிக்கின்றனர் மொத்தமாக சொல்வதை விட இப்படி ஒவ்வொரு
படியாக சொல்வதால் நமக்கு எளிதாகவும் இதை நடைமுறைப்படுத்தி
பார்க்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது. இதைத்தவிர
இலக்கை நடைமுறை படுத்துவதற்கு முன் என்ன செய்யவேண்டும்
என்பதிலிருந்து இதனால் நாம் அடையப்போகும் பலன் என்ன என்பது
வரை அத்தனையையும் தெளிவாக கூறுகின்றனர். ஆன்லைன்-ல்
இதுபோன்று பல இணையதளங்கள் இருந்தாலும் இதில் அத்தனையுமே
இலவசமாக நமக்கு கொடுக்கின்றனர்.
இணையதளமுகவரி : http://goalbot.org
இதைப்பயன்படுத்தி வாழ்க்கையில் பல இலக்குகளை எளிதாகவும்
முறையாகவும் அடையவேண்டும் என்பதுதான் நம் நோக்கம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் ஜாவாவில் மெயின் மெத்தட் இல்லாமல் டிஸ்பிளே செய்வது எப்படி என்று பார்ப்போம். public class NoMain { static { System.out.println("No Main!"); System.exit(0); } }
இன்று பிப்ரவரி 4பெயர் : கே.ஆர்.நாராயணன், பிறந்த தேதி : பிப்ரவரி 4, 1921 பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார்.குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின் காவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது வழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது.