Archive for பிப்ரவரி 13, 2010
கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்
இணையதளத்தில் தேடுதல் என்றவுடன் நமக்கு தெரிவது கூகுள் தான்
இந்த கூகுளின் அனைத்து சேவைகளுமே எதிலும் எப்போதுமே டாப்
தான்.இத்தகைய திறமை வாய்ந்த கூகுள் தேடல் முகப்பு பக்கத்தில்
கூகுளின் பெயருக்கு பதிலாக உங்கள் பெயர் இருந்தால் எப்படி இருக்கும்
அதற்காக தான் இந்த பதிவு.
http://www.shinysearch.com இந்த இணையதளத்திற்கு சென்று
உங்களுக்கு பிடித்த ஸ்டைல்-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும் அதன்
பின் படம் 1-ல் காட்டியபடி வலது பக்கம் இருக்கும் பக்கத்தில் இருக்கும்
டெக்ஸ்ட் பாக்ஸ்-ல் உங்கள் பெயர் அல்லது நீங்கள் விரும்பிய
வார்த்தையை கொடுத்து “Create custom homepage” என்ற பட்டனை
அழுத்தி உங்கள் பெயரில் கூகுளின் முகப்பு பக்கத்தை உருவாக்குங்கள்
இதற்கு அடுத்தப்பக்கத்தில் கூகுளின் பெயருக்கு பதிலாக உங்கள் நீங்கள்
கொடுத்த பெயர் வந்திருக்கும். (பட்ம் 2-ல் காட்டப்பட்டுள்ளது)
பதினைந்துக்கும் மேற்பட்ட ஸ்டைல் உள்ளது ஒவ்வொன்றையும் பயன்
படுத்திப்பார்க்கவும். சில ஸ்டைல் கூகுள் லோகோ போலவே உங்கள்
பெயரையும் மாற்றிவிடும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் உங்கள் HTML page -ஐ வேலிடேட் செய்ய உதவும் சிறிய மென்பொருள் கருவி தரவிரக்கி உங்கள் இணையப்பக்கத்தின் தவறை திருத்திக்கொள்ளலாம். http://www.html-kit.com/e/go.cgi?i=PG_HTMLKIT
இன்று பிப்ரவரி 13பெயர் :சரோஜினி நாயுடு, பிறந்த தேதி : பிப்ரவரி 13, 1879 பாரதீய கோகிலா(இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர் செய்த சேவைக்காக இந்தியநாடே இன்று பெருமிதம் கொள்கிறது.