Archive for ஜனவரி, 2010
ஒபாமா அறிவித்த சலுகையால் இந்தியாவின் ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா
அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா தனது ஒராண்டு நிறைவு நிகழ்ச்சியில்
அமெரிக்காவில் இருக்கும் ஐடி மற்றும் தகவல் தொழில்நுட்ப
நிறுவன்ங்களுக்கு விதிக்கப்படும் வரிச்சலுகை இனி ரத்து செய்யப்படும்
என்று அறிவித்துள்ளார்.இதனால் இந்தியாவின் ஐடி மற்றும் பிபீஒ
நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை பற்றி பார்ப்போம்.
அமெரிக்காவில் சமீப காலமாகவே வங்கிகளின் மூடல் தொடர்ந்து
கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சென்ற ஆண்டு கணக்கின்படி
அதிகமாகவே குறைந்துள்ளது இதை சரி கட்டும் வகையில் தான்
ஒபாமாவின் அறிக்கை வெளிவந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள
நிறுவனங்கள் பெரும்பாண்மையான பணிகளை இந்தியாவில் உள்ள
சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை
அனைத்துக்கும் கொடுத்து தான் வேலை நடந்தது. கடந்த 2008-2009ம்
ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் பங்கு 5.8
சதவீதமாக அதிகரித்தது நமக்கு தெரிந்ததுதான். ஆங்கில புலமை,
வேலையில் திறமை மட்டுமல்ல இந்தியாவில் தொழில்நுட்ப துறைக்கு
அளிக்கும் வரிச்சலுகையால் தான் இந்தியா தொழில்நுட்ப துறையில்
இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்ற நோக்கத்தில் தான்
அதிபரின் இந்த உரையில் இனி சிறு நிறுவன்ங்கள் தொடங்க அரசு
பண உதவி செய்யும் வரிச்சலுகை ரத்து என்று அதிரடியான
முடிவுகளை எடுத்துள்ளது.இதற்காக 3000 கோடி அமெரிக்க
டாலரையும் ஒதுக்கியுள்ளது.இதனால் இனி அமெரிக்கவில் ஏற்கனவே
வேலை இழந்த 70 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்காவிட்டாலும்
அதில் பாதி பேருக்காவது வேலை கிடைக்க இந்த அறிவிப்பு உதவும்.
இந்தியாவில் இனி ஐடி மற்றும் பிபீஒ நிறுவனங்களுக்கு ஏற்கனவே
கொடுத்த பிராஜெக்ட் தவிர புதியது சிலபிராஜெக்ட் தான் உள்ளது.
அமெரிக்காவில் வரிச்சலுகை ரத்து செய்துவிட்டால் அவர்கள் தங்கள்
வேலைகளை அங்கேயே பார்த்துக்கொள்வார்கள் நமக்கு இனி ஐடி
மற்றும் பிபீஒ நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெருமளவு குறையும்
என்பது தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்து.இது ஒரு பக்கம்
இருந்தாலும் சில அமெரிக்க நிறுவனங்கள் தொழில்தொடங்க
பாதுகாப்பான நாடு என்று இந்தியாவை தான் தேர்ந்தெடுத்துள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் Flash விடியோவை சேர்ப்பதற்கான எளிய HTML நிரல். <object type="application/x-shockwave-flash" width="400" height="220" wmode="transparent" data="flvplayer.swf? file=movies/eg.flv"> <param name="movie" value="flvplayer.swf?file=movies/ eg.flv"/> <param name="wmode" value="transparent" /> </object>
இன்று ஜனவரி 31பெயர் : எம்.பக்தவத்சலம், மறைந்ததேதி : ஜனவரி 31, 1987 தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர்.1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். நேர்மையின் சிகரம். இந்திய தேசத்திற்காக பாடுபட்ட உங்களை மரியாதையுடன் வணங்குகிறோம்.
பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
நேற்று புதிதாக ஒரு வைரஸை பேஸ்புக்கில் அனுப்பி சோதித்துள்ளனர்
ஹக்கர் இதிலிருந்து நம் பேஸ்புக் கணக்கை எப்படி பாதுக்காப்பது
என்பது தான் இன்றைய பதிவு. டிவிட்டர் , யூடியுப் அடுத்ததாக
ஹக்கரின் பார்வை இப்போது பேஸ்புக்-ல் விழுந்துள்ளது.பேஸ்புக்
எப்போதுமே செக்யூரிட்டிக்கு கொஞ்சம் அதிகமாகவே முக்கியத்துவம்
கொடுத்து இருந்தும் இந்த வைரஸ் வந்துள்ளது. எப்படி இந்த வைரஸ்
பரவுகிறது என்று பார்ப்போம். நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம்
பேஸ்புக் அக்கவுண்டுக்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்துள்ளார் நீங்கள்
அவரை நண்பர் என உறுதுபடுத்துங்கள் என்று அறிவிக்கும் அப்போது
கூடவே அவர் அவர் அனுப்பிய செய்தி ஒன்றும் உங்களுக்கு கிடைக்கும்
அந்த செய்தி இது தான் “My Ex-Girlfriend Cheated on me…
Here is my revenge!” உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது
இந்த மாதிரி நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை
நிராகரித்துவிடவும்.
நமக்கு கொஞ்சம் குழப்பம் வருகிறதெல்லவா எப்படி இதிலிருந்து நம்
அக்கவுண்டை ஹக் செய்ய முடியும் என்று சற்று விரிவாக
பார்ப்போம்.உங்கள் நண்பராக இணைந்த பின் இவர்கள் கொடுக்கும்
ஒரு CSS நிரல் மூலம் தான் நம் கணக்கின் பாஸ்வேர்டிலிருந்து
அனைத்தையும் இவர்கள் நொடியில் எடுத்து விடுகின்றனர்.ஆனால்
புத்திசாலித்தனமாக ஒன்று செய்கின்றனர் நம் பேஸ்புக் கணக்கை
இவர்கள் திருடினாலும் அதை முடக்கவில்லை அதனால் நம்
கணக்கு ஹக் செய்யப்பட்டதா இல்லையா என்று கூட நமக்குத்
தெரியாது. அவர்கள் CSS நிரலை வைத்து பேஸ்புக்-ஐ கூட ஹக்
செய்யலாம் என்றால் நம் அக்கவுண்டை திருடுவது ஒன்றும் பெரிய
காரியம் இல்லை.ஒருவரின் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் அவர்களின்
இமெயிலையும் ஹக் செய்து விடுகின்றனர் அதனால் முகம்
தெரியாத நபர் உங்களுக்கு அனுப்பும் பிரண்ட்ஸ் ரெக்யுஸ்டில்
எப்போதுமே ஒருமுறைக்கு இருமுறை சோதனை செய்தபின்
ஏற்றுக்கொள்ளுங்கள். ஷாட் லிங்(Short url)முகவரி ஏதாவது
வந்தால் கூடுமானவரை அதை கிளிக் செய்வதை தவிர்க்கப்பாருங்கள்.
இப்போது தான் CSS-ன் மகத்துவம் புரோகிராமருக்கு புரிந்திருக்கும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் இமெயில் முகவரி சரியானதா என்று அறிய உதவும் நிரல் function is_valid_email($email) { if(preg_match("/[a-zA-Z0-9_-.+]+@[a-zA-Z0-9-] +.[a-zA-Z]+/", $email) > 0) return true; else return false; }
இன்று ஜனவரி 30பெயர் : மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மறைந்ததேதி : ஜனவரி 30, 1948 மகாத்மா காந்தி என்று இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியவர்.சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.இந்தியாவின் தேசத்தந்தையை மரியாதையுடன் வணங்குகிறோம்.
MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.
MP3 பாடல்களை ஆன்லைன்-ல் எந்த சாப்ட்வேர் துணையும்
இல்லாமல் வெட்டி நாம் விரும்பியபடி ரிங்டோன் உருவாக்கலாம்
என்பதை பற்றி தான் இந்த பதிவு. http://mp3cut.net
இந்த இணையதளத்திற்கு சென்று முதலில் நாம் எடிட் செய்ய
வேண்டிய பாடலை நம் கம்ப்யூட்டரிலிருந்து தரவேற்றம் (UPLOAD)
செய்ய முதல் ஸ்டெப் படம் 1-ல் காட்டியபடி “ Upload mp3 ”
என்ற பட்டனை அழுத்தி பாடலை அப்லோட் செய்ய வேண்டும்.

படம் 1

படம் 2
இப்போது நாம் அப்லோட் செய்த பாடல் படம் 2-ல் காட்டியபடி
வந்து விடும் இப்போது ஸ்டெப் 2 நமக்கு தேவையான பகுதியை
ஸ்லைடர் கண்ட்ரோல் பட்டன் இடது பக்கத்தில் உள்ளதில் இருந்து
தொடங்கி வலது பக்கம் உள்ள ஸ்லைடர் கன்ட்ரோல் மூலம் எங்கு
முடிய வேண்டும் என்பதையும் படம் 3-ல் காட்டியபடி தேர்வு
செய்துகொள்ளவும்.

படம் 3

படம் 4
எந்த பகுதி வேண்டுமோ அதை தேர்வு செய்த பின் பிளே செய்தும் சரி
பார்த்துக்கொள்ளலாம். சரியான் பகுதியை தேர்ந்தெடுத்து முடித்த பின்
ஸ்டெப் 3 படம் 4-ல் காட்டியபடி ஸ்பிளிட் அண்ட் டவுன்லோட்
( Split and Download) என்ற பட்டனை அழுத்தி நம் கம்ப்யூட்டரில்
தரவிரக்கிக்கொள்ளவும். இந்த முறையை பின்பற்றி எந்த ஒரு சாப்ட்வேர்
துணையும் இல்லாமல் நாமாக எளிதாக ஒரு ரிங்டோன் அல்லது
பாடலின் சில பகுதியை மட்டும் எடிட் செய்து கொள்ளலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் சிஎஸ்எஸ்-ல் இமெஜ் பிரிலோட் செய்வதற்கான எளிய நிரல் #preloadedImages { width: 0px; height: 0px; display: inline; background-image: url(path/to/image1.png); background-image: url(path/to/image2.png); background-image: url(); }
இன்று ஜனவரி 29பெயர் : பி.எஸ்.பி.பொன்னுசாமி, மறைந்ததேதி : ஜனவரி 29, 1998 இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை ஏற்று,பல்வேறு இன்னல்களை அனுபவித்து, பல பங்களிப்புகள் தந்து,வெளி உலகுக்குப் பரவலாகத் தெரியாமல் மறைந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவர் தான் இந்த பி.எஸ்.பி.பொன்னுசாமி. நன்றி...என்றும் உங்களை நினைவில் வைத்திருப்போம். உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.
ஆப்பிள் மர்மம் நீங்கியது – ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்.
ஆப்பிள் நிறுவனம் நேற்று புதிதாக ஒன்றை அறிமுகம் செய்வதாக
அறிவித்திருந்தது என்ன அதிசயம் நடக்கப்போகுது என்று நினைத்த
அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி புதிதாக பல வசதிகளுடன் ஐபாட்
ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐபாட் என்ன வசதிகளை
எல்லாம் கொண்டுள்ளது என்று இனி பார்ப்போம்.
வண்ணத்திரையுடன் தொட்டு பயன்படுத்த்க்கூடிய அழகிய மாடல்.
அனைத்து இணையதளங்களையும் எளிய சொடுக்கில் பார்க்கலாம்.
அதோடு பெரிய கீபோர்ட் வசதியும் உள்ளது கையால் தொட்டும்
இன்புட் கொடுக்கலாம். இபுக் படிக்க , சாலைகளின் மேப் ,
கூகுள் மேப், ஸ்லைட் அன்லாக்,மியூசிக் பிளேயர் ஐடியுன் ,
வீடியோ படம் கிரிஸ்டல் கிளியர் என பல வசதிகளை தாங்கி
வந்துள்ளது. கூகுள் நெக்சஸ் வெளிவருவதற்கு முன் நாம் கால்
பதித்தால் தான் வளரமுடியும் என்று ஆப்பிள் ஐபாட் வெளிவந்துள்ளது.
இந்த அனைத்து சிறப்பம்சங்களை நேற்று தான் ஆப்பிள் நிறுவனம்
அறிவித்தது இந்த எல்லா சிறப்பம்சங்களும் கூகுள் நெக்சஸ்-ல்
வரப்போகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். கூகுளுக்கு இந்த
நேரம் கொஞ்சம் சரியில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
சமீபத்தில் தான் கூகுள் சீன பிரச்சினை அதற்குள் இது வேறு புது
பிரச்சினையா என்று கூகுள் யோசித்துகொண்டிருக்கிறது.இதன் விலை
$499 அமெரிக்க டாலரிலிருந்து தொடங்குகிறது. ஆப்பிள் ஐபாட்
பற்றிய மேலும் சில விபரங்கள்.
– SPECS: 9.7 inch IPS display, 0.5 inches thin, 1.5 pounds in weight.
– MEMORY SIZE: 16, 32, or 64 GB solid state hard drives
– CHIP: 1 GHz Apple A4 chip. It looks like they went in-house to build this thing.
– Wi-Fi: 802.11n
– BATTERY LIFE: 10 hours
– Includes Speaker, Microphone, 30-pin connector, Accelerometer, and compass
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் பயர்பாக்ஸ்-ல் ஏற்படும் ஒபாசிட்டி பிரச்சினையை தீர்க்கும் நிரல் selector { filter: alpha(opacity=60); /* MSIE/PC */ -moz-opacity: 0.6; /* Mozilla 1.6 and older */ opacity: 0.6; }
இன்று ஜனவரி 28இந்தியா - தேசிய அறிவியல் நாள் அறிவியல் என்பது நம் அறிவை கண்டுபிடித்து அதை நல்ல வழியில் பயன்படுத்தி அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் விஞ்ஞான மெய்ஞான சாதனமாக உருவாக்குவதற்காக கடைபிடிக்கப்படும் இந்த நாள் இந்திய தேசிய அறிவியல் நாள்.இந்த நாளில் அறிவியல் வளர்ச்சிக்காக பாடுபட்ட இந்திய தேசத்தின் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்.
குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
வந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவு. சிறிய வயது உள்ள
குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும்
பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது.
முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும்
பிளே ஸ்டேசன் போல் உள்ளது. முதலில் இதன் ஹார்டுவேர்
கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம்.
* Intel Pentium Dual Core E5200 CPU
* 19”inch touchscreen LCD
* 500GB HDD
* 4GB RAM
* DVD super drive
* Intel GMA 3100 3D Graphic Card
* Realtek HD audiO
* Windows 7 OS
இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன்
(Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர்.
தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில்
இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை
அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. இண்டெர்நெட்டில்
ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும்
கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும்
வடிவமைத்துள்ளனர்.இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக்
கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர்
இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள்
பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5
முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த
கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ்.மூன்றாவதாக 11 முதல் 15
வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான
பேக்கேஸும் உள்ளது.இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப்
கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை
$1999 அமெரிக்க டாலர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் ஜாவா ஸ்கிரிப்ட்டில் டைம் அவுட் செய்வதற்கான எளிய நிரல் setTimeout(“inittab1();“, 500); setTimeout(“inittab2();“, 1000); setTimeout(“inittab3();“, 2000); setTimeout(“initontology();“, 6000);
இன்று ஜனவரி 27பெயர் : தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும்,தொழிலதிபரும் ஆவார்.பல முக்கியமான மின் சாதனங்களை உருவாக்கியுள்ளார்.இவரின் மிக முக்கியமான வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் இன்று தான் பெற்றார்.அதிக அளவு காப்பூரிமைக்கு சொந்தகாரர்.தனது பெயரில் 1093 சாதனை உரிமங்களைப் பதிவு செய்துள்ளார் எடிசன்.
டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.
உலக பணக்காரர்களில் முதல்வர் பில்கேட்ஸ் சமீபத்தில் டிவிட்டரில்
சேர்ந்தது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் டிவிட்டரிலும்
சாதனை படைக்காமால் வெளிவருவாரா பில்கேட்ஸ் ஆம் பில்கேட்ஸ்
டிவிட்டரில் இணைந்த 8 மணி நேரத்திற்க்குள் 1 இலட்சம் பேர்
அவரை பின் தொடர்ந்துள்ளனர். டிவிட்டரின் வரலாற்றிலே இதுதான்
முதல் முறை உலகத்தின் அத்தனை நாடுகளில் இருந்தும் பில்கேட்ஸ்
நண்பர்கள் ,விசுவாசிகள் , என டிவிட்டரை நோக்கி
படையெடுத்துள்ளனர். அதிக அளவு பயனாளர்கள் ஒரே நேரத்தில்
பில்கேட்ஸ்-ஐ பின்தொடர டிவிட்டருக்கு வழக்கமான சந்தேகம் தான்
ஏதோ வைரஸ் தாக்குதலா ? ஒரே நேரத்தில் இவ்வளவு டிராபிக்
வருகிறதே என்று புரியாமல் பில்கேட்ஸ்-ன் அக்கவுண்டை வெரிபை
பண்ணி பில்கேட்ஸ் உள்ளே வந்ததால் தான் டிராபிக் கொஞ்சம்
அதிகமாகிவிட்டது என்று அறிவித்தனர். பல ஆயிரக்கணக்கான
மக்கள் பில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்ததில் இருந்து இந்த நிமிடம்
வரை பில்கேட்ஸ்-ஐ பின் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
பில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்த்து பற்றி டிவிட்டரின்
மேலதிகாரிகளிடம் கேட்டபோது பில்கேட்ஸ் எங்கள் டிவிட்டருக்கு
வந்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி தான். அதோடு தனிப்பட்ட
எங்கள் வாழ்த்துச் செய்தியையும் பில்கேட்ஸ்க்கு அனுப்பியுள்ளோம்
என்று கூறினர். பில்கேட்ஸ்-ம் 42 பேரை பின் தொடர்கிறார்.
இந்த நிமிடம் வரை பில்கேட்ஸ் 16 டிவிட் செய்துள்ளார் அவரை
பின்தொடர்ந்து 3,36,614 பேர் உள்ளனர். சராசரியாக ஒருமணி
நேரத்திற்கு 12,500 பேர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த மாததின் முடிவில் இது 4 இலட்சத்தை தாண்டும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பணக்காரருடன் நாமும் தொடர்பு
வைத்துக் கொள்ள விரும்பினால் கீழ்கண்ட டிவிட்டர் முகவரியை
சொடுக்கவும்.
பில்கேட்ஸ்-ன் டிவிட்டர் முகவரி :
http://twitter.com/billgates
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் மவுஸ் பொஸிஸனை கண்டுபிடிக்க உதவும் நிரல் function rPosition(elementID, mouseX, mouseY) { var offset = $('#'+elementID).offset(); var x = mouseX - offset.left; var y = mouseY - offset.top; return {'x': x, 'y': y}; }
இன்று ஜனவரி 26மதிப்பிற்குரிய இந்திய திருநாட்டின் 61 வது குடியரசு தினம். வளரும் வல்லரசு நாடுகளில் இந்தியாவுக்கு எப்போதுமே முதலிடம் தான். இந்திய தேசத்துக்காக பாடுபட்ட அத்தனை தலைவர்களையும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்து பார்க்கிறோம். உங்கள் தேசப்பற்றுக்கு நன்றிகள் பல உங்களை என்றும் எங்கள் பாரத நாடு நினைவில் வைத்திருக்கும்.
கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.
தேடுதல் என்றாலே கூகுள் தான் என்றாகிவிட்ட இந்த நிலையில்
கூகுளில் புதுமையாக மிகச்சரியான முடிவுகளை இப்போது
கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர் இதைப்பற்றி தான் இந்த
பதிவு. மைக்ரோசாப்ட்டின் பிங் தேடுதலில் தாங்கள் தான்
சரியான முடிவுகளை கொடுப்போம் என்று கொஞ்ச நாளாக
பெருமையாக கூறிக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது
கூகுள் தன் அடுத்தகட்ட போட்டிக்கு ஆளே இல்லாமல்
செய்து விட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது.
பிங் தேடுபொறி இப்போது கூகுளின் அடுத்த கட்ட நடவடிக்கை
பார்த்து வியந்துள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் XML file-ஐ உள்ளீடு செய்வதற்காக எளிய ஜாவா நிரல் function parseXml(xml) { //find every Tutorial and print the author $(xml).find("Tutorial").each(function() { $("#output").append($(this).attr("author") + ""); }); }
இன்று ஜனவரி 25பெயர் : குமார சுவாமிப்புலவர், மறைந்த தேதி : ஜனவரி 25, 1922 இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.சாணக்கிய நீதி வெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்ற வடமொழி நூல்களை மொழிபெயர்த்தவர். சிறந்த இறைபக்தி உள்ளவர் பண்பாளர்.
விண்வெளியில் இருந்து நேரடியாக முதல் டிவிட் புதிய அதிசயம்.
அமெரிக்கவின் நாசா வான்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து
சமீபத்தில் வான்வெளிக்கு அனுப்பிய ISS சிறப்பு மென்பொருளின்
துணை கொண்டு பூமிக்கு நேரடியாக முதல் டிவிட் வந்துள்ளது.
இதைப் பற்றி தான் இந்த பதிவு.
இண்டெர்நெட்டை ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று
பார்த்திருப்போம் ஆனால் சற்று வித்தியாசமாக பல மில்லியன்
மைல் தொலைவில் இருக்கும் விண்வெளியில் இண்டெர்நெட்-ஐ
பயன்படுத்தியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள். சில மாதங்களுக்கு
முன்னர் அல்டிமெட் இண்டெர்நெட் கனெக்சன் ( Ultimate
internet connection ) என்ற வயர்லஸ் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி ISS என்ற மென்பொருளின் துணை கொண்டு
பர்சனல் இண்டெர்நெட் அக்சஸ் என்பதை வான்வெளியில்
பயன்படுத்தியுள்ளனர். சோதனைக்காக முதலில் ஒரு டிவிட்டை
வான்வெளியில் இருந்து விஞ்ஞானி T.J.Creamer என்பவர்
பூமிக்கு முதல் டிவிட்டை அனுப்பியுள்ளார்.
www என்றால் ” World wide web ” என்பதன் உண்மையான
அர்த்தம் இன்று தான் உண்மையாகியுள்ளது. அடுத்தடுத்து பல
கேள்விகள் எந்த Ip Addres எடுத்து கொள்கிறது .இணைப்பு
முழுமையாக கிடைக்கிறதா என்ற அனைத்து கேள்விகளுக்கும்
விரைவில் நாசாவிலிருந்து பதில் வெளிவரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.எதற்காக விண்வெளிக்கு சென்று
டிவிட்டரை பயன்படுத்தி அதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை
நாசா கொடுக்கின்றதே என்று பார்த்தால் இதன் பின்னனியில்
இந்த சோதனைக்காக நாசா-வுக்கு டிவிட்டர் சில மில்லியன்
டாலர் பணம் கொடுத்துஇருக்கலாம் இதற்காக தான் முதலில்
வான்வெளியில் முதலில் டிவிட்டரை பயன்படுத்தினார்களோ.
இதோடு T.J. Creamer என்பவரின் டிவிட்டர் முகவரியையும்
கொடுத்துள்ளோம்.
டிவிட்டர் முகவரி http://twitter.com/Astro_TJ
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் பாப்அப் எல்லா பிரவுஷரிலும் தெரிய பயன்படுத்த வெண்டிய நிரல் jQuery('a.popup').live('click', function(){ newwindow=window.open($(this).attr('href'),'', 'height=200,width=150'); if (window.focus) {newwindow.focus()} return false; }); சில பிரவுஷர் பாப்அப் தானாகவே தடுக்கப்பட்டுவிடும் அவ்வாறு தடுக்கப்படாமல் எல்லா பிரவுஷரிலும் தெரிய இந்த நிரலை பயன்படுத்தவும்.
இன்று ஜனவரி 24பெயர் : ஓமி யெகாங்கிர் பாபா, மறைந்த தேதி : ஜனவரி 24, 1966 இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கியப் பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற ஜெர்மானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.ஓமி பாபா இந்திய அணுக்கருவியலின் தந்தை.
வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி
நம் ஆடியோ வீடியோ தகவல்களை இலவசமாக பதிவேற்ற ஒரு
இணையதளம் அந்த இணையதள முகவரியை சுருக்க ஒரு
இணையதளம் என்று தேட வேண்டியதில்லை அத்தனையையும் ஒரே
இடத்தில் நாம் அப்லோட் செய்யலாம்.அதோடு அப்லோட் செய்யும்
டாக்குமெண்டுக்கு சிறிய அளவிளான இணையதள முகவரியும்
பெறலாம் அத்தோடு இதனை டிவிட்டும் செய்யலாம் இத்தனையும் நாம்
ஒரே இணையதளத்தில் எப்படி என்று பார்ப்போம்.
http://post.ly இந்த இணையதளத்திற்கு செல்லவும் இதில்
”அப்லோட் பைல்ஸ் ” என்பதை அழுத்தி நாம் பதிவேற்ற வேண்டிய
ஆடியோ , வீடியோ அல்லது டாக்குமெண்ட் கோப்பு-ஐ
தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்ததும் அதுவே அப்லோட் ஆக
ஆரம்பிக்கும். “ADD Text” என்பதில் நாம் பதிவேற்றியகோப்புக்கு
புரியும்படி ஏதாவது பெயரை சேர்த்துக்கொள்ளலாம். நாம் அப்லோட்
செய்த கோப்பு-ஐ உடனடியாக டிவிட் செய்து கொள்ளும் வசதியும்
உள்ளது.இதே போன்று இணையதளமுகவரியை சுருக்க பல
இணையதளங்கள் இருந்தாலும் மற்றவற்றில் எல்லாம் வேறு
எங்காவது நாம் கோப்பை சேமித்துவிட்டு அந்த முகவரியை தான்
சுருக்க முடியும். ஆனால் போஸ்ட்டிலியில் நாம் இலவசமாக நம்
கோப்பு-ஐ தரவேற்றுவதுடன் உடனடியாக சுருக்கப்பட்ட
முகவரியையும் (Short URL) பெற்றுவிடலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்: பிரவுஷரை கண்டுபிடிக்க உதவும் ஜாவா நிரல் //A. Target Safari if( $.browser.safari ) $("#menu li a").css("padding", "1em 1.2em" ); //B. Target anything above IE6 if ($.browser.msie && $.browser.version > 6 ) $("#menu li a").css("padding", "1em 1.8em" ); //C. Target IE6 and below if ($.browser.msie && $.browser.version <= 6 ) $("#menu li a").css("padding", "1em 1.8em" ); //D. Target Firefox 2 and above if ($.browser.mozilla && $.browser.version >= "1.8" ) $("#menu li a").css("padding", "1em 1.8em" ); எந்த பிரவுஷர் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை எளிதாக கண்டுபிடிக்க உதவும் நிரல்.
இன்று ஜனவரி 23பெயர் : சுபாஷ் சந்திர போஸ், பிறந்ததேதி : ஜனவரி 23, 1897 நேதாஜி என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்.நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் மரணம் இன்றளவும் ஆங்கிலேயர்க்கு புரியாதபுதிராகவே உள்ளது.இந்தியமக்கள் அனைவரும் உங்களுக்காக தலை நிமிர்ந்து வணங்குகிறோம். உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.