போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி
ஜனவரி 1, 2010 at 6:40 பிப 3 பின்னூட்டங்கள்
பத்து முதல் 16 இலக்கம் வரை உள்ள போன் நம்பரை ஞாபகம்
வைக்க புதுமையான வழி ஒன்று உள்ளது. என்னதான் நாம் அடிக்கடி
பயன்படுத்தும் போன் நம்பராக இருந்தாலும் சில நேரங்களில்
மறந்து விடும் மறக்காமல் ஞாபகம் வைத்து கொள்வதற்கு வசதியாக
புது வழியை ஒரு இணையதளம் அளிக்கிறது. எப்படி என்று பார்ப்போம்
உதாரணமாக நம் கைப்பேசியில் இரண்டாம் (2) நம்பரில் இருந்து
ஒன்பதாம் (9) எண் வரை ஒவ்வொரு எண்ணுக்கும் மூன்று ஆங்கில
எழுத்துக்கள் வரிசைப்படி கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 2 -ம்
எண்ணை எடுத்துக்கொண்டால் அதற்கு ABC என்ற வார்த்தைகள் இருக்கும்.

படம் 1
http://www.phonespell.org இந்த இணையதளத்திற்கு சென்று ஞாபகம்
வைக்க வேண்டிய பத்து அல்லது 16 இலக்க போன் நம்பரை கொடுத்து
Submit பட்டனை அழுத்த வேண்டும். உதாரணமாக நாம் 7078575782 என்ற
போன் நம்பரை கொடுத்துள்ளோம்.

படம் 2
அடுத்து வரும் திரை படம் 2- ல் காட்டப்பட்டுள்ளது. இதில் 70 அடுத்ததாக
pulp அடுத்ததாக 5 ம் அதற்குஅடுத்து pub என்றும் வந்துள்ளது.
( நம்பருக்கு இணையான பொருத்தமான வார்த்தையை அமைத்து நமக்கு
தெரிவிக்கிறது )முதலில் நம் மொபைல் போனில் நம்பர் 70 மற்றும்
அடுத்து தொடர்ச்சியாக உள்ள ஆங்கில எழுத்துக்களை அழுத்தினால்
உங்கள் போன் நம்பர் வந்துவிடும் இதில் மேலும் பல விதமான
வார்த்தைகளுடன் உங்கள் போன் எண் உருவாக்கப்பட்டு உங்களுக்கு
தெரிவிக்கும். எப்படி வேண்டுமோ அப்படி உங்கள் நண்பரின் போன்
நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி.
1.
sunthar | 2:05 முப இல் ஜனவரி 3, 2010
Super Thanks
2.
தர்மா | 4:41 பிப இல் ஏப்ரல் 5, 2010
நன்றி அண்ணே. நல்லம் தான் ஆனால் இதைவிட தொலைபேசி இலக்கத்தை இலகுவில் ஞாபகம் வைத்திருக்க முடியும் இல்லையா ?
3.
winmani | 6:38 பிப இல் ஏப்ரல் 5, 2010
@ தர்மா ஆம் , இதுவும் ஞாபக சக்தியை சற்று அதிகரிக்கும் நண்பரே…