Archive for திசெம்பர், 2009

கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்

கூகுலின் எந்த ஒரு சேவையும் எடுத்துக் கொண்டாலும்
அது நமக்கு மிகவும் பயன்உள்ளதாகத் தான் இருக்கும்
அந்த வகையில் கூகுலின் மெகா தமிழ் டிக்ஸ்னரி பற்றி தான்
இந்த பதிவு. எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

படம் 1

http://www.google.com/dictionary இந்த இணையதளத்திற்கு சென்று
படம் 1 -ல் காட்டியபடி “English to <> Tamil ” என்பதை தேர்வு
செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை
படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள் கொடுக்கவும்.

படம் 2

உதாரணமாக நாம் ” great ” என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்
மொழிபெயர்ப்பு தேடியுள்ளோம்.நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை
மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்ப்டுத்தி ( படம் 3 )
நமக்கு கொடுக்கும்.

படம் 3

அடுத்ததாக எந்த வார்த்தையுடன் எல்லாம் இந்த வார்த்தையை
பயன்படுத்தலாம் என்று வரிசையாக (படம் 4 ) தெரியப்படுத்தும்.

படம் 4

அடுத்து நாம் கொடுத்த வார்த்தைக்கு இணையான ( Synonyms ) ஆங்கில
வார்த்தையையும் (படம் 5 )நமக்கு காட்டும்.

படம் 5

இதையெல்லாம் விட சிறப்பு வெப் டெபினிஸன் எப்படி எல்லாம் சேர்த்து
பயன்படுத்தலாம் (படம் 6 )என்று விளக்கமாகவும் கொடுக்கும்.

படம் 6

புத்தாண்டின் இந்த முதல் பதிவு கண்டிப்பாக நமக்கு மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.

திசெம்பர் 31, 2009 at 6:48 பிப 15 பின்னூட்டங்கள்

நண்பருக்கும் உறவினர்களுக்கும் புதுவருடவாழ்த்து எந்தவிளம்பரமும் இல்லாமல் அனுப்புங்கள்

நண்பருக்கும் உறவினர்க்ளுக்கும் புதுவருட வாழ்த்து செய்தி எந்த
விளம்பரமும் இல்லாமல் அனுப்புங்கள். எந்த இணையதளத்தில் இருந்து
வாழ்த்து செய்தி அனுப்பினாலும் அவர்களின் இணையதளமுகவரி
அதில் எங்காவது இருக்கும் நம் நண்பர்களுக்காகவே நாம் உருவாக்கிய
இரண்டு வாழ்த்து அட்டை படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்புங்கள்.

புத்தாண்டு வாழ்த்து அட்டை

புத்தாண்டு வாழ்த்து அட்டை

எந்த விளம்பரமும் இல்லை படத்தின் மேல் ரைட் கிளிக் செய்து
“Save Image ” மூலம் உங்கள் கணினியில் சேமித்து இமெயில் மூலம்
நண்பருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி புதுவருட வாழ்த்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.புதுவருடம் அனைவரின் வாழ்விலும்
மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கொண்டுவர இறைவனை
பிரார்த்திப்போம்.வின்மணியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

திசெம்பர் 30, 2009 at 6:11 பிப 8 பின்னூட்டங்கள்

புதுவருட வாழ்த்துக்களை புதுமையாக அனுப்பலாம்

நம் நண்பருக்கு புதுவருட வாழ்த்துக்களை கொஞ்சம்
வித்தியாசமாக அனுப்பலாம். நம் சொந்த குரலால் வாழ்த்து
செய்தி அனுப்புவது ஒரு வகை. நாம் விரும்பும் புகைப்படத்தை
அனுப்புவது மற்றொறு வகை. இதை எல்லாம் விட சிறப்பு நாம்
அனுப்பும் வாழ்த்து செய்தியை நம் வெப்கேமிரா மூலம் பதிந்தும்
பேசியும்  ஆன்லைன் மூலம் அனுப்பலாம். இந்த வீடியோ தகவலை
நம் கம்யூட்டரில் பதிந்தும்  வைத்துக்கொள்ளலாம். நண்பர்களின்
இமெயில் முகவரியை கொடுத்து அனைவருக்கும் ஒரே நேரத்தில்
அனுப்பலாம்.

வாழ்த்து செய்தி மட்டுமல்ல நாம் சில நேரங்களில் வாய்ஸ் மெயில்
அனுப்புவோம் இனி அதற்கு பதிலாக வீடியோ மெயில் அனுப்பலாம்.
எந்த மென்பொருளும் தேவையில்லை அனைத்தும் ஆன்லைன்-ல்
எப்படி என்று பார்ப்போம்.

படம் 1

http://www.sendshots.com இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல்
காட்டியபடி Record  மற்றும் webcam என்ற பட்டனை அழுத்தி நம்
வீடியோ மற்றும் ஆடியோவை சேமித்து Play என்ற பட்டனை அழுத்தி
சரிபார்த்துக் கொள்ளலாம். Save என்ற பட்டனை அழுத்தி நம் நண்பருக்கு
இமெயில் மூலம் அனுப்பலாம். புதுவருடத்தில் உங்கள் வாழ்த்து செய்தி
புதுமையாக இருக்கட்டும்.

திசெம்பர் 29, 2009 at 6:15 பிப 4 பின்னூட்டங்கள்

சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம்.

இண்டெர்நெட் பற்றிய அனைத்து தகவல்களும் அன்று முதல்
இன்று வரை என்னவெல்லாம் தொழில்நுட்ப மாற்றம்
வந்திருக்கிறது என்பதை பற்றிய ஒரு ஷோ சிங்கப்பூரில்
வரும் 2010 ஆண்டு ஏப்ரல் 21 தேதி மற்றும் 22 தேதி ஆகிய
இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கின்றது. இதற்கு முன்பதிவு
இலவசமாக நடை பெறுகிறது.

யார் எல்லாம் இதில் பங்கு பெறலாம் என்றால் கல்லூரி
மாணவர்கள் முதல் இண்டெர்நெட்டில் சம்பாதிக்க வேண்டும்
என்ற எண்ணம் உள்ள அனைவரும் இதில் பங்கு பெறலாம்.
அதுமட்டுமின்றி சிறுதொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்களின்
மேலதிகாரிகள் வரை அனைவரும் தங்கள் பொருள்களை
இணையதளத்தில் எவ்வாறு புதுமையாக விற்கலாம் என்பது பற்றிய
அனைத்து தகவல்களும் இடம் பெறபோகின்றது.

மாணவர்கள் தங்கள் திறமையை வெளிகாட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம்.
உங்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் இங்கு தெரியபடுத்தலாம்.
உங்களின் தொழில்நுட்பதிறமைகளையும் இங்கு காட்டலாம். பல
முன்னனி நிறுவனங்களின் மேலதிகாரிகளையும் நீங்கள் கொடுக்கும்
செமினார் மூலம் கவர்ந்து உங்கள் வேலையை உறுதிபடுத்தலாம்.

இணையதளமுகவரி :  http://theinternetshows.com/2010/Singapore/

இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் தகவல்களை
இலவசமாக பதிவு செய்து கொள்ளுங்கள். நம் தமிழர்கள்
பல பேர் இதில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும்
என்பதே நம் நோக்கம்.  வாழ்த்துக்கள்…

திசெம்பர் 28, 2009 at 6:16 பிப 4 பின்னூட்டங்கள்

அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்

கணிதம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கும் நமக்குத் தான்
இந்த பதிவு. பள்ளியில் இருந்து கல்லூரி வரை கணக்கு என்றாலே
ஒரு வித பயம் தான் ஆசிரியர்கள் கூட சில நேரங்களில் தடுமாறுவது
உண்டு இனி அந்த பிரச்சினை இல்லை. உங்கள் கணித கேள்விகளை
இந்த இணையதளத்தில் கொடுத்தால் உடனடியாக பதில் வரும்
அதுவும் சாதாரணமாக இல்லை. “ Step by Step” என்று சொல்லக்கூடிய
வழிமுறையுடன் அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை
அனைத்துக்கும் பதில் அளிக்கிறது. எந்த கணக்கு போட்டாலும்
விடையை சரியாக அளிக்கிறது.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இதில் சேரலாம். இலவசமாக
இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி உங்கள் கேள்விகளை
கேட்கலாம். கிராப் மட்டும் தான் எனக்கு வராது என்கிறீர்களா அதற்கும்
இவர்களிடம் பதில் உண்டு. ஒவ்வொரு வகையிலும் இலட்சத்திற்கும்
மேற்பட்ட மாதிரி கணக்கும் உள்ளது.

வீட்டுப்பாடம் என்று தனக்கு தெரியாத கணக்கை கொடுக்கும்
ஆசிரியர்களிடம் இருந்து கண்டிப்பாக அப்பாவி மாணவர்களை இது
காப்பாற்றும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும் தங்களுக்கு
எழும் சந்தேகங்களுக்கு இந்த இணையதளம் மிக உதவியாக இருக்கும்.
இணையதள முகவரி :  http://www.mathway.com

ஆசிரியர்களும் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இனி எளிதாக
விடை காணலாம். பயனுள்ளதாக இருந்தால் இந்த தகவலை நம்
நண்பருக்கும் தெரியபடுத்துங்கள்.

திசெம்பர் 27, 2009 at 6:12 பிப 3 பின்னூட்டங்கள்

ஹச்பிஒ ஐபோன் தொழில்நுட்பத்தில் மிரட்ட வருகிறது.

ஹச்பிஒ (HBO) தொலைக்காட்சியில் தனக்கென்று ஒரு பாதையை
வகுத்து வெற்றி நடைபோடும் இந்த வேலையில் புதிதாக ஐபோன்
ஓன்றை களம் இறக்க முடிவுசெய்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல
பல வசதிகள் அனைத்துமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

ஹச்பிஒ சேனலில் அடுத்து என்ன நிகழ்ச்சி என்பது முதல் அனைத்து
திரைப்படங்களின் டிரைலரையும் நொடியில் பார்க்கலாம். உங்களுக்கு
பிடித்த நிகழ்ச்சி என்ன என்பதை நாம் குறித்துவைத்தால்
ஞாபகப்படுத்துவதோடு அந்த நிகழ்ச்சியை உங்கள் நண்பருக்கும்
தெரியப்படுத்தலாம். அடுத்த வாரம் என்ன படம் என்பது முதல் இந்த
மாதம் என்ன படம் வரப்போகிறது என்பதை பற்றிய அனைத்து
விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு படத்தின் இயக்குனர்
யார் என்பது முதல் அந்த படத்தின் இசைஅமைப்பாளர் வரை
அனைத்து தகவலையும் பெறலாம். யாருக்கு தெரியும் நாளை
சன் ஐபோன் வந்தாலும்ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

திசெம்பர் 26, 2009 at 6:51 பிப பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க விளையாட்டில் இனி வெற்றி உங்கள் பக்கம்

அரசர்களின் விளையாட்டு என்று செல்லமாக அழைக்கப்படும்
சதுரங்கம் ( Chess ) விளையாட்டை பற்றி தான் இந்த பதிவு.


இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டில் ஒரு பக்கத்துக்கு
16 காய்கள் வீதம் 32 காய்கள் பயன்படுத்தபடுகின்றன இரண்டு
வெவ்வேறு நிறங்களில் காய்கள் இருக்கும். ( 8 x 8 ) கட்டங்களை
கொண்ட சதுரவடிவ அமைப்பில்தான் உள்ளது.புத்திசாலிதனமும்
தந்திரமும் தான் இந்த விளையாட்டின் வெற்றியை நமக்கு கொடுக்கும்.
தினமும் பயிற்ச்சி செய்து என்னதான் கண்டுபிடித்தாலும் நமக்கு
பல சந்தேகங்கள் எழும் அப்படிபட்ட சந்தேகங்களை எளிதாக நீக்கி
உங்களுக்கு பதில் வழங்க ஒரு இணையதளம் காத்திருக்கிறது.
எந்த பணமும் கொடுக்க வேண்டாம் உங்கள் கேள்விகளை இந்த
இணையளத்தில் பதிந்தால் உடனடியாக பதில் கிடைக்கும்.
இணையதள முகவரி : http://www.chessproblems.com
சதுரங்க விளையாட்டை புதிதாக தொடங்குபவருக்கு எழும்
சந்தேகம் முதல் அனுபவசாலிக்கு எழும் சந்தேகம் வரை
அனைத்துக்கும் இங்கு விடை உண்டு. ஏற்கனவே சதுரங்கத்தில்
உலக சாம்பியன் தமிழகத்தில் உள்ளது நமக்கு பெருமை தான்.


2010 -ல் அதிக அளவில் சதுரங்கத்திற்காகன போட்டியில் தமிழர்கள்
பல பேர் வெற்றி பெற வேண்டும் என்பதே நம் நோக்கம்.
( சதுரங்க விளையாட்டில் ஆர்வம் உள்ள நம் நண்பருக்கு இந்த
தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் )

திசெம்பர் 25, 2009 at 6:17 பிப 2 பின்னூட்டங்கள்

யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை

நாம் பிராட்பேண்ட் இண்டெர்நெட் வைத்திருந்தாலும்
பல நேரங்களில் யூடியூப் வீடியோ தொங்கும் வேகமாக
தெரியாது. இந்த யூடியுப் விரைவாக செயல்படுத்துவது
எப்படி என்று பார்ப்போம். எந்த மென்பொருளும் தேவையில்லை
சில நிமிடங்களில் நாம் யூடியுப் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

படம் 1

http://www.youtube.com/feather_beta இந்த இணையதளத்திற்கு
செல்லவும். படம் 1- ல் காட்டியபடி Join the “Feather” Beta என்பதை
க்ளிக் செய்யவும். அதன் பின் சில நிமிடங்களில் இது பயன்பாட்டிற்கு
வந்து விடும்.இப்போது நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை
பார்க்கவும் வேகமாகத் தெரியும். இது எப்படி செயல்படுகிறது
என்றால் ஒரிஸினல் வீடியோவின் குவாலிட்டியை கொஞ்சம்
குறைத்து நமக்கு வேகமாக காட்டும். குவாலிட்டியில் பெரிதாக
வித்தியாசம் ஒன்றும் தெரியாது. இல்லை எனக்கு குவாலிட்டி
தான் முக்கியம் என்றால் படம் 1-ல் காட்டியபடி மேலே உள்ள
இணையதளத்திற்கு சென்று Leave the “Feather” Beta என்பதை
தேர்வுசெய்யவும். பழையபடி குவாலிட்டி உள்ளதாக மாறிவிடும்.
நமக்கு எப்போது வேண்டுமென்றாலும் யூடியுப் வேகத்தை
அதிகபடுத்தலாம்.

திசெம்பர் 24, 2009 at 6:21 பிப 13 பின்னூட்டங்கள்

வெளிநாட்டில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு யார் துனையும் இல்லாமல் செல்லலாம்.

நண்பர் அல்லது உறவினர் வெளிநாட்டில் இருந்தால் அவர்களை
பார்க்க செல்லும் போது யாராவது விமான நிலையத்திற்க்கு
வந்து நம்மை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இனி
அது தேவையில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் அவர்களின்
வீட்டை எளிதாக கண்டுபிடிக்கலாம்.எப்படி என்று பார்ப்போம்
மேப் மற்றும் ப்ரொஷக்டர் இணைந்த கருவி ஒன்று புதிதாக
வரவிருக்கிறது.

பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் பென் டிரைவ்
போன்று இருக்கும். இதில் நாம் எந்த நாட்டிற்கு எந்த இடத்திற்கு
போகவேண்டும் என்பதை இதில் இருக்கும் மேப்பில் சேமித்து
வைத்து நாம் எந்த இடத்திற்கும் செல்லலாம் அதுவே வழிகாட்டும்
ப்ரொஷக்டர் மேப் -ஐ பெரிதுபடுத்திக்காட்டும். போகும் வழியை
அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளலாம் எற்கனவே நாம் குறித்து வைத்த
இடத்திற்கு செல்ல வேண்டிய பாதையை அம்புக் குறியிட்டு காட்டும்.
இதன் பின்னனியை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் GPS என்று
சொல்லக்கூடிய குளோபல் பொஸிசனிங் சிஸ்டம்
(Global Positioning System) மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்
என்பதை துல்லியமாக கண்டுபிடித்து செயல்படுகிறது.

ப்ரொஷக்டர் மூலம் செல்ல வேண்டிய இடத்தின் மேப்-ஐ தரையில்,
சுவற்றில் அல்லது நம் கையில் எங்கு வேண்டுமானாலும்
ப்ரொஷக்ட் செய்து பார்க்கலாம்.அது மட்டுமின்றி மேப் -ஐ
பெரிதாகவோ சிறியதாகவோ எப்படி வேண்டுமோ அப்படி
பார்க்கலாம்.இது எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய
வீடியோவையும் இத்துடன் இனைத்துள்ளோம்.

எந்த வயர் இனைப்பும் தேவையில்லை எக்ஸ்டெண்டட் புளுடுத்
தொழில்நுட்பம் மூலம் நேரடியாக தரவிரக்கி நமக்கு கான்பிக்கிறது.

திசெம்பர் 23, 2009 at 6:20 பிப 4 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: