Archive for ஜனவரி 23, 2010
விண்வெளியில் இருந்து நேரடியாக முதல் டிவிட் புதிய அதிசயம்.
அமெரிக்கவின் நாசா வான்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து
சமீபத்தில் வான்வெளிக்கு அனுப்பிய ISS சிறப்பு மென்பொருளின்
துணை கொண்டு பூமிக்கு நேரடியாக முதல் டிவிட் வந்துள்ளது.
இதைப் பற்றி தான் இந்த பதிவு.
இண்டெர்நெட்டை ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று
பார்த்திருப்போம் ஆனால் சற்று வித்தியாசமாக பல மில்லியன்
மைல் தொலைவில் இருக்கும் விண்வெளியில் இண்டெர்நெட்-ஐ
பயன்படுத்தியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள். சில மாதங்களுக்கு
முன்னர் அல்டிமெட் இண்டெர்நெட் கனெக்சன் ( Ultimate
internet connection ) என்ற வயர்லஸ் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி ISS என்ற மென்பொருளின் துணை கொண்டு
பர்சனல் இண்டெர்நெட் அக்சஸ் என்பதை வான்வெளியில்
பயன்படுத்தியுள்ளனர். சோதனைக்காக முதலில் ஒரு டிவிட்டை
வான்வெளியில் இருந்து விஞ்ஞானி T.J.Creamer என்பவர்
பூமிக்கு முதல் டிவிட்டை அனுப்பியுள்ளார்.
www என்றால் ” World wide web ” என்பதன் உண்மையான
அர்த்தம் இன்று தான் உண்மையாகியுள்ளது. அடுத்தடுத்து பல
கேள்விகள் எந்த Ip Addres எடுத்து கொள்கிறது .இணைப்பு
முழுமையாக கிடைக்கிறதா என்ற அனைத்து கேள்விகளுக்கும்
விரைவில் நாசாவிலிருந்து பதில் வெளிவரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.எதற்காக விண்வெளிக்கு சென்று
டிவிட்டரை பயன்படுத்தி அதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை
நாசா கொடுக்கின்றதே என்று பார்த்தால் இதன் பின்னனியில்
இந்த சோதனைக்காக நாசா-வுக்கு டிவிட்டர் சில மில்லியன்
டாலர் பணம் கொடுத்துஇருக்கலாம் இதற்காக தான் முதலில்
வான்வெளியில் முதலில் டிவிட்டரை பயன்படுத்தினார்களோ.
இதோடு T.J. Creamer என்பவரின் டிவிட்டர் முகவரியையும்
கொடுத்துள்ளோம்.
டிவிட்டர் முகவரி http://twitter.com/Astro_TJ
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் பாப்அப் எல்லா பிரவுஷரிலும் தெரிய பயன்படுத்த வெண்டிய நிரல் jQuery('a.popup').live('click', function(){ newwindow=window.open($(this).attr('href'),'', 'height=200,width=150'); if (window.focus) {newwindow.focus()} return false; }); சில பிரவுஷர் பாப்அப் தானாகவே தடுக்கப்பட்டுவிடும் அவ்வாறு தடுக்கப்படாமல் எல்லா பிரவுஷரிலும் தெரிய இந்த நிரலை பயன்படுத்தவும்.
இன்று ஜனவரி 24பெயர் : ஓமி யெகாங்கிர் பாபா, மறைந்த தேதி : ஜனவரி 24, 1966 இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கியப் பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற ஜெர்மானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.ஓமி பாபா இந்திய அணுக்கருவியலின் தந்தை.