Archive for ஜனவரி 11, 2010
முப்பரிமானத்தில் ஒபாமா தொழில் நுட்பத்தின் சாதனை
தொழில்நுட்பத்தில் தினமும் ஒரு சாதனை நடந்து கொண்டுதான்
இருக்கிறது அந்த வகையில் இன்று முப்பரிமான (3D) மாடலில்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 3D மாடல்-ஐ தத்ருபமாக
உருவாக்கியுள்ளனர். இதில் என்ன புதுமை இருக்கிறது என்றால்
ஒரு 3D வடிவத்தை நாம் பார்க்கும் போது அதன் ரியாலிட்டி
நமக்கு பல நேரங்களில் தெரிவதில்லை ஆனால் அது போல்
இல்லாமல் கிராபிக்ஸ் வல்லுனர்கள் ஒபாமாவின் முழுமையான
3D வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.
அதில் அவர் நடப்பதில் இருந்து பேட்டி கொடுப்பது வரை
அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் பிரமிப்பாக உருவாக்கியுள்ளனர்.
உதாரணமாக ஒரு பேட்டி அளிக்கும் போது அவரின் முகத்தில்
ஏற்படும் சிறு சிறு மாற்றங்களையும் தெளிவாக பார்க்க முடிகிறது.
சாதாரணமாக ஒரு 3D நிகழ்ச்சி உருவாக்க வேண்டும் என்றால்
பல மணி நேரங்கள் செலவாகும் ஆனால் இதன் சிறப்பு சில மணி
நேரத்தில் 30 செகண்ட் ஒடக் கூடிய இந்த நிகழ்ச்சியை உருவாக்கி
உள்ளனர் இதை பார்த்த அனைவருக்கும் உண்மையிலே இதில்
பேசுவது ஒபாமாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும் அளவிற்கு
நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர். இதன் 3D சிறப்பு படங்களையும்
இத்துடன் இணைத்துள்ளோம். இதன் முழுவிபரங்களுக்கு இந்த முகவரியையை சொடுக்கவும்
http://montalvomachado.com.br/blog/?p=2572
இன்று ஜனவரி 12பெயர் : சுவாமி விவேகானந்தர், பிறந்ததேதி : ஜனவரி 12, 1863 இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர், நம் இந்திய தேசத்திற்காகவே வாழ்ந்து காட்டியவர். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.