Archive for ஜனவரி 5, 2010
முழு சூரியகிரகணம் – திருச்செந்தூரை அன்னாந்து பார்க்க போகுது அமெரிக்கா
இந்த 2010 ஆம் ஆண்டு குரு பகவானுக்குரிய ஆண்டு என்று ஜோதிடர்
பலர் கூறி இதற்கு நீங்கள் குரு பகவானின் ஸ்தலமான தமிழ்நாட்டில்
திருச்செந்தூருக்கு சென்று குருவை வழிபட்டால் வாழ்வில் பல
நலங்களை பெறலாம் என்று கூறினர் இந்த காலத்திலும் இவர்கள்
இப்படி நம்பிக்கொண்டு இருக்கிறார்களே என்று நினைத்த பலருக்கும்
ஒரு பெரிய அதிசியம் வரும் 15-1-2010 -ம் தேதி வெள்ளிக்கிழமை
நடக்க இருக்கிறது என்னவென்றால் குருவை தரிசிக்க
திருச்செந்தூருக்கு சூரியபகவான் வருகிறார் ஆம் அன்று தான் முழு
சூரியகிரகணம்.இந்த முழு சூரியகிரகணம் நண்பகல் 12.18 PM முதல்
ஆரம்பித்து 3.32 PM -ல் முடியும்.ஒரே நேர்கோட்டில் சரியாக 11 நிமிடம்
8 விநாடி முழுமையாக நீடிக்க போகின்றது. மற்ற சூரியகிரகணம் போல்
இதை விட்டு விட முடியாது ஏனென்றால் நாம் பார்க்கும் இந்த சூரிய
கிரகணத்தை நமக்கு பின்னால் வரும் ஏழு தலைமுறையினர் கூட
பார்க்க முடியாது ஏனென்றால் அடுத்த முழு சூரியகிரகணம் 3043
ஆண்டு இன்னும் 1033 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

படங்கள் நன்றி நாசா
இந்த முழு சூரியகிரகணத்தை இந்தியாவில் தமிழ்நாட்டில் திருச்செந்தூர்,
குலசேகரபட்டிணம், நாகர்கோவில், தூத்துக்குடி,பாளையம்கோட்டை
மற்றும் குஜராத்திலும் காணலாம். இதில் திருச்செந்தூர்-ல் மிகத்
தெளிவாக தெரியலாம் என்று அமெரிக்காவின் நாசா வான்வெளி
ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.வின்வெளி ஆராய்ச்சி செய்யும்
பல விஞ்ஞானிகளின் பார்வை இப்போது திருச்செந்தூரை நோக்கிதான்
உள்ளது. இந்த முழு சூரியகிரகணத்தை பாதுகாப்பான கண்ணாடி மூலம்
தான் பார்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.