Archive for ஜனவரி 30, 2010
ஒபாமா அறிவித்த சலுகையால் இந்தியாவின் ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா
அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா தனது ஒராண்டு நிறைவு நிகழ்ச்சியில்
அமெரிக்காவில் இருக்கும் ஐடி மற்றும் தகவல் தொழில்நுட்ப
நிறுவன்ங்களுக்கு விதிக்கப்படும் வரிச்சலுகை இனி ரத்து செய்யப்படும்
என்று அறிவித்துள்ளார்.இதனால் இந்தியாவின் ஐடி மற்றும் பிபீஒ
நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை பற்றி பார்ப்போம்.
அமெரிக்காவில் சமீப காலமாகவே வங்கிகளின் மூடல் தொடர்ந்து
கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சென்ற ஆண்டு கணக்கின்படி
அதிகமாகவே குறைந்துள்ளது இதை சரி கட்டும் வகையில் தான்
ஒபாமாவின் அறிக்கை வெளிவந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள
நிறுவனங்கள் பெரும்பாண்மையான பணிகளை இந்தியாவில் உள்ள
சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை
அனைத்துக்கும் கொடுத்து தான் வேலை நடந்தது. கடந்த 2008-2009ம்
ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் பங்கு 5.8
சதவீதமாக அதிகரித்தது நமக்கு தெரிந்ததுதான். ஆங்கில புலமை,
வேலையில் திறமை மட்டுமல்ல இந்தியாவில் தொழில்நுட்ப துறைக்கு
அளிக்கும் வரிச்சலுகையால் தான் இந்தியா தொழில்நுட்ப துறையில்
இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்ற நோக்கத்தில் தான்
அதிபரின் இந்த உரையில் இனி சிறு நிறுவன்ங்கள் தொடங்க அரசு
பண உதவி செய்யும் வரிச்சலுகை ரத்து என்று அதிரடியான
முடிவுகளை எடுத்துள்ளது.இதற்காக 3000 கோடி அமெரிக்க
டாலரையும் ஒதுக்கியுள்ளது.இதனால் இனி அமெரிக்கவில் ஏற்கனவே
வேலை இழந்த 70 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்காவிட்டாலும்
அதில் பாதி பேருக்காவது வேலை கிடைக்க இந்த அறிவிப்பு உதவும்.
இந்தியாவில் இனி ஐடி மற்றும் பிபீஒ நிறுவனங்களுக்கு ஏற்கனவே
கொடுத்த பிராஜெக்ட் தவிர புதியது சிலபிராஜெக்ட் தான் உள்ளது.
அமெரிக்காவில் வரிச்சலுகை ரத்து செய்துவிட்டால் அவர்கள் தங்கள்
வேலைகளை அங்கேயே பார்த்துக்கொள்வார்கள் நமக்கு இனி ஐடி
மற்றும் பிபீஒ நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெருமளவு குறையும்
என்பது தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்து.இது ஒரு பக்கம்
இருந்தாலும் சில அமெரிக்க நிறுவனங்கள் தொழில்தொடங்க
பாதுகாப்பான நாடு என்று இந்தியாவை தான் தேர்ந்தெடுத்துள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் Flash விடியோவை சேர்ப்பதற்கான எளிய HTML நிரல். <object type="application/x-shockwave-flash" width="400" height="220" wmode="transparent" data="flvplayer.swf? file=movies/eg.flv"> <param name="movie" value="flvplayer.swf?file=movies/ eg.flv"/> <param name="wmode" value="transparent" /> </object>
இன்று ஜனவரி 31பெயர் : எம்.பக்தவத்சலம், மறைந்ததேதி : ஜனவரி 31, 1987 தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர்.1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். நேர்மையின் சிகரம். இந்திய தேசத்திற்காக பாடுபட்ட உங்களை மரியாதையுடன் வணங்குகிறோம்.