குழந்தைகளுக்கான பாதுகாப்பான பிரத்யேக இணைய உலாவி ( Web Browser ).

ஜனவரி 14, 2012 at 10:36 முப 2 பின்னூட்டங்கள்

இணையத்தில் உலா வருவதற்கு நாம் பயன்படுத்தும் இணைய உலாவிகளை போல பாதுகாப்பாக குழந்தைகள் இணையத்தில் உலாவருவதற்கு பிரத்யேகமான ஒரு இணைய உலாவி வந்துந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

குழந்தைகள் இணைய இணைப்பு பயன்படுத்துவதாக இருந்தால் பல நேரங்களில் நாம் அருகிலே இருந்து சரியான தளங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லோரிடமும் இருக்கும், இதை தடுக்க பல மென்பொருள்கள் வந்தாலும் சில நாட்களில் பல தளங்கள் இந்த தடைகளை எல்லாம் தாண்டி தெரியத்தான் செய்கிறது இதற்கு ஒரு முழுமையான தீர்வு அளிக்கும் நோக்கில் புதிதாக ஒரு இணைய உலாவி வந்துள்ளது.

தரவிரக்க முகவரி : http://kidoz.net

இத்தளத்திற்கு சென்று Start here என்ற பொத்தானை சொடுக்கி Adobe Air நிறுவிய பின்னர் இந்த அப்ளிகேசன் திறந்த பின் Install என்ற பொத்தானை சொடுக்கி நிறுவ ஆரம்பிக்க வேண்டியது தான்அடுத்து வரும் திரையில் Parent பெயர் இமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல், குழந்தையின் செல்லபெயர் கொடுத்து உள்நுழைய வேண்டியது தான். முழு திரையில் தெரியும் இந்த உலாவியைப்பயன்படுத்தி குழந்தைகள் இனி இண்டெர்நெட்-ல் உலாவ ஆரம்பிக்கலாம். குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய வீடியோ,விளையாட்டுகள் மற்றும் பாதுகாப்பான இணைய தேடல் என அனைத்தும் செய்யலாம் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த உலாவி மிகவும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்.

தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் – முதலமைச்சர் பார்வைக்கு…

பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்பு தேடல் உதவி.

பாதிக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட் கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files)

 
வின்மணி சிந்தனை
பிற உயிர்களிடத்தில் நம்மை அறியாமல் வரும்
அன்பு இறைவனை நம் அருகில் வர வைக்கும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to pacify    சாந்தப்படுத்து , தேற்று , ஆறுதல் அளி
to pack    பொதிகட்டு, அடை , தடு , அடுக்கு
to paint    களிம்பு பூசு , பூச்சு பூசு , மைதீட்டு
to Palpitationmed.    சீரற்ற இதய துடிப்பு.
to parallel    இணையான , ஒரே போக்கான
to pare    சீவு , உரி
to partition  பிரித்து வேறாக்கு , ஒதுக்கீடு செய்
to pass  கடந்து செல் , வெற்றி அடை
to pass over கடந்து செல்
 
இன்று  ஜனவரி 14

பெயர் : நாராயண் கார்த்திகேயன்,
பிறந்ததேதி : ஜனவரி 14 , 1977
ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில்
பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான
இவர் உலக மோட்டர் பந்தயங்களிலேயே 
முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 
போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே
இந்தியர் ஆவார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ
விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

போட்டோஷாப் ஒவ்வொரு டூலையும் எப்படி பயன்படுத்த வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ளதளம். நம் கணினிக்கு அற்புதமான கண்ணை கவரும் அழகான வால்பேப்பர் (Wallpaper Background).

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. sivakumar  |  12:00 பிப இல் ஜனவரி 17, 2012

    today january 17th. But in ur post, it shows january 14th. check it out… Thanks.

    மறுமொழி
  • 2. தனபாலன்  |  6:08 பிப இல் ஜனவரி 17, 2012

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, பயனுள்ள இனிய இணைய உலாவி பகிர்ந்தமைக்கு நன்றி!

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...