உங்கள் நேரம் எப்படி செலவாகின்றது துல்லியமாக கண்டுபிடிக்கலாம்

பிப்ரவரி 8, 2011 at 8:44 முப 6 பின்னூட்டங்கள்

Time Management பற்றி தினமும் ஒரு புத்தகம் வெளி வந்து
கொண்டிருந்தாலும் இதை நடைமுறையில் கடைபிடிப்பது
நம்மால் தொடர்ச்சியாக செய்யமுடியாத ஒன்றாக இருந்து
வருகிறது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது
இந்ததளத்தில் இருந்து நம் நேரம் எப்படி செலவாகிறது ,
நம் நேரத்தை பயனுள்ள வகையில் எப்படி பயன்படுத்தாலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

எந்த ஒரு செயலையும் பேப்பரில் எழுதி வைத்து செய்தால்
நடைமுறை படுத்துவது எளிது என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம்,
அதே போல் தான் நேரமேலாண்மை என்பதை ஆன்லைன் மூலம்
நாம் காலையில் எழுவதில் இருந்து சாப்பிடும் நேரம் முதல்
அனைத்தையும் இணையத்தில் சேமித்து வைத்து எதற்கு நமக்கு
அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை துல்லியமாக
அறியலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://colorhat.com/welcome

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Sign up என்ற
பொத்தானை சொடுக்கி நமக்கென்று ஒரு இலவச பயனாளர்
கணக்கு உருவாக்கி நாம் செலவழிக்கும் நேரத்தை கொடுக்கலாம்.
காரணமே இல்லாமல் எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு
செலவாகிறது என்பதை நாம் கிராப்-ல் பார்க்கும் போது நமக்கு
நேரத்தின் முக்கியத்துவம் தெரியும்.குழந்தைகள் முதல் பிஸினஸ்
செய்யும் நண்பர்கள் வரை அனைவரும் இது போன்ற தளத்தின்
மூலம் தங்களது நேரம் எப்படி செலவாகிறது என்பதையும்
எப்படி நேரத்தை பயன்படுத்திக்கொள்வது என்பதைப்பற்றிய
ஒரு தெளிவான அனுகுமுறை கிடைக்கும். கண்டிப்பாக
இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
அடுத்தவர் மனதார கொடுக்கும் சிறிய அளவு பணம்
கூட நமக்கு போதுமானதாக இருக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பிக்பென் கோபுரம் அமைந்துள்ள இடம் எது ? 
2.ராஷ்டிரபதி பவன் அமைந்துள்ள இடம் எது ? 
3.டோக்கியோ டவர் அமைந்துள்ள இடம் எது ? 
4.விக்டோரியா நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடம் எது ? 
5.தக்கவாசல் பாலம் அமைந்துள்ள இடம் எது ?  
6.சித்தன்னவாசல் கோயில் அமைந்துள்ள இடம் எது ? 
7.ஓபேரா அரங்கம் அமைந்துள்ள இடம் எது ? 
8.செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் எது ? 
9.சிண்டன் தேவாலயம் அமைந்துள்ள இடம் எது ? 
10.ஆலம்பரா வளாகம் அமைந்துள்ள இடம் எது ? 
பதில்கள்:
1.லண்டன், 2.புதுடெல்லி,3.ஜப்பான்,4.கொல்கத்தா, 
5.அமெரிக்கா, 6.புதுக்கோட்டை, 7.சிட்னி, 8.சென்னை,
9.வாட்டிகன்,10.ஸ்பெயின்.
இன்று பிப்ரவரி 8
பெயர் :சாகீர் உசேன்,
பிறந்த தேதி : பிப்ரவரி 8, 1897
இவர் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்
தலைவர் ஆவார்.1967இல் இருந்து 1969-ல்
இருந்து அவர் இறக்கும் வரை அப்பதவியை
வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக்
குடியரசுத் தலைவராகவும் இருந்தார். சிறந்த மனிதர்
மதத்தை விரும்பாத மனிதநேயமுள்ளவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறியலாம். ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சுகுமாரன்.சீ.அ,  |  9:08 முப இல் பிப்ரவரி 20, 2011

    மிகப்பயனுள்ள தகவல்களைத்தருகிறீகள். மிக்க நன்றி.

    மறுமொழி
    • 2. winmani  |  9:09 முப இல் பிப்ரவரி 20, 2011

      @ சுகுமாரன்.சீ.அ
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. geetha  |  12:00 முப இல் பிப்ரவரி 21, 2011

    நன்றி.

    மறுமொழி
  • 5. regeneracja sterownika PSG5  |  4:31 பிப இல் பிப்ரவரி 28, 2011

    Nice post. I learn one thing tougher on completely different blogs everyday. It will at all times be stimulating to read content material from different writers and observe a bit one thing from their store. I’d desire to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll offer you a hyperlink on your net blog. Thanks for sharing.

    மறுமொழி
    • 6. winmani  |  5:50 பிப இல் பிப்ரவரி 28, 2011

      @ regeneracja sterownika PSG5
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...