எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறியலாம்.
பிப்ரவரி 7, 2011 at 12:46 பிப 8 பின்னூட்டங்கள்
உலகின் இருக்கும் எந்த நாட்டிற்கு நாம் செல்வதாக இருந்தாலும்
உடனடியாக நாம் கேட்பது Cost Of Living அதாவது இந்த நாட்டில்
இந்த நகரத்தில் வாழ நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்
என்பது தான் இந்த தகவலை நாம் அந்த நாட்டில் இருக்கும் நபரிடம்
கேட்டு தான் தெரிந்து கொள்வோம் ஆனால் இனி யாருடைய
உதவியும் இல்லாமல் துல்லியமாக எவ்வளவு பணம் செலவாகும்
என்று தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.

படம் 1
இணையதள முகவரி : http://www.numbeo.com/common/
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டிற்கு
செல்ல வேண்டுமோ அந்த நாட்டையும் எந்த நகரத்திற்கு செல்ல
வேண்டுமோ அதையும் மேப்பில் தேர்ந்தெடுத்துக்கொண்டால்
மட்டும் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த
நகரத்தில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் என்று துல்லியமாக
கூறுகின்றனர். இருக்கும் இடத்தில் இருந்து சாப்பிடும் சாப்பாடு
வரை அத்தனைக்கும் ஆகும் செலவை சரியாக கூறுகின்றனர்,
உலகின் இருக்கும் 1249 முக்கிய நகரங்களின் Cost Of Living -ஐ
கூறுகின்றனர் இதில் இந்தியாவில் இருக்கும் சென்னையும்
வந்துள்ளது கூடுதல் சிறப்பு. அத்துடன் நாம் எந்த நாட்டு நாணய
மதிப்பில் தெரிந்து கொள்ளவேண்டுமோ அந்த நாட்டு மதிப்பில்
தெரிந்து கொள்ளலாம். வேலை தேடி வெளிநாடு செல்பவர்களுக்கும்
சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை செய்யும் வேலைக்கு அடுத்தவரிடம் லஞ்சம் பெறுவதை விட பிச்சை எடுத்து வாழ்வது மேல்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.கங்கை நதி கலக்கும் இடம் எது ? 2.சிந்துநதி கலக்கும் இடம் எது ? 3.ரைன் நதி கலக்கும் இடம் எது? 4.டினிஸர் நதி கலக்கும் இடம் எது ? 5.ஜம்பனி நதி கலக்கும் இடம் எது ? 6.சபைன் நதி கலக்கும் இடம் எது ? 7.கொலம்பியா நதி கலக்கும் இடம் எது ? 8.ஜபுரா நதி கலக்கும் இடம் எது ? 9.எப்ரோ நதி கலக்கும் இடம் எது ? 10.பிரம்மபுத்திரா நதி கலக்கும் இடம் எது ? பதில்கள்: 1.வங்காளவிரிகுடா, 2.அரபுக்கடல்,3. வடகடல்,4.கருங்கடல், 5.இந்தியப்பெருங்கடல், 6.மெக்ஸிகோ வளைகுடா, 7.பசிபிக் பெருங்கடல், 8.அமேசான், 9.மத்திய தரைக்கடல், 10.வங்காளவிரிகுடா.
இன்று பிப்ரவரி 7பெயர் : தேவநேயப் பாவாணர், மறைந்த தேதி : பிப்ரவரி 7, 1902 மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுனரும் ஆவார்.40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிகஅரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி,சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.இவரை கவுரவப்படுத்த இந்தியா தேவநேயப் பாவாணரின் படத்துடன் அஞ்சல்தலை வெளீயிட்டுள்ளது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறியலாம்..
1.
♠புதுவை சிவா♠ | 3:56 பிப இல் பிப்ரவரி 19, 2011
thanks winmani
2.
winmani | 5:40 பிப இல் பிப்ரவரி 19, 2011
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
3.
camilus | 5:23 பிப இல் பிப்ரவரி 19, 2011
i like it this page.
daily i read this news.
v.good information.
4.
winmani | 5:42 பிப இல் பிப்ரவரி 19, 2011
@ camilus
மிக்க நன்றி
5.
ramesh | 7:13 பிப இல் பிப்ரவரி 22, 2011
மிக பயனுள்ள தகவல் நன்றி !
6.
winmani | 8:46 முப இல் பிப்ரவரி 23, 2011
@ ramesh
மிக்க நன்றி
7.
regeneracja sterownika ISUZU | 4:31 பிப இல் பிப்ரவரி 28, 2011
This website online is mostly a walk-through for all of the data you wished about this and didn’t know who to ask. Glimpse here, and you’ll positively uncover it.
8.
winmani | 5:51 பிப இல் பிப்ரவரி 28, 2011
@ regeneracja sterownika ISUZU
மிக்க நன்றி