ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.

பிப்ரவரி 9, 2011 at 12:02 பிப 5 பின்னூட்டங்கள்

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து
கொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும்  இருக்கும் இதற்காக
Photoshop போன்ற எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
சில நிமிடங்களில் புகைப்படங்களை அழகாக Cut செய்யலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வேகமான சுழ்நிலையில் புதிதாக ஒரு மென்பொருளை படிப்பதற்கு
பெரும்பாலும் நேரம் கிடைப்பதில்லை, புகைப்படங்களை சிலர்
போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு அழகாக வடிவமைத்து
வைத்திருப்பார்கள், அவர்களை விட நம்மால் நம் புகைப்படங்களை
அழகாக Cut செய்து நம் டிவிட்டர் முதல் பேஸ்புக் வரை அனைத்திலும்
வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.cutmypic.com/

படம் 2

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Choose என்ற
பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும்  Cut செய்ய வேண்டிய
புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Go என்ற பொத்தானை அழுத்த
வேண்டும் அடுத்து வரும் திரையில் (படம் 2) நம் புகைப்படத்தில்
எந்த பகுதிவரை வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Round the Corners என்பதில் எந்த Style-ல் cut செய்ய
வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிழல்
வேண்டும் என்றால் Drop Shadow என்பதை சொடுக்கி
தேர்ந்தெடுத்துக்கொண்டு Preview என்ற பொத்தானைஅழுத்தி
Output படத்தின் Preview பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் சரியாக
தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்ததும் Done என்ற பொத்தானை
சொடுக்கி படத்தை நம் கணினியில் சேமித்துக்கொள்ளவும்.
கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மவுனம் தான் உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதத்தை
பயன்படுத்தினால் வெற்றி எப்போதும் நமக்கு தான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சபினா விமானதளம் எந்த நாட்டில் உள்ளது ? 
2.ஸ்விஸ் ஏர் விமானதளம் எந்த நாட்டில் உள்ளது ? 
3.க்வாண்டாஸ் எம்பயர் ஏர்வேஸ் விமானதளம் எந்த நாட்டில்
  உள்ளது?
4.அலிதாலியா விமானதளம் எந்த நாட்டில் உள்ளது ?
5.ஃபின் ஏர் விமானதளம் எந்த நாட்டில் உள்ளது ?  
6.ஏரோபிளாட் விமானதளம் எந்த நாட்டில் உள்ளது ?
7.டிரான்ஸ்வேல்ட் ஏர்லைன்ஸ் விமானதளம் எந்த நாட்டில்
  உள்ளது? 
8.பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானதளம் எந்த நாட்டில் உள்ளது ?
9.ஏர்சிலோன் விமானதளம் எந்த நாட்டில் உள்ளது ?
10.கருடா ஏர்லைன்ஸ் விமானதளம் எந்த நாட்டில் உள்ளது ?
பதில்கள்:
1.பெல்ஜீயம், 2.ஸ்விட்சர்லாந்து,3.ஆஸ்திரேலியா,4.இத்தாலி,
5.பின்லாந்து,6.ரஷ்யா,7.அமெரிக்கா,8.இங்கிலாந்து,9.இலங்கை,
10.இந்தோனேஷியா.
இன்று பிப்ரவரி 9
பெயர் : ஜே.எம்.கோட்ஸி,
பிறந்த தேதி : பிப்ரவரி 9, 1940
இவர் ஒரு தென்னாபிரிக்க எழுத்தாளர் ஆவார்.
இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல்
பரிசு வழங்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல்
பரிசு பெற்ற நான்காவது கறுப்பின எழுத்தாளர்.
கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் நேரம் எப்படி செலவாகின்றது துல்லியமாக கண்டுபிடிக்கலாம் எக்சசைஸ் செய்து உடலை வலிமையாக்கலாம் வீடியோவுடன் சொல்லும் தளம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சுகுமாரன்.சீ.அ,  |  8:02 பிப இல் பிப்ரவரி 21, 2011

    வின்மணி இடுகைகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது. தொடருங்கள்.

    மறுமொழி
    • 2. winmani  |  10:17 பிப இல் பிப்ரவரி 21, 2011

      @ சுகுமாரன்.சீ.அ
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. nilaamathy  |  5:12 முப இல் மார்ச் 1, 2011

    மிக்வும் பயனுள்ள தளம். நன்றி

    மறுமொழி
  • 4. Amirthalingam Nagarajan  |  2:55 பிப இல் ஓகஸ்ட் 24, 2011

    Cutmypic.com is highly useful helpful, time saver simple and easy to handle to all. such information must be shared.

    மறுமொழி
    • 5. winmani  |  3:55 பிப இல் ஓகஸ்ட் 24, 2011

      @ Amirthalingam Nagarajan
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: