Archive for பிப்ரவரி 8, 2011
உங்கள் நேரம் எப்படி செலவாகின்றது துல்லியமாக கண்டுபிடிக்கலாம்
Time Management பற்றி தினமும் ஒரு புத்தகம் வெளி வந்து
கொண்டிருந்தாலும் இதை நடைமுறையில் கடைபிடிப்பது
நம்மால் தொடர்ச்சியாக செய்யமுடியாத ஒன்றாக இருந்து
வருகிறது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது
இந்ததளத்தில் இருந்து நம் நேரம் எப்படி செலவாகிறது ,
நம் நேரத்தை பயனுள்ள வகையில் எப்படி பயன்படுத்தாலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
எந்த ஒரு செயலையும் பேப்பரில் எழுதி வைத்து செய்தால்
நடைமுறை படுத்துவது எளிது என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம்,
அதே போல் தான் நேரமேலாண்மை என்பதை ஆன்லைன் மூலம்
நாம் காலையில் எழுவதில் இருந்து சாப்பிடும் நேரம் முதல்
அனைத்தையும் இணையத்தில் சேமித்து வைத்து எதற்கு நமக்கு
அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை துல்லியமாக
அறியலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
Continue Reading பிப்ரவரி 8, 2011 at 8:44 முப 6 பின்னூட்டங்கள்