தினமும் ஒரு நவீன ஆங்கில வார்த்தையை எளிதாக கற்கலாம்.

ஓகஸ்ட் 27, 2010 at 6:16 பிப 8 பின்னூட்டங்கள்

தினமும் ஒரு நவீன வித்தியாசமான ஆங்கில வார்த்தையை
எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இதுவரை நாம் ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படுத்தாத நவீன
வார்த்தைகளை நமக்கு தேர்ந்தெடுத்து தினமும் ஒரு வார்த்தையை
நமக்கு கொடுக்கின்றனர். இந்த ஆங்கில வார்த்தைக்கு டிவிட்டர்
மூலம் யார் வேண்டுமானாலும் நமக்கு தெரிந்த பொருளை கூறலாம்.
அடுத்த நாள் இதற்கான நவீன சிறந்த விளக்கத்தையும் சரியான
அர்த்தம் கொடுத்தவர்களின் பெயரையும் இவர்கள் தளத்தில்
காட்டுகின்றனர்.

இணையதள முகவரி : http://www.artwiculate.com

டிவிட்டர் முகவரி : http://twitter.com/artwiculate

நம் ஆங்கில அறிவின் திறமையை வளர்ப்பதாகவும் தினமும்
சில நிமிடங்கள் செலவு செய்து தினமும் ஒரு நவீன ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்றுகொள்ளலாம். டிவிட்டர் மூலம்
அன்றைய தினம் கொடுக்கும் வார்த்தைக்கு நமக்கு தெரிந்த
அர்த்தத்தையும் கொடுத்து நாமும் போட்டியில் பங்கு பெறலாம்.
உங்கள் பதில் சரியாக இருந்தால் உங்கள் பெயர் அடுத்த நாள்
இந்த தளத்தில் வரும். ஆங்கில வார்த்தைகள் அதிகம்
கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
சுயநலவாதிகளை விட்டு எப்போதும் விலகி இருங்கள்
அவர்களால் நம் இறை குணம் காணாமல் போகும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாரதப்போர் நடந்த இடம் எது ?
2.சூரியமண்டலம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
3.ரேடியேட்டர் என்பது என்ன ?
4.லிப்ட் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
5.குலா சிகரம் எந்தக்கிரகத்தில் உள்ளது ?
6.அரபிக்கடலின் ராணி என்பது எந்த மாநிலம் ?
7.மூக்கில் பல் உள்ள விலங்கு எது ?
8.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
9.தோலினால் சுவாசிக்கும் உயிரினம் எது ?
10.நீர் குடிக்காத விலங்குகள் எவை ?
பதில்கள்:
1.குருஷேத்திரம்,2.கோபார் நிக்கஸ்,3.குளிர்விக்கும் கருவி,
4.ஓடிஸ்,5.வெள்ளி,6.கேரளா,7.முதலை,8.குதிரை,9.மண்புழு,
10.எலி, கங்காரு
இன்று ஆகஸ்ட் 27 
பெயர் : மவுண்ட்பேட்டன் பிரபு ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 27, 1979
பர்மாவின் முதலாவது கோமகன் மவுண்ட்
பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர்
ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர்.
பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப்
பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின்
முதலாவது ஆளுநராகவும் (Governor-General) இருந்தவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம் கணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு.

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. shareef  |  7:23 முப இல் ஓகஸ்ட் 28, 2010

    அன்பு நண்பரே
    ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளை அப்படியே
    தமிழில் மொழி மாற்றும் மென்பொருள் பற்றி பதிவு ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    மறுமொழி
    • 2. winmani  |  12:01 பிப இல் ஓகஸ்ட் 28, 2010

      @ shareef
      விரைவில் கண்டிப்பாக…
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. yasar  |  10:05 முப இல் ஓகஸ்ட் 30, 2010

    உங்களது கேள்வி பதில் பகுதியில் ஒரு திருத்தம்… “அரபிக்கடலின் ராணி என்பது எந்த மாநிலம் ?”..கேள்வியில் சற்று திருத்தம்.. “அரபிக்கடலின் ராணி என்பது எந்த ஊர் ? பதில்: கொச்சி” …………கடவுளின் தேசம் என அழைக்கப்படும் மாநிலம் கேரளா.

    மறுமொழி
  • 4. thulasi  |  12:20 பிப இல் திசெம்பர் 9, 2010

    It is very useful

    மறுமொழி
    • 5. winmani  |  1:04 பிப இல் திசெம்பர் 9, 2010

      @ thulasi
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 6. Surya  |  12:46 பிப இல் திசெம்பர் 9, 2010

    Hai,
    Is any Tamil keyboard and software available in market? please reply.

    மறுமொழி
    • 7. winmani  |  2:15 பிப இல் திசெம்பர் 9, 2010

      @ Surya
      இலவச மென்பொருள் பல இருக்கிறதே ஏன் காசு செலவு செய்யுறீங்க
      விரைவில் அதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.
      நன்றி

      மறுமொழி
  • 8. mkandeeban  |  4:43 பிப இல் மார்ச் 6, 2011

    Is any blog in tamil related yoga and asana? pls guide me.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2010
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...