சிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்.
பிப்ரவரி 5, 2012 at 2:04 முப 2 பின்னூட்டங்கள்
நம்மிடம் இருக்கும் சிடி /டிவிடி – களுக்கு அழகான கவர் (அட்டை) நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நம் செல்லக்குழந்தையின் பிறந்த நாள் புகைப்படங்களை நாம் சிடி அல்லது டிவிடியில் சேமித்து வைத்திருப்போம் அதிகபட்சமாக சிடியின் மேல் பெயர் எழுதி வைப்போம் ஆனால் சிடியின் மேல் நம் குழந்தையின் புகைப்படத்தை கவரகாக ஒட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி :http://elefantsoftware.weebly.com/dvd-slim-download.html
இத்தளத்திற்கு சென்று நாம் மென்பொருளை இலவசமாக தறவிரக்கி பயன்படுத்தலாம். மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் நிறுவிய பின் மென்பொருளை இயக்கி சிடி அல்லது டிவிடி எதற்கு கவர் உருவாக்கப்போகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அடுத்து நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து கொண்டு சில நிமிடங்களில் அழகான கவர் உருவாக்கலாம். கவர் உருவாக்கிய பின் பிரிண்ட் என்பதை சொடுக்கி பிரிண்ட் செய்து சிடி அல்லது டிவிடி மேல் ஒட்டிவிட வேண்டியது தான் அழகான டிவிடி கவர் சில நிமிடங்களில் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.
பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்
LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.
கூகுளின் முப்பரிமான(3D) மென்பொருள் இலவசம்
மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்
தினம் ஒரு புத்தகம் பிச்சமூர்த்தி அவர்கள் எழுதிய " மந்திர மை (சிறுகதை) " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை அடுத்தவரை குறை கூறும் மனிதன் ஒருபோதும் சரியான மனிதனாக இருக்க மாட்டான்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to take along எடுத்துச் செல் to take and come எடுத்துக்கொண்டு வா to take and go எடுத்துக்கொண்டு போ to take away எடுத்துச் செல்,அப்புறப்படுத்து to take bribe கைலஞ்சம் பெறு to take by force பறித்தெடு ,பிடுங்கு, வலிந்து பறி to take into custody கட்டுக் காவலில் வை to take long time நீண்ட காலம் எடு to take off கிளம்பு, விடுமுறை எடு to take part பங்கு கொள்
இன்று பிப்ரவரி 5
பெயர் : மகேஷ் யோகி, மறைந்த தேதி : பிப்ரவரி 5, 2008 மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியானத்தை (transcendental meditation) இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். அமெரிக்கா,மெக்சிக்கோ,ஐக்கிய இராச்சியம்,சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் ஆழ்நிலை தியான மையங்களை உருவாக்கியவர்.எந்த மதமும் இல்லாத நல்ல மனிதர்.
Entry filed under: தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: சிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்..
1.
ramasami | 12:29 பிப இல் பிப்ரவரி 7, 2012
பொறியியல் மாணாக்கர்கள் தயாரிக்கவேண்டிய “PROJECT” சில அறிவாளிகளுக்கு ஆண்டுதோறும் அள்ளிக்கொடுத்துத் தங்களே தயாரித்ததாகக் கல்லூரிக்குச் சமர்க்கின்றனர். அவர்கள் வின்மணியப் பார்த்தால் சுயமாகவும் சிந்திக்கலாம். இதில் உள்ள ஒரு பதிவினையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
2.
தனபாலன் | 6:26 முப இல் பிப்ரவரி 9, 2012
பயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே !