1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.
ஓகஸ்ட் 9, 2011 at 11:46 பிப 2 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் வீடியோகோப்பில் உள்ள முக்கியமான பகுதிகளை எடுத்து அதை பிளாஷ் கோப்புகளாக , ஐபோன் வீடியோ கோப்புகளாக மாற்றலாம். எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வீடியோ கோப்பில் இருக்கும் சில முக்கிய பகுதிகளை நாம் விரைவாக தெரிய வைப்பதற்கும் எல்லா உலாவிகளிலும் சரியாக காட்டுவதற்கும் நாடுவது பிளாஷ் கோப்புகளை தான், நம்மிடம் இருக்கும் வீடியோகோப்புகளை பிளாஷ் கோப்புகளாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.en.co.de/
வீடியோ கோப்புகளை எப்படி Cut செய்து என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள நம் முந்தையப்பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்.அடுத்து 1 நிமிடம் தெரியக்கூடிய வகையில் நாம் வீடியோ கோப்புகளை Cut செய்து இத்தளத்திற்கு சென்று Start encoding என்ற பொத்தானை சொடுக்கவும். அடுத்து வரும் திரையில் Browse என்ற பொத்தானை சொடுக்கி நாம் வைத்திருக்கும் வீடியோ கோப்பை தேர்ந்தெடுத்து எந்த வகையான கோப்பாக மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் உதாரணமாக Iphone video அல்லது Flash Video கோப்பை தேர்ந்தெடுத்துவிட்டு Upload video என்பதை சொடுக்கி மாற்றலாம், சிறு வீடியோ விளம்பரங்கள் அல்லது வீடியோ கோப்புகளை Flash வீடியோவாக மாற்றி காட்ட நமக்கு இந்ததளம் உதவுகிறது. உதவும். 1 நிமிடம் வரை ஓடக்கூடிய வகையில் பிளாஷ் கோப்புகளை இலவசமாக இத்தளம் மூலம் உருவாக்கலாம்.
யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற
கூகுள் டிவி- யில் டிவிட்டர், ஃபிளிக்கர் பயன்படுத்தலாம் சிறப்பு பதிவு வீடியோவுடன்
கணினியின் விசைப்பலகையை (Keyboard) சுத்தப்படுத்தும் சிறப்பு வீடியோ.
பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி
வின்மணி இன்றைய சிந்தனை வாழ்க்கையில் சிலரைப்பற்றிய நம்பிக்கை இல்லாமல் நாம் விடுவது , பல நல்ல வாய்ப்புகளை விடுவது போன்றது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சோழப்பேரரசின் ஏரி என அழைக்கப்படும் கடல் எது ? 2.கள்ளூக்கடை மறியலில் ஈடுபட்ட தமிழகத்தலைவர் யார் ? 3.ஆகாய கங்கை நீர்விழ்ச்சி எங்குள்ளது ? 4.கிங் மேக்கர் என அழைக்கப்படுபவர் யார் ? 5.ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் நாள் எது ? 6.வெற்றி வேற்கை என்ற நூலின் ஆசிரியர் யார் ? 7.சிற்பங்கள் மூலம் மாமல்லபுரத்தை கலைக்கூடமாக்கிய பல்லவ மன்னர் யார் ? 8.திரு நீற்றுச் சோழன் யார் ? 9.சுதந்திரத்துக்கு பின் நடந்த தேர்தலில் முதலமைச்சராக பதவி ஏற்றவர் யார் ? 10.வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த அரசன் யார் ? பதில்கள்: 1.வங்காள விரிகுடா,2.தந்தை பெரியார், 3.நாமக்கல் மாவட்டம், 4.காமராஜர்,5.ஆடி 18-ம் நாள், 6.அதி வீரராம பாண்டியர், 7.முதலாம் நரசிம்மன், 8.முதலாம் குலோத்துங்கன், 9.இராஜாஜி, 10.புதுக்கோட்டை தொண்டைமான்.
இன்று ஆகஸ்ட் 9
பெயர் : ஹேர்மன் ஹெசே, மறைந்ததேதி : ஆகஸ்ட் 9, 1962 இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1.
neelavannan | 10:17 பிப இல் ஓகஸ்ட் 13, 2011
வீடியோ கோப்புகளை எப்படி Cut செய்து என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள நம் முந்தையப்பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும். – link does not work. please check this. thanks
2.
winmani | 4:53 முப இல் ஓகஸ்ட் 14, 2011
@ neelavannan
மிக்க நன்றி , சரொ செய்தாச்சு, இப்போது பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்.