மேகக் கணினி (Cloud Storage) 10 GB இலவசம் , உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தலாம்.

ஓகஸ்ட் 8, 2011 at 4:13 முப 14 பின்னூட்டங்கள்

இணையதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வார்த்தை மேகக்கணினி அதாவது Cloud Computing. கணினியில் உள்ள  ஹார்டிஸ்க் ( Hard Disk)-ல் நம் தகவல்களை  சேமித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல்  போகலாம் இதை தவிர்ப்பதற்காகவும் உலகில் எங்கிருந்தும் எந்த டிவைஸ் மூலம் நம் தகவல்களை பதிவேற்றவும் , பதிவேற்றியதை தறவிரக்கவும் 100 GB இடத்தை இலவசமாக அளிக்கிறது ஒரு முன்னனி தளம் இதைப்பற்றித்தான இந்தப்பதிவு.

படம் 1

நம் வீட்டு கணினி அல்லது அலுவலகக் கணினியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும்  பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : https://www.cx.com

ஆன்லைன் மூலம் இணையதள சேவை கொடுக்கும் நிறுனங்கள் தற்போது Cloud Hosting  என்று சொல்லக்கூடிய மேகக்கணினி முறையில் தங்கள் சேவையை விரிவுபடுத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதைப்பற்றி விரிவாக பார்க்கும் முன் ஒன்றைப்பற்றி தெரிந்து  கொள்ளலாம். எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும் பரவாயில்லை,விண்டோஸ், மேக்,  அண்ட்ராய்டு, IOS, மற்றும் பிளாக்பெர்ரி போன்ற அனைத்து இணையவசதி உள்ள மொபைல்  மூலமும் நாம் தகவல்களை பாதுகாப்பாக ஆன்லைன் மூலம்  சேமிக்கலாம். ஒவ்வொரு  நாட்டிலும் உள்ளவர்கள் எளிதாக தறவிரக்கலாம் ஒரு நாட்டில் இணையதளப்பிரச்சினை  என்றாலும் அடுத்த நாட்டில் உள்ளவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லாம தெரியும்  இப்போது புரிந்திருக்கும் எதற்காக மேகக்கணினி என்ற பெயர் இதற்கு வந்தது என்று. இப்படி சேவை கொடுக்க அதிகமாக கட்டணம் ஆகும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேலையில் ஒரு முன்னனி நிறுவனம் Cloud Storage 10GB சேமிக்க இலவச இடம்  கொடுக்கிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு  நீங்களும் உங்கள் முக்கியமான தகவல்களை கிளவுட் சேமிப்பு முறையில்  பாதுகாப்பாக வைக்கலாம். கணினியே முழுவதும் பாதிக்கப்பட்டாலும் அடுத்த கணினி மூலம் இணையம் வழியாக நம் கோப்புகளை பயன்படுத்தலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதைப்பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

 
வின்மணி இன்றைய சிந்தனை
அன்பு என்ற ஒன்றை கண்டு கொண்டவனை மதம்
எப்போதும் மாற்றியது கிடையாது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருக்குறள்,திருவாசகம்,நாலடியார் அகியவற்றை ஆங்கிலத்தில்
   மொழிபெயர்த்தவர் யார்  ? 
2.சென்னை மாகானத்தின் தலைமை ஆளுநராக தாமஸ் மன்றோ
   நியமிக்கப்பட்ட ஆண்டு ?
3.தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களின் 
 பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ?
4.ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக முதலில் கலகம் 
 செய்தவர்கள் யார் ?
5.தணிக்கை முறை அல்லது ஜமாபந்தி முறை 
 அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?
6.குன்னக்குடி வைத்தியநாதன் உடன் தொடர்புடைய 
 இசைக்கருவி எது ?
7.சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி 
 அறிவிக்கப்பட்ட ஆண்டு ? 
8.தேவதாசி ஓழிப்புச் சட்டம் நிறைவேற்ற பாடுபட்டவர் யார் ?
9.வைணவ சமயத்தின் தென்கலை பிரிவின் தலைமை மையம்
 எங்குள்ளது ? 
10.பல்லவர்கள் காலத்தில் சமஸ்கிருத மொழியின் சிறந்த 
 இலக்கிக் கூடமாக விளங்கிய இடம் எது ? 
பதில்கள்:
1.ஜி.யு.போப்,2.1820, 3.5 ஆண்டுகள், 4.பாளையக்காரர்கள்,
5.1885, 6.வயலின், 7. 1956, 8.டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி,
9.ஸ்ரீரங்கம், 10.காஞ்சிபுரம்.
 
இன்று ஆகஸ்ட் 8

பெயர் : ஸ்வெத்லானா சவீத்ஸ்கயா,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 8, 1948
முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை
ரஷ்யாவை சேர்ந்தவர் ஆவார். இவர் சல்யூட் டி-7
விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப்
பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற
இரண்டாவது பெண்ணாவார். (வலண்டீனா டெரெஷ்கோவா
முதலாவதாகச் சென்றார்).

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , , .

2012 என்ன நடக்கலாம் அறிவியல் ரீதியாக கணித்து சொல்லும் பயனுள்ள தளம். 1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.

14 பின்னூட்டங்கள் Add your own

 • 1. puduvaisiva  |  1:51 பிப இல் ஓகஸ்ட் 10, 2011

  useful info thanks winmani

  and it’s secure for to store personal information ???

  how do you feel about it.

  மறுமொழி
  • 2. winmani  |  8:20 பிப இல் ஓகஸ்ட் 10, 2011

   @ puduvaisiva
   பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் , ஒருவர் தகவல்கள் வெளிவந்தாலும் அவர்கள் கடையை பூட்டி விட்டு செல்ல வேண்டடியது தான், எப்படி பல லட்சம் வாசகர்களை விடுவார்கள், அதனால் பாதுகாப்பு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
   நன்றி

   மறுமொழி
 • 3. balasubramanian.R  |  3:40 பிப இல் ஓகஸ்ட் 10, 2011

  your yet another reliable services to be needed for ever growing HI-TECH World……..

  மறுமொழி
  • 4. winmani  |  8:26 பிப இல் ஓகஸ்ட் 10, 2011

   @ balasubramanian.R
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 5. ravishankar  |  6:32 பிப இல் ஓகஸ்ட் 10, 2011

  பயனுள்ள தகவல்

  மறுமொழி
 • 7. shenisi  |  10:21 பிப இல் ஓகஸ்ட் 10, 2011

  அனைவருக்கும் பயனுள்ள தகவல்

  மறுமொழி
 • 9. Prasath  |  6:44 முப இல் ஓகஸ்ட் 11, 2011

  Very very useful information.Thaks

  மறுமொழி
 • 11. Henry  |  3:07 பிப இல் ஓகஸ்ட் 11, 2011

  very useful friend, Give me full detail of Cloud Computing. What is cloud Computing? How its work? Its a physical storage device or Virtual one?

  மறுமொழி
 • 12. Tamil Comedy World  |  5:07 பிப இல் ஓகஸ்ட் 11, 2011

  நல்ல தகவல்!
  நன்றி,
  பிரியா

  மறுமொழி
 • 13. mmsjawahar  |  7:35 பிப இல் செப்ரெம்பர் 12, 2011

  hello i have stored 1GB capacity files. after i couldn’t enter in to the site!! fortunately i have a copy of the file!!

  மறுமொழி
  • 14. winmani  |  8:40 முப இல் செப்ரெம்பர் 13, 2011

   @ mmsjawahar
   தாங்கள் எந்த வகையான கோப்புகளை பதிவேற்றம் செய்தீர்கள் உதாரணமாக EXE, crack tools போன்றவற்றை இவர்கள் அனுமதிப்பதில்லை, காரணம் அது சட்ட விரோதம் என்பதால்,
   நன்றி

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: