உங்கள் வீட்டு கார்டன் எப்படி இருக்க வேண்டும் நீங்களே வடிவமைத்து பார்க்கலாம்.

பிப்ரவரி 13, 2011 at 8:11 பிப 4 பின்னூட்டங்கள்

நம் வீட்டு தோட்டம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று
ஆன்லைன் மூலம்  நாமே வடிவமைத்து பார்க்கலாம். எந்த செடி
எங்கு வைக்கலாம் எப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்ற
பல கேள்விகளுக்கும் விடையளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

எவ்வளவு பெரிய பதிவி வகித்தாலும் நம் வீட்டு செடிகளை
பராமரிப்பதற்கும் நேரம் ஒதுக்கும் பெரிய மனிதர்கள் இன்றும்
இருக்கின்றனர், வீட்டின் முகப்பில் இருந்து தோட்டம் வரை
எந்த செடிகள் வைத்தால் அழகாக இருக்கும். இந்தச்செடி எந்த
மண்ணில் வேகமாக வளரும் போன்ற பல தகவல்களை
கொண்டு நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://gardenpuzzle.com/projects/redesign/new

இந்தத்தளத்திற்கு சென்று நம் வீட்டின் முகப்பு படத்தை அப்லோட்
செய்து எந்தெந்த செடிகள், மரங்கள் எங்கு வைத்தால் நன்றாக
இருக்கும் என்று பார்க்கலாம். வலது பக்கம் செடிகள் மரங்கள் என
அனைத்தும் இருக்கின்றது, இதில் நமக்கு பிடித்த மரம் மற்றும் செடி
போன்றவற்றை சொடுக்கி நாம் வடிவமைக்கும் தோட்டத்துக்கு
கொண்டு வரலாம். எல்லாம் வடிவமைத்து முடித்தபின் நம்
கணினியில் சேமித்தும் வைக்கலாம். வீட்டுத்தோட்டத்தை
அழகுபடுத்த நினைக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
உயிரினங்களிடம் அன்பு காட்டுங்கள், இறைவன் சோதனை
வராமல் நம்மை பார்த்துக்கொள்வான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஜூன் 22, 2010-ல் இந்திய விமானப்படை கெளரவ பதவிக்காக
 பரிந்துரைக்கப்பட்ட வீரர் ? 
2.11-வது  ஐந்தாண்டு திட்டகாலம் ?
3.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் எது ?
4.இன்சுலின் என்பது என்ன ? 
5.மனிதன் அறிந்த முதல் உலோகம் எது ?
6.மனிதனில் இரத்த சிவப்பணுக்கள் உருவாகும் இடம் எது ?
7.வெள்ளியின் உருகுநிலை என்ன ?
8.18 காரட்டில் உள்ள தங்கத்தின் எடை சதவீதம் ?
9.512 -ன் கனமூலம் என்ன ?
10.இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் யார் ?
பதில்கள்:
1.சாச்சின் டெண்டுல்கர், 2. 2007 -2012,3.பிப்ரவரி 9 ,
4.சிகிச்சைக்கான பொருள்,5.தாமிரம்,6.எலும்பு மஜ்ஜை,
7.961 டிகிரி C, 8.75, 9. 8,10.டாகடர்.இராஜேந்திரபிரசாத்.
இன்று பிப்ரவரி 13 
பெயர் :சரோஜினி நாயுடு,
பிறந்த தேதி : பிப்ரவரி 13, 1879
பாரதீய கோகிலா(இந்தியாவின் நைட்டிங்கேல்)
என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பிரபலமான
குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும்
கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின்
முதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின்
முதல் பெண் ஆளுனரும் ஆவார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில்
இவர் செய்த சேவைக்காக இந்தியநாடே இன்று பெருமிதம்
கொள்கிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகிள் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி எல்லா நாட்டு மக்களும் பங்குபெறலாம். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்.

4 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...