அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்.
பிப்ரவரி 14, 2011 at 2:42 பிப 6 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நாமும் , ஆன்லைன் மூலம்
பொருட்கள் விற்கும் நிறுவனமும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பற்றிதான் இன்றைய சிறப்பு
பதிவு.
ஆன்லைன் மூலம் சேலை வாங்குவதில் தொடங்கி தங்கநகை
வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைனிலே வந்துவிட்டது
இருந்தும் இன்றும் பல பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை
விரும்புவதில்லை , எந்த பொருள் வேண்டுமோ அந்த பொருளுக்கான
பணத்தை எங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கில்
செலுத்துங்கள் என்று கூறுகின்றனர். பல வெளிநாட்டு நிறுவனங்களும்
இதே போல் தான் இருக்கின்றனர், உடனே நாம் கூறுவது
தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடையாதவர்கள் என்று, நிச்சயமாக
இல்லை அவர்கள் தொழில்நுட்பத்தின் அத்தனை பரிணாமமும்
அறிந்தவர்கள் எப்படி என்று சற்று விரிவாக பார்ப்போம்.
ஆன்லைன் வர்த்தகத்தில் கொள்ளை அடிப்பதை ஆரம்பித்தவர்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள் தான்.
ஆன்லைன் வர்த்தகத்தில் இவர்களிடம் தப்பாத எந்த நிறுவனமும்
இல்லை என்றே கூறலாம், ஆனால் இவர்கள் முன்பு பயன்படுத்திய
முறையைத்தான் நைஜிரியா நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள்
இப்போது பயன்படுத்துகின்றனர். நைஜிரியா நாட்டு கொள்ளையர்கள்
சிறிய அளவு பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் கம்பி எண்ணிய விசயம்
நாம் அறிந்ததே, ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டு கொள்ளையர்கள்
தற்போது செய்வது ஐபி புரொட்டோகோலில் இருக்கும் ஓட்டைகளை
பயன்படுத்தி எந்த இணையதளத்தை முடக்க வேண்டும் இதற்கு
எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்ற வேகத்தில் சென்று கொண்டு
இருக்கின்றனர்.மிகப்பெரிய நிறுவனமான கூகிளே படாதபாடு
படுத்திவிட்டனர் என்றால் நம் நிறுவனத்தின் தளத்தை பாதுகாப்பது
எவ்வளவு கடினமான முயற்சி என்று நமக்கு தெரியும். சில
நிமிடங்களில் உங்கள் வங்கியின் கணக்கில் உள்ள பணத்தை
திருடும் அளவு முன்னேறி இருக்கின்றனர். நாளையப் பதிவில்
இதைப்பற்றி மேலும் சற்று விரிவாக பார்க்கலாம்.
வின்மணி சிந்தனை அடுத்தவர் மனம் வருந்தி கொடுக்கும் பணம் நமக்கு நல்ல வழியில் செலவு செய்ய பயன்படாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்ன ? 2.பாக்சைட் என்பது எதனின் கச்சாப்பொருளாகும் ? 3.பன்னாட்டு வர்த்தக அமைப்பின் தலமையகம் எங்குள்ளது ? 4.குப்தர்களின் உலகப்புகழ் பெற்ற சுவர் ஒவியங்கள் காணப்படும் இடம் எது ? 5.7 செ.மீ ஆரமும் 24 செ.மீ உயரமும் கொண்ட கூம்பின் கன அளவு ? 6.முன் வேதகாலத்தைப் பற்றி அறிய உதவுவது ? 7.காஞ்சி என்னும் சொல்லின் பொருள் என்ன ? 8.கரீபீ ஹட்டா என்பதன் பொருள் என்ன ? 9.ஆறுமாதத்திற்கு மேலாக உள்ள காசோலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 10.கனிஷ்கர் காலத்தில் புத்தமதம் எத்தனையாக பிரிந்தது ? பதில்கள்: 1.சுயராஜ்யம் பெறுவது, 2.அலுமினியம்,3.ஜெனீவா , 4.அஜந்தா,5.392 π செ.மீ 3,6.ரிக்வேதம்,7.அணிகலன், 8.வறுமை அகற்றல், 9. காலக்கெடு முடிந்த காசோலை, 10.இரண்டாக.
இன்று பிப்ரவரி 14ஐபிஎம்(IBM)என்றழைக்கப்படும்"இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன் "(InternationalBusiness Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிட மாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம் 1924-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14-ஆம் நாளன்று 'இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன்'(ஐபிஎம்)என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமு.
1.
♠புதுவை சிவா♠ | 6:17 பிப இல் பிப்ரவரி 27, 2011
Thanks winmani
we are waiting for your next post !
2.
winmani | 12:24 முப இல் பிப்ரவரி 28, 2011
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
3.
Thanigasalam | 7:36 பிப இல் பிப்ரவரி 27, 2011
நல்ல பயனான பதிவு. மேலும் தெளிவான தகவல்களைத் தொடருங்கள் வின்மணி.
4.
winmani | 12:24 முப இல் பிப்ரவரி 28, 2011
@ Thanigasalam
மிக்க நன்றி
5.
srithar | 6:50 முப இல் பிப்ரவரி 28, 2011
vazhga vazhmudan
6.
winmani | 9:23 முப இல் பிப்ரவரி 28, 2011
@ srithar
நன்றி