அழகான புகைப்பட கேலரி ( image gallery) நொடியில் உருவாக்கலாம்.
மார்ச் 22, 2011 at 5:03 பிப 2 பின்னூட்டங்கள்
நாம் எடுத்த புகைப்படங்களை சில நிமிடங்களில் அழகான கேலரியாக
உருவாக்கி இணையத்தில் மற்றவருடன் இலவசமாக பகிர்ந்து கொள்ள
நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புகைப்படங்கள் அழகாக எடுத்தால் மட்டும் போதுமா அதை நம்
நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவருக்கும் அழகாக தெரியும்படி
ஒரு கேலரியாக உருவாக்கி காட்ட வேண்டும் என்ற எண்ணம்
நம்மில் பலருக்கு இருக்கும். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://min.us
இந்தத்தளத்திற்கு சென்று நாம் Signup for minus என்ற பொத்தானை
சொடுக்கி புதிதாக ஒரு இலவச கணக்கு நொடியில் உருவாக்கி
கொண்டு உள்நுழையலாம். அடுத்த்து வரும் திரையில் select என்பதை
சொடுக்கி வரும் திரையில் Addfiles என்பதை சொடுக்கி நம்மிடம்
இருக்கும் புகைப்படங்களை அப்லோட் செய்யலாம். எல்லா
படங்களையும் தேர்ந்தெடுத்து முடித்ததும் Start Upload என்ற
பொத்தானை சொடுக்கி அனைத்து புகைப்படங்களையும் எளிதாக
பதிவேற்றலாம். அடுத்து வரும் திரையில் நாம் அப்லோட் செய்த
புகைப்படங்களை கேலரியாக உருவாக்கப்பட்டு அதற்கான தள
முகவரியும் நமக்கு கிடைக்கும். இணையதள முகவரியும்
இணையதளமும் எளிமையாகயும் எந்த விளம்பரமும் இல்லாமல்
இருப்பதால் கேலரி பார்க்க நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாக
இந்தப்பதிவு புகைப்படம் எடுக்கும் நண்பர்களுக்கும் நம்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன் -ல் உங்களுக்கென்று இலவசமாக கடை உருவாக்கலாம்.
ஆன்லைன்-ல் ஜீப் ( Gif ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்
3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்
பேப்பர் அட்டையை வெட்டி பல அதிசயங்களை உருவாக்கலாம்
வின்மணி சிந்தனை உள்ளத்தில் இருக்கும் எண்ணம் தான் முகத்தில் பிரதிபலிக்கும் எப்போதும் நல்ல எண்ணங்களை எண்ணுங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பூடான் நாட்டின் தலைநகர் என்ன ? 2.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் என்ன ? 3.ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் என்ன ? 4.பர்மா நாட்டின் தலைநகர் என்ன ? 5.அல்பேனியா நாட்டின் தலைநகர் என்ன ? 6.பெல்ஜியம் நாட்டின் தலைநகர் என்ன ? 7.ஆப்கானிஸ்தானம் நாட்டின் தலைநகர் என்ன ? 8.எகிப்து நாட்டின் தலைநகர் என்ன ? 9.கனடா நாட்டின் தலைநகர் என்ன ? 10.பின்லாந்து நாட்டின் தலைநகர் என்ன ? பதில்கள்: 1.திம்பு,2.பாரிஸ்,3.கான்பெரா,4.ரங்கூன்,5.திரானா, 6.பிரஸ்ஸல்ஸ்,7.காபூல், 8.கெய்ரோ, 9ஒட்டாவா, 10.ஹெல்சிங்கி.
இன்று மார்ச் 22உலக நீர் நாள் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தின் படி ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் உலகநீர்நாள் கொண்டாடப்படுகிறது. நோயற்ற வாழ்விற்கு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து அனைத்து நாடுகளும் இந்த நாளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அழகான புகைப்பட கேலரி ( image gallery) நொடியில் உருவாக்கலாம்..
1.
Prabakaran | 12:56 பிப இல் ஏப்ரல் 5, 2011
out standing search is yours. thanks to uuuuuuuu
2.
winmani | 10:45 பிப இல் ஏப்ரல் 5, 2011
@ Prabakaran
மிக்க நன்றி