ஒரே எண்ணம் உள்ள மக்களை டிவிட்டரில் தேட புதுமையான வழி

திசெம்பர் 10, 2010 at 11:20 பிப 2 பின்னூட்டங்கள்

உலக அளவிலும் , மொழி அளவிலும் ஒரே மாதிரி எண்ணங்கள்
உள்ள நண்பர்களை டிவிட்டரில் எளிதாக தேடி அவர்களுடன் நட்பு
கொண்டாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

படம் 1

நாட்டுக்கு நாடு கலாச்சாரம் மாறலாம், மொழி மாறலாம் ஆனால்
மாறாத ஒன்று அன்பும் எண்ணமும் தான் , ஒரே மாதிரி எண்ணங்கள்
உள்ள பல பேர் டிவிட்டரில் இருக்கலாம் இவர்களை எளிதாக
கண்டுபிடிக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.twitterel.com

இந்ததளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Sign in with
Twitter என்ற பொத்தானை அழுத்தி நம் டிவிட்டர் கணக்கை திறந்து
கொள்ளவும் அடுத்து வரும் திரையில் Allow என்ற பொத்தானை
அழுத்தவும். அடுத்த திரை படம் 1ல் உள்ளது போல் வரும் இதில்
இதில் நாம் புதிய Keywords சேர்ப்பதாக இருந்தால் சேர்க்கலாம்
அல்லது Find twitters who tweeped this word என்பதை சொடுக்கி
விரும்பிய எண்ணத்தை கொடுத்து நம்மைப்போல் எண்ணம்
உள்ளவர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.புதுமை விரும்பிகளுக்கு
இந்ததளம் பயன்உள்ளதாகவும் தங்கள் வியாபார மற்றும் கல்வி
சம்பந்தமான தகவல்களை கொண்டுள்ள நபர்களிடம் நட்பு வட்டத்தை
விரிவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

வின்மணி சிந்தனை
பிறரை மதிக்கத் தெரியும் நபர்களிடம் இருக்கும்
எல்லாச் செயல்களிலும் வெற்றி நிச்சயம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கோள்களில் ஒளி மிகுந்த கோள் எது ? 
2.இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் என்ன ?
3.கோபி பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது ?
4.காற்று மண்டலத்தின் உயிர் காக்கும் படலமாக விளங்குவது
  என்ன ? 
5.ரஷியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 
6.32 நாட்கள் கொண்ட தமிழ் மாதம் என்ன ?
7.உலகிலேயே மிகப்பெரிய கடல் எது ?
8.அமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன ?
9.மலேசியாவின் பழைய பெயர் என்ன ?
10.எந்த நாய்க்கு குரைக்கத் தெரியாது ? 
பதில்கள்:
1.சுக்கிரன்,2.சிம்லா,3.மங்கோலியா, 4.ஒசோன், 5.டூபிள்,
6.ஆடி, 7.பசிபிக் பெருங்கடல்,8.கூடைப்பந்து, 
9.மலேயா,10.டிங்கோ.
இன்று டிசம்பர் 10 
பெயர் : இராஜாஜி ,
மறைந்த தேதி : டிசம்பர் 10, 1972
இராஜாஜி என்று அழைக்கப்படும் இராஜ
கோபாலாச்சாரி ஒர் இந்திய சுதந்திரப் 
போராட்ட வீரர்.வழக்கறிஞர், எழுத்தாளர்,
அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல்
கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அனைத்து துறையில் இருப்பவருக்கும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jana  |  4:04 முப இல் திசெம்பர் 14, 2010

    Please re check your 6 th answer.

    மறுமொழி
    • 2. winmani  |  4:14 முப இல் திசெம்பர் 14, 2010

      @ jana
      நண்பருக்கு , தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. ஆனியும், ஆடியும் 32 நாட்கள்; புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை – 30 நாட்கள். மார்கழி – 29+ நாட்கள்.
      ஏன் இப்படி?

      தமிழ் மாதத்தின் கால அளவு சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தில் ஏற்படக் கூடிய வேறுபாட்டையும்
      பொறுத்தது. சூரியனை பூமி சுற்றிவரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதையும் அல்ல. Ellipse எனப்படும்
      நீள்வட்டம். சூரியனிலிருந்து புமி இருக்கும் தூரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சமயம் கிட்டத்தில் இருக்கும் –
      டிஸெம்பர்/மார்கழியில். அந்த இடத்திலிருந்து 180 டிகிரி தள்ளி அதிக தூரத்துக்குச் சென்றுவிடும். ஜூலை/ஆடியில்.
      Perigee, Apogee இவற்றைச் சொல்வார்கள்.
      ஆனி, ஆடி என்று இருந்தாலும் பொதுவாக புத்தகத்தில் ஆனி என்று தான் இருக்கிறது.
      நன்றி.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
M T W T F S S
« Nov   Jan »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: