அழகான பூனை கார்டூன் நாம் விரும்பிய படி உருவாக்க புதுமையான வழி

ஓகஸ்ட் 6, 2011 at 1:44 பிப 1 மறுமொழி

உலக அளவில் பூனையை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி , நாம் விரும்பியபடி பூனை கார்டூன் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்  இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

நாம் அணியும் டிசர்ட் ஆடை முதல் , காப்பி கோப்பை , கீ செயின் போன்ற அனைத்திலும் நாம் விரும்பும் பூனை படங்களை ஆன்லைன் எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.cartoonizemypet.com/catoonizer/

மூன்று எளிதான வழி முறைகளில் நாம் பூனை கார்டூன் உருவாக்கலாம் , முதலில் படம் 1-ல் காட்டியபடி Features என்பதில் பூனையின் உடல் பாகங்களான தலை , வால், காது, கண் , மூக்கு , மீசை , வாய் போன்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக சொடுக்கி வலது பக்கம் மற்றும் இடது பக்க அம்புகுறியை சொடுக்கி விரும்பிய வடிவத்தை  தேர்ந்தெடுக்கலாம். அடுத்து இருக்கும் Markings என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்த பகுதிகளுக்கு விரும்பும் வண்ணம் மற்றும் டிசைன் உருவாக்கலாம்  எல்லாம் உருவாக்கிய பின் Export என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய பூனை டிசர்ட் முதல் காப்பி கோப்பை வரை அனைத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று காட்ட்ப்படும், எந்த வித பணமும்  செலவழிக்காமல் எளிதாக அழகான கார்டூன் பூனை படம் உருவாக்கலாம்.

உங்கள் செல்லப்பிராணிகளுக்குகென்று பயனுள்ள தனி இணையதளம்

மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பிராணிகள் பற்றி சொல்லும் அரிய தளம்.

செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

பேப்பர் அட்டையை வெட்டி பல அதிசயங்களை உருவாக்கலாம்

 
வின்மணி இன்றைய சிந்தனை
பொருளுக்காக அடுத்தவரைப் புகழ்ந்து துதி பாட 
விரும்பாதவன் தான் உண்மையான ஆன்மீகவாதி
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாரத மாத சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார் ?
2.ஆண் - பெண் விகிதத்தில் இந்திய அளவில் தமிழகம் 
 எத்தனையாவது இடம் ?
3.தனி நபர் சத்தியாகிரகத்தின் போது முதன் முதலாக 
 சிறை சென்றவர் யார் ?
4.ராஜாரத்தினம் விளையாட்டு மைதானம் உள்ள இடம் எது ?
5.மக்கள் தொகை கட்டுபடுத்துவதில் இந்திய அளவில் தமிழகம்
  எத்தனையாவது இடம்  ?
6.சுதேசி கப்பல் கம்பெனி 1906 -ல் துவக்கப்பட்ட இடம் ?
7.மக்கள் நெருக்கத்தில் இந்திய அளவில் தமிழகம் 
 எத்தனையாவது இடம் ?
8.கட்டாயக்கல்வி முறை  அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு ?
9.தொழில் முதலீட்டில் தற்போது தமிழகம் எத்தனையாவது இடம் ?
10.பாறைகளை குடைந்து ஆலயங்களை எழுப்பும் முறையை
 பின்பற்றிய பல்லவ மன்னர் யார் ? 
பதில்கள்:
1.நீலகண்ட பிரம்மச்சாரி, 2. 4 வது இடம் 3.டாக்டர் 
 டி.எஸ்.எஸ்.ராஜன், 4.சென்னை,  5.2 வது இடம், 
6.தூத்துக்குடி , 7.6 வது இடம், 8.1949 , 9. முதலாவது,
10.முதலாம் மகேந்திரவர்மன்.
 
இன்று ஆகஸ்ட் 6  

பெயர் : அலெக்சாண்டர் பிளெமிங்
பிறந்த தேதி : ஆகஸ்ட் 6, 1881
நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக்
கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர்
கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம்
நொடேடம் என்ற பூஞ்சையிலிருந்து
பிரித்தெடுத்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

பல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும் பயனுள்ள தளம். 2012 என்ன நடக்கலாம் அறிவியல் ரீதியாக கணித்து சொல்லும் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...