மெக்கானிக் மற்றும் சிவில் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள்.

ஜூலை 1, 2011 at 5:44 பிப 2 பின்னூட்டங்கள்

தொழில்நுட்ப வரைபடங்கள் , கட்டிடகலை திட்டங்கள் , கிராபிக் வடிவமைப்பு மற்றும் இயந்திர பாகங்களின் வடிவமைப்புக்கு உதவும் ஒரு பயனுள்ள இலவச மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மெக்கானிக் துறையில் டிசைன் என்ற வார்த்தையை கேட்டதும் உடனடியாக கணினியில் என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள் என்று யாரும் கேட்பதற்கில்லை காரணம் அனைவருக்குமே தெரியும் ஆட்டோகேட் (AutoCAD) மென்பொருள் தான் அது , AutoCad  ஒரு பெரிய கடல் தான் இதில் இருக்கும் பல சேவைகளைக்கூட நாம் இன்றும் பயனபடுத்தாமல் தான் இருக்கிறோம், இந்நிலையில் தொழில்நுட்ப வரைபடங்கள் வரைய ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் வந்துள்ளது, மென்பொருளின் பெயர்  LibreCAD.

தறவிரக்க முகவரி: http://sourceforge.net/projects/librecad/files/Windows/LibreCAD-Latest.exe/download

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பதிப்புகளில் கிடைக்கிறது. நமது சொந்த வேலை மற்றும் அலுவலக வேலைக்கும் இந்த மென்பொருளை இலவசமாக பயன்படுத்திக்கொள்லலாம், 2D -ல் அனைத்துவிதமான கடினமான படங்களும் எளிதாக சில மணித்துளிகள் செலவு செய்து வரையும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் வெளிவந்த சில மாதங்களிலே பலதரப்பட்ட மக்களை தன் பக்கம்
ஈர்த்துள்ளது அந்த அளவிற்கு எளிமையாகவும் அனைவரும் பயன்படுத்தும் வண்ணமும் இருக்கிறது. AutoCad பயன்படுத்தும் நண்பர்களுக்கும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இதில் இருக்கும் பல சிறப்பான சேவைகளை எளிதாக  பயன்படுத்தலாம்.மெக்கானிக் மற்றும் சிவில் துறையில் உள்ள நண்பர்களுக்கு இந்தப்பதிவை கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்.

அனைத்துவகையான கணிதமும் செய்ய உதவும் Scientific Calculator மென்பொருள்.

அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.

கூகுளின் முப்பரிமான(3D) மென்பொருள் இலவசம்

 
வின்மணி இன்றைய சிந்தனை
அடுத்தவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே
நம்மை வாழ்கையில் வெற்றிக்கு அழைத்து செல்லும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குமார கம்பனின் மனைவி யார் ? 
2.சென்னையில் தன்னுரிமைக் காப்புக்கழகம் தொடங்கப்பட்ட
 ஆண்டு ?
3.பாரதம் என்ற நூலை இயற்றியவர் யார் ?
4.தமிழகத்தில் முதல் அச்சு இயந்திரம் இருந்த இடம் எது ?
5.தமிழ்நாட்டு வால்டர் ஸ்காட் என அழைக்கப்படுபவர் யார் ?
6.ஆழ்வார்கள் 12 பேரில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ?
7.இரட்சணிய யாத்திரீகம் என்ற நூலை எழுதியவர் யார் ?
8.சென்னையில் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு ?
9.சிவகங்கை சிங்கம் என்ற பெருமைக்குரியவர் யார் ? 
10.மகேந்திரகிரி எரிபொருள் சோதனை மையம் உள்ள இடம் எது?
பதில்கள்
1.கங்கா தேவி, 2.1852,3.வில்லிபுத்தூரார், 4.புன்னைக்காயல்,
5.கல்கி,6.ஆண்டாள்,7.எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை,8.1640,
9.சின்ன மருது,10.திருநெல்வேலி.
 
இன்று ஜூலை 1

பெயர் : கல்பனா சாவ்லா,
பிறந்ததேதி : ஜூலை 1, 1961
இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த
முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா
விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும்
பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில்
உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக
நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் வைத்துள்ளனர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்களை தடுக்க புதிய வழி அனைவருக்கும் உதவும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தமிழ் மொழி அகராதி

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. வடுவூர் குமார்  |  10:23 பிப இல் ஜூலை 2, 2011

    அருமையாக இருக்கு.

    மறுமொழி
    • 2. winmani  |  10:27 பிப இல் ஜூலை 2, 2011

      @ வடுவூர் குமார்
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...