அனைவருக்கும் உதவும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தமிழ் மொழி அகராதி

ஜூலை 2, 2011 at 5:03 பிப 13 பின்னூட்டங்கள்

ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பு கொடுக்க பல தளங்கள் உள்ள நிலையில் தமிழ் வார்த்தைக்கு விரிவான விளக்கம் கொடுக்க தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

அழகு கொஞ்சும் தமிழில் உள்ள வார்த்தைகளை பல நேரங்களில் நமக்கு விளக்கம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்போம். இணையதளங்களில் தேடினாலும் இதற்கான விளக்கம் பல நேரங்களில் தெரிவதில்லை ஆனால் இனி தமிழ் வார்தைக்கு உண்டான விளக்கத்தை எளிதாக புரியும் படி அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/

தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை அனைவரும் நொடியில் அறிந்து கொள்ளும் பொருட்டு  தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் டிக்ஸ்னரியில் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய  தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம் கூடவே நாம் கொடுக்கும் வார்த்தைக்கு இணையான
வார்த்தையையும் காட்டுகிறது. திருக்குறளில் கூட பல வார்த்தைகளுக்கு விளக்கதை தேடும் நமக்கு இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம் தான். தமிழ் பேராசியர்கள் மற்றும் தமிழ் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் இத்தளம் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும்.கதிர்வேலு என்பவரின் சீரான முயற்சியில் நாம் இதை பயன்படுத்துகிறோம் அவருக்கும் நம் வின்மணியின் நண்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி

ஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை

அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்

 
வின்மணி இன்றைய சிந்தனை
நல்லவர்களை ஊர் என்னதான் புறங்கூறினாலும் இறுதியில்
அவர்களின் புகழ் நிலைத்து இருக்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சங்க கால  சோழ மன்னர்களில் சிறந்த் அரசன் யார் ? 
2.தமிழகத்தில் மும்மொழி திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ?
3.தமிழகத்தின் இருண்ட காலம் யாருடைய காலம் ?
4.சென்னை முதல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு ?
5.மூன்றாவது தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் யார் ? 
6.தமிழகத்தின் பொற்காலம் யாருடைய காலம் ?
7.தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு ?
8.அரிக்கமேடு எங்கு உள்ளது ? 
9.பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? 
10.சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது ?
பதில்கள்
1.கரிகாலன், 2.1965, 3.களப்பிரர்கள் காலம், 4.1835,
5.முடத்திருமாறன் , 6.சங்க காலம்,7.1957, 8.பாண்டிச்சேரி,
9.பாரதியார், 10.மணலி.
 
இன்று ஜூலை 2

பெயர் : ஹேர்மன் ஹெசே, 
பிறந்ததேதி : ஜூலை 2, 1962
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர்,
நாவலாசிரியர், ஓவியர்.1946 இல் நோபல் பரிசு பெற்றார்.
கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய 
இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game 
ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்த 
தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மெக்கானிக் மற்றும் சிவில் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள். கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.

13 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Devarajan  |  5:08 பிப இல் ஜூலை 2, 2011

    நன்றிகள் பல…அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது.

    மறுமொழி
  • 3. N.Rathna Vel  |  9:54 பிப இல் ஜூலை 2, 2011

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி
  • 5. chollukireen  |  11:25 பிப இல் ஜூலை 2, 2011

    அடைக்கலாங் குருவி, தெறிந்த பெயர், ஆனால் மறந்துபோன பெயர், எவ்வளவு ஸந்தோஷமாக இருக்கிரது. அகராதியைப் பூரா படித்தால் எவ்வளவோ சாதாரணமாக பழக்கத்தில் புழங்கி வந்த வார்த்தைகளெல்லாம் ஞாபகத்திற்கு வரும். அளவிடமுடியாத ஒத்தாசைதான் யாவருக்கும்.

    மறுமொழி
  • 7. Ilakkuvanar Thiruvalluvan  |  5:03 முப இல் ஜூலை 3, 2011

    அகராதி பற்றிய தகவலுக்கு நன்றி. இது போன்ற அகராதிகள் இருக்கின்ற சொற்களைத் தொகுத்து நமக்கு அளிக்கும் பயனுள்ள வேலைகளைச் செய்கின்றன. எனினும் முழுமையான நல்ல அகராதி தமிழுக்கு இல்லை. (நல்ல) தமிழில் தமிழ் நெறியுடன் கூடிய நல்ல அகராதி உருவாக்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    மறுமொழி
  • 9. ramanans  |  12:29 பிப இல் ஜூலை 3, 2011

    நல்ல அறிமுகம் விண்மணி

    //கதிர்வேலு என்பவரின் சீரான முயற்சியில் நாம் இதை பயன்படுத்துகிறோம்//

    நா. கதிரைவேற்பிள்ளை மிகச் சிறந்த தமிழறிஞர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பல நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். இவரது அகராதியே முதன்மையானது. மிகச் சிறந்தது. கடும் உழைப்பில் உருவானது. அவர் மறைந்து 100 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

    மறுமொழி
    • 10. winmani  |  4:46 பிப இல் ஜூலை 3, 2011

      @ ramanans
      தங்களின் அய்யாவை பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்து கொண்டோம்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 11. puduvaisiva  |  1:22 பிப இல் ஜூலை 4, 2011

    useful info

    thanks winmani

    மறுமொழி
  • 13. "Mandakolathur"  |  8:11 முப இல் ஜூலை 9, 2011

    This is no doubt a wonderful achievement and a landmark. Thanks a lot.

    “Manian”

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: