மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.

திசெம்பர் 5, 2010 at 7:04 பிப 4 பின்னூட்டங்கள்

நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாக
ஆன்லைன் மூலம் பேக்கப் (Mobile Data Backup)  செய்து வைக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

மொபைல் பேக்கப்

மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள்
கொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும்
அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும்
துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல்
தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.mobyko.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்
கொண்டு நம்மிடம் இருக்கும் மொபைல் போனினின் நிறுவனத்தையும்
மாடலையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து நம்
மொபைலில் இருந்து Address book முதல் Photos , videos , Games என
அனைத்தையும் எளிதாக தரவிலக்கலாம் ஆன்லைன் மூலம் சேமிப்பதால்
ஒரு வசதி இருக்கிறது இண்டெர்நெர் இணைப்பு இருக்கும் அனைத்து
இடத்திலும் நாம் தகவல்களை பார்க்கலாம். கூடவே நாம் மொபைலில்
எடுக்கும் புகைப்படங்களை பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க்
தளங்களில் பகிர்ந்து கொள்ள வசதியும் இருக்கிறது.

வின்மணி சிந்தனை
இறைவனை தரிசிக்கும் போது நம்மை அறியாமல் வரும்
கண்ணீர் அவர் மேல் நமக்கு இருக்கும் அன்பை காட்டுகிறது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரயில் குளிர்சாத பெட்டி வைத்த ஆண்டு என்ன ?
2.கனடாவின் தலைநகர் என்ன ?
3.சென்னையின் பரப்பளவு என்ன ?
4.மனிதன் முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளது ?
5.மகாத்மா காந்திக்கு எந்த வயதில் திருமணம் நடந்தது ?
6.தினசரி நாளிதழை அறிமுகப்படுத்திய நாடு எது ?
7.துப்பாக்கியை தேசியக்கொடியில் பொறித்திருக்கும் நகரம் ?
8.அரசாங்கம் வட்டிக் கடை வைத்து நடத்தும் நாடு எது ?
9.பாம்பின் விஷம் எந்த நோய்க்கு பயன்படுத்தபடுகிறது ?
10.லவ் ஆப்பிள் என்பது என்ன ? 
பதில்கள்:
1.1937,2.ஒட்டவா,3.128 சதுர கி.மீ, 4.14,5.13 வயதில்,
6.சீனா,7.மொசாம்பின்,8.மலேசியா,9.புற்றுநோய்.10.தக்காளி.
இன்று டிசம்பர் 5  
பெயர் : கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி,
மறைந்ததேதி : டிசம்பர் 5, 1954
புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் இவரின்
இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி.
35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள்,
கட்டுரைகள், பயணக்கட்டுரைகள்
மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப்
புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.
இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ்
பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய
விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

சோசியல் நெட்வொர்க்-ல் நண்பர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். நம் நிறுவனத்துக்கு ஆன்லைன்-ல் இலவசமாக லோகோ(Logo) நாமே உருவாக்கலாம்

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. vasudevan.s  |  4:20 பிப இல் திசெம்பர் 8, 2010

    good news.

    i always read ur blog.

    urs TNPSC Question & answer i regularly read.

    good work and continue ur social works

    மறுமொழி
    • 2. winmani  |  5:27 பிப இல் திசெம்பர் 8, 2010

      @ vasudevan.s
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. தமீம்  |  10:06 பிப இல் திசெம்பர் 19, 2010

    மிக்க நன்றி

    மறுமொழி
    • 4. winmani  |  10:59 பிப இல் திசெம்பர் 19, 2010

      @ தமீம்
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...