நம் பேஸ்புக் அல்லது நண்பர்களின் பேஸ்புக் -ல் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் எளிதாக சேமிக்கலாம்.
பிப்ரவரி 10, 2012 at 2:56 முப 1 மறுமொழி
சமூக வலைதளங்களில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக் தளத்தில் நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்பட ஆல்பங்கள் மற்றும் நம் நண்பரின் புகைப்பட ஆல்பங்கள் என அனைத்தையும் எளிதாக நம் கணினியில் சேமித்து வைக்க ஒரு இணையதளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆரம்ப காலத்தில் பேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வசதி இல்லாமல் ஏதாவது ஒரு தளத்தில் பகிர்ந்து கொண்டு அதன் இணைப்பை பேஸ்புக்-ல் பயன்படுத்தி வந்தனர் ஆனால் அதன் பின் பேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றலாம் என்ற பின் பலரும் தங்களுடைய புகைப்படங்களை ஆல்பங்களாக மாற்றி சேமித்து வைத்துள்ளனர் இப்படி நாம் அல்லது நம் நண்பர்கள் பேஸ்புக் தளத்தில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் எளிதாக நம் கணினியில் சேமிக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://facebook2zip.com
இத்தளத்திற்கு சென்று நாம் Login with Facebook என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நம் பேஸ்புக் கணக்கை கொடுத்து உள்நுழைய
வேண்டும் அடுத்து வரும் திரையில் நம் நண்பர்களில் யாருடைய பேஸ்புக் புகைப்பட ஆல்பங்களை தறவிரக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும் அடுத்து குறிப்பிட்ட நண்பர் சேர்த்து வைத்திருக்கும் பல ஆல்பங்களில் நமக்கு ஏது தேவையோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் அடுத்து வரும் திரையில் இருக்கும் Download என்பதை சொடுக்கி புகைப்படங்களை நம் கணியில் சேமித்து வைக்கலாம். கண்டிப்பாக புதுமை விரும்பிகளுக்கும் பேஸ்புக்-ல் இருந்து புகைப்படங்களை சேமிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கூகுள் வீடியோ , பேஸ்புக் வீடியோ, யூடியுப் வீடியோ குவாலிட்டியுடன் தரவிரக்கலாம்.
பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி
நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்
பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம் உருவாக்க எந்த கோடிங் அனுபவமும் தேவையில்லை.
தினம் ஒரு புத்தகம் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எழுதிய " பாஞ்சாலி சபதம் – உறைபொருளும் மறைபொருளும் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை மனிதாக பிறந்து எந்த உயிருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழும் வாழ்க்கையே உன்னதமான வாழ்க்கை.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு zone வலயம் , கலாபம் zone தொகுதி , பகுதி zone பிரதேசம் , வட்டாரம் , மண்டலம் zonecomp வலையம் zone bitstech வட்டாரத் துணுக்குகள் zoo விலங்குகள் பூங்கா zoogonytech விலங்குப்பிறப்பு zooidtech விலங்குரு zoologistoccup விலங்கியளாளர் zoology விலங்கியல்
இன்று பிப்ரவரி 10
பெயர் :அலெக்சாண்டர் புஷ்கின், மறைந்த தேதி : பிப்ரவரி 10, 1837 ரஷ்ய மொழியில் காதல் காவியங்கள் படைத்த ஒரு சிறந்த எழுத்தாளர்.இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் மிகப்பெரிய கவிஞராகவும் பலராலும் கருதப்படுகிறார். புஸ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாக இருந்தார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1.
தனபாலன் | 1:06 பிப இல் பிப்ரவரி 15, 2012
மிகவும் பயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே !