கூகிளில் தேடும் படங்களை 3D -ல் அழகாக நேர்த்தியாக காட்டும் பயனுள்ள நீட்சி.

ஓகஸ்ட் 2, 2011 at 7:49 முப 2 பின்னூட்டங்கள்

கூகிள் இணையதளத்தில் சென்று படம் தேடும் நபர்களுக்கு ஒரு அழகான மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இனி குரோம் உலாவியில் கூகிள் படங்களை 3D-ல் அழகாக பார்க்கலாம், ஒவ்வொரு படத்தையும் அங்கிருந்தே முழுமையாக்கி பார்க்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 2

Google Images -ல் சென்று படங்களை தேடுபவர்கள் சில படங்களை சொடுக்கி அடுத்து வரும் திரையில் தான் அந்த படங்களை முழுமையாக பார்க்க முடியும் என்று இல்லாமல ஒரே திரையில் கூகிள் இமெஜில் நாம் தேடும் அத்தனை படங்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் 3D – ல் காட்டுகின்றனர், நமக்கு உதவுவதற்காக உள்ள குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது.

தறவிரக்க முகவரி : https://chrome.google.com/webstore/detail/noocneohefmdhonidldnlhaainpiomkp#

படம் 1

கூகிள் குரோம் உலாவியில் இருந்து கொண்டு நாம் மேலே இருக்கும் முகவரியை சொடுக்கி வரும் திரையில் Install என்ற  பொத்தானை சொடுக்கி எளிதாக நிறுவலாம். நிறுவி முடித்ததும் குரோம் உலாவியின் டூல் பாரில் படம் 1-ல் உள்ளது போல் ஒரு படம் தெரியும் அதை சொடுக்கி Launch cooliris என்று மற்றும் ஒரு இணையப்பக்கம் திறக்கும் அங்கு நடுப்பக்கத்தில் இருக்கும் கூகிள் தேடல்  கட்டத்திற்குள் நாம் தேடவிருக்கும் படங்களின் பெயர்களை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கவும். ஒரு சில நிமிடங்களில் நாம் தேடிய வார்த்தையில் இருக்கும் அத்தனை படங்களும் 3D-ல் வந்து நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் , கூடவே அந்தப்படங்களை சொடுக்கி அங்கிருந்தே பெரிதாக பார்க்கலாம், படங்கள் அல்லாத வெளியே சொடுக்கி எளிதாக அடுத்தப் படத்தை பார்க்கலாம் , மவுஸ் -ல் இருக்கும் Scroll bar பயன்படுத்தி Zoom in, Zoom out செய்தும் பார்க்கலாம், தொழில் நுட்ப புதுமை விரும்பிகளுக்கும், கூகிளில்  படங்களைத் தேடி ஒவ்வொரு பக்கமாக செல்லும் நபர்களுக்கும் பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நீட்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

 
வின்மணி இன்றைய சிந்தனை
உதவும் குணம் நம்மோடு இருக்கும் வரை 
இறைவன் நம்மோடு தான் இருப்பார்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாடு சிறுதொழில்கள் நிறுவனம் (TANSI) ஆரம்பிக்கபபட்ட
  ஆண்டு ? 
2.மெட்ராஸ்-ஐ சென்னை என மொழிமாற்றம் செய்த 
 முதலமைச்சர் யார் ?
3.இந்தியாவின் பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் தமிழகத்தின் 
 சதவீதம் என்ன ? 
4.மதுரை மாநகரை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு அழைக்கிறது?
5.செஞ்சி நாயக்கர் வம்சத்தின் முதல் அரசர் யார் ?
6.சோழ அரசர்களின் நிர்வாகம் பற்றி கூறும் கல்வெட்டு எது ?
7.திருச்சி , நெல்லை , சேலம் ஆகியவை மாநகராட்சிகளான
  ஆண்டு ?
8.பாண்டியர்களின் போர்முறை பற்றி கூறும் கல்வெட்டு எது ?
9.நெல் அதிகமாக விளையும் மாவட்டம் எது ? 
10.”ராஜா பகதூர் ” பட்டம் பெற்ற புதுக்கோட்டை 
 தொண்டைமான் யார் ? 
பதில்கள்:
1.1965, 2.கருணாநிதி, 3.90%, 4.தமிழ் கூடல், 
5.வையப்ப நாயக்கர், 6.உத்திரமேரூர் கல்வெட்டு ,
7.1994 ஏப்ரல் 1, 8.திரிவந்திபுரம் கல்வெட்டு , 
9.தஞ்சாவூர், 10.விஜய ரகுநாத தொண்டைமான்.

 

இன்று ஆகஸ்ட் 2

பெயர் : அலெக்சாண்டர் கிரகாம் பெல் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 2, 1922
இவர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும்
அறியப்படுகிறார். இவரது தாயாரும்
மனைவியும் செவிடராதலினால் இவரது
ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக
அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம்
ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல்
தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம். தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...