Outlook Express -ல் இருக்கும் இமெயிலை பேக்கப் எடுத்து வைக்கலாம்.

நவம்பர் 7, 2010 at 11:55 பிப 10 பின்னூட்டங்கள்

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ல் இருக்கும் மொத்த இமெயிலையும் சில
நிமிடங்களில் பேக்கப் எடுத்து வைக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் நம் கணினியை முதலில்
தாக்கும் போது அதிக முக்கியத்துவத்துடன் இமெயிலைத்தான்
குறிவைக்கின்றன இப்படி வைரஸ் தாக்கிய பின்பு நம் அவுட்லுக்
மெசேஸ்கள் அனைத்தும் மீட்க முடியாமல் போகிறது இந்தப்
பிரச்சினையிலிருந்து நமக்கு உதவ அவுட்லுக் எக்ஸ்பிரஸை
பேக்கப் எடுத்து வைக்கலாம். பேக்கப் எடுப்பதற்கு நமக்கு
உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. Download என்ற இந்த
முகவரியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

Download

இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்
அடுத்து மென்பொருளை இயக்கி அதில் File மெனுவை சொடுக்கி
அங்கு இருக்கும் Backup Wizard என்பதை தேர்ந்தெடுக்கவும்.
வரும் திரையில் எந்த தேதியில் இருந்து பேக்கப் எடுக்க வேண்டும்
என்ற தகவல் வரும் எல்லாம் கொடுத்து முடித்த பின் Next என்ற
பொத்தானை அழுத்தவும் அடுத்து வரும் திரையில் அவுட்லுக்
செய்திகளை எங்கு சேமிக்க வேண்டும் என்று கேட்கும் அதையும்
தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை சொடுக்கி
சேமிக்கலாம்.  இந்த மென்பொருள் உதவியுடன் Delete செய்த
இமெயிலையும் மீட்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் பயன்படுத்தும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
அடுத்தவரை ஏமாற்றும் மனிதன் முதலில் தன்னை 
ஏமாற்றிக்கொள்கிறான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அணுவில் உள்ள நீயூட்ரானை கண்டுபிடித்தவர் யார் ? 
2.டான் என்பது எந்த நாட்டு தினசரிப்பத்திரிகை ? 
3.லெம்மிங் எந்த இனத்தை சார்ந்தது ? 
4.கண்ணாடியோடு நன்கு ஒட்டக்கூடிய உலோகம் எது ? 
5.இந்தியாவின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி எங்கு
  நடந்தது ? 
6.திரிசூல் ஏவுகணை எப்போது சோதிக்கப்பட்டது ? 
7.இரும்பை விட கனமான வாயு எது ? 
8.வின்டர் எண்ணெயில் உள்ளது எது ? 
9.தியாகிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ? 
10.கோபன்ஹேகன் எந்த நாட்டின் தலைநகரகம் ?
பதில்கள்:
1.ஜே.சாட்விக், 2.பாகிஸ்தான்,3.எலி இனத்தை, 4.குரோமியம்,
5.அகமதாபாத்,6.1999-ல், 7.ராடான், 8.மெத்தில் சாலிசிலேட்,
9.ஜனவரி 30.10.டென்மார்க்
இன்று நவம்பர் 7
பெயர் : கிருபானந்த வாரியார் ,
மறைந்த தேதி : நவம்பர் 7, 1993
சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக
சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையே தவமாகக்
கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம்,
மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை
போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி"
என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் -ல் செஸ் விளையாடி உங்கள் திறமையை வளர்க்கலாம். ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter )

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  12:13 முப இல் நவம்பர் 8, 2010

    சார் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்தாலும் அதிகமாக கமெண்ட் போடவில்லை. மன்னிக்கவும்.
    உங்கள் பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. காரணம். தொழிற்நுட்ப விசயங்கள், கூடவே, சிந்தனை, பொது அறிவு, நாள் தகவல் என பல விசயங்களை அளிக்கிறீர்கள். பாரட்டுக்கள்! பாராட்டுக்கள்!
    நானும் ஒரு தொழிற்நுட்ப பதிவர் என்ற முறையில் உங்கள் பணி என்னை மிகவும் கவர்ந்துள்ளது! வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 2. winmani  |  8:41 பிப இல் நவம்பர் 11, 2010

      @ எஸ். கே
      மிக்க நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 3. jiyath  |  12:00 பிப இல் நவம்பர் 9, 2010

    நண்பா! நானும் Backup எடுத்தேன்.

    மறுமொழி
  • 5. Shaik Sujibar  |  7:45 பிப இல் நவம்பர் 12, 2010

    மிக பயனுள்ள பதிவு. நன்றி

    மறுமொழி
    • 6. winmani  |  9:04 பிப இல் நவம்பர் 12, 2010

      @ Shaik Sujibar
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. david  |  11:39 முப இல் நவம்பர் 17, 2010

    sweet

    மறுமொழி
  • 9. mohamed  |  12:11 முப இல் ஜூலை 31, 2011

    DEAR MR.WINMANI,

    NO WORDS TO SAY ..YOU DONE GREAT JOB.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...