வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்.

ஓகஸ்ட் 1, 2011 at 5:17 முப 6 பின்னூட்டங்கள்

வீடியோ இமெயில் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில நேரங்களில் நாம் என்ன தான் இமெயில் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கேமிரா  மூலம் பேசி வீடியோ மெயிலாக உடனடியாக அனுப்பலாம்.

இணையதள முகவரி: http://mailvu.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கேமிரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை  சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை  பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில்  யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் இமெயில் முகவரி மற்றும் நம் இமெயில் முகவரி, பெயர் , வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text  என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம், இங்கு கொடுத்திருக்கும் Notify me when this message read என்ற செக் பாக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு இமெயில் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு  எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மீச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மெயிலாக தமிழ் மொழியிலே பேசி அனுப்புவோம்.

 
வின்மணி இன்றைய சிந்தனை
உண்மையான அன்பையும் பாசத்தையும் காட்டி குழந்தையை 
வளர்த்தால், குழந்தை எப்போதும் தவறாக செல்லாது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சென்னை வர்த்தகசபையானது சென்னை வர்த்தக 
 தொழிற்சபையாக மாறிய ஆண்டு ? 
2.1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட 
 முன்னாள் இந்தியப்பிரதமர் ?
3.தமிழ்நாட்டின் அமைதிப்பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் நதி எது?
4.மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு ?
5.ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு ?
6.உத்தம சோழன் என்ற பட்டம் கொண்டவர் யார் ?
7.தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
8.தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ?
9.சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்க வேண்டிய மொத்த 
 நீதிபதிகளின் எண்ணிக்கை ?  
10.செஞ்சி மலை, கல்வராயன் மலை காணப்படும் மாவட்டம் எது?
பதில்கள்:
1.1966, 2.ராஜீவ்காந்தி, 3.பவானி, 4.1739, 5.1959, 
6.முதலாம் இராஜேந்திரன் , 7.1992, 8.1959 , 
9.49, 10.விழுப்புரம்.

 

இன்று ஆகஸ்ட் 1 

பெயர் : பால கங்காதர திலகர்,
மறைந்தததேதி : ஆகஸ்ட் 1 , 1920
ஒரு இந்தியத் தேசியவாதியும், சமூக
சீர்திருத்தவாதியும், விடுதலைப் போராட்ட
வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின்
முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும்
இவரே.இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி
கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது
பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும்
இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில்
நினைவுகூரப்படுகிறது. உங்களால் நம் தேசம் பெருமை
கொள்கிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

TNPSC GROUP 2 – ANSWER KEY – 2011 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 சரியான விடைகள் கூகிளில் தேடும் படங்களை 3D -ல் அழகாக நேர்த்தியாக காட்டும் பயனுள்ள நீட்சி.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Amirthalingam Nagarajan  |  12:15 பிப இல் ஓகஸ்ட் 1, 2011

    மிகவும் பயனுள்ள தகவல்
    நாகராஜன்

    மறுமொழி
    • 2. winmani  |  3:03 பிப இல் ஓகஸ்ட் 1, 2011

      @ Amirthalingam Nagarajan
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. krishnamoorthy.s  |  12:50 பிப இல் ஓகஸ்ட் 1, 2011

    என்னைப் போன்ற மக்களுக்குப் பயன்படும் நல்ல மற்றொரு பதிவு
    மேலும் பதிவுகளைக் கொடுக்க வாழ்த்துக்கள்
    கிருஷ்ணமூர்த்தி

    மறுமொழி
    • 4. winmani  |  4:11 பிப இல் ஓகஸ்ட் 1, 2011

      @ krishnamoorthy.s
      மிக்க நனறி

      மறுமொழி
  • 5. prabu  |  6:34 பிப இல் ஓகஸ்ட் 2, 2011

    nandri

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...