கூகுள் வீடியோ , பேஸ்புக் வீடியோ, யூடியுப் வீடியோ குவாலிட்டியுடன் தரவிரக்கலாம்.

நவம்பர் 28, 2010 at 5:58 பிப 2 பின்னூட்டங்கள்

கூகுள் டாக்ஸ்-ல் இருக்கும் வீடியோ மற்றும் பேஸ்புக் வீடியோவை
எந்த மென்பொருளும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக
குவாலிட்டியுடன் தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையத்தில் கிடைக்கும் அறிய பல வீடியோக்கள் பெரும்பாலும்
யூடியுப்,கூகுள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் தான் அதிகமாக
கிடைக்கின்றது இதில் உள்ள வீடியோக்களை நம் கணினியில்
சேமிப்பதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.savevid.com

படம் 2

உலகச் செய்திகள் முதல் அறிவியல் , கணினி பற்றிய உலகளாவிய
விளக்கங்கள் கொடுக்கும் வீடியோக்கள் , திரைபடங்கள் இன்னும்
பலவற்றை கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கும் கூகுள்,
யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் இருக்கும்
வீடியோவை நம் கணினியில் எளிதாக சேமிக்கலாம். இந்ததளத்திற்கு
சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் எந்த தளத்தின்
வீடியோ சேமிக்க வேண்டுமோ அதை கொடுக்கவும் உதாரணமாக
நாம் கூகுள் வீடியோவின் முகவரியை கொடுத்துள்ளோம்.
url முகவரி கொடுத்து Download என்ற பொத்தானை அழுத்தியதும்
நமக்கு படம் 2-ல் காட்டியபடி எந்த பார்மட்-ல் தரவிரக்கம்
ஆகப்போகிறது என்பதையும் காட்டும் இப்போது FLV என்று
இருக்கும் ஐகானை சொடுக்கி நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.
வீடியோவை தரவிரக்க விரும்பும் நண்பர்களுக்கு  இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மனதில் ஆணவம் இல்லாமல் இருக்கும் மனிதர் எந்த
ஆலயத்துக்கும் செல்ல வேண்டியதில்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் மிக குறைவாக மக்கள் உள்ள மாநிலம் எது ?
2.இந்திய தேசிய காங்கிரஸ் எப்போது தொடங்கப்பட்டது ?
3.இமயமலையில் வாழும் பனி மனிதனின் பெயர் என்ன ?
4.”ஏர் இந்தியா “ எந்த் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ?
5.சைப்ரஸ் நாட்டின் தேசிய தினம் எது ?
6.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் 
  கல்லூரியின் பெயர் என்ன ?
7.இந்திய இராணுவ நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
8.பசுவுக்கு மொத்தம் எத்தனை இரைப்பைகள் உள்ளது ?
9.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பிரபலமானது ?
10.மேற்கு இரயில்வேயின் தலமையகம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.சிக்கிம்,2.1885 ,3.ஏட்டி,4.1946, 5.ஏப்ரல் 1,
6.தாம்ஸன் கல்லூரி,7.ஜனவரி 21, 8. 4, 
9. புழல். 10.மும்பை.
இன்று நவம்பர் 28  
பெயர் : என்ரிக்கோ பெர்மி,
மறைந்த தேதி : செப்டம்பர் 28, 1954
ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல்
அறிஞராவார். உலகின் முதலாவது
அணுக்கரு உலையை உருவாக்கியமைக்
-காகவும் குவாண்டம் கொள்கை,அணுக்கரு
இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை
போன்றவற்றில் இவரது பங்களிப்பு இன்றியமையாதது

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , , .

குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம். சோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அய்யனார் வாசுதேவன்  |  6:43 பிப இல் நவம்பர் 30, 2010

    நன்றி

    மறுமொழி
    • 2. winmani  |  3:33 பிப இல் திசெம்பர் 1, 2010

      @ அய்யனார் வாசுதேவன்
      நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...