தாய்மார்களுக்கு உதவும் கர்ப்ப கால அறிவுரைகளை துல்லியமாக கொடுக்கும் மருத்துவ காலண்டர்.
ஜூலை 17, 2011 at 12:00 பிப பின்னூட்டமொன்றை இடுக
கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் என்ன வகையான உணவு எப்போதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று சோதித்துக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி அழகான குழந்தையை பெற்றெடுக்க நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் என அனைத்தையும் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பூமிக்கு அழகான குழந்தையை பெற்றுக் கொடுக்கும் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய பயிற்சிகள், எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து , மாத்திரைகள் என அனைத்தையும் காலண்டர் மூலம் குறித்து கூறுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.medhelp.org/land/pregnancy-calendar
இத்தளத்திற்கு சென்று Join now என்ற பொத்தானை சொடுக்கி தாய்மார்கள் புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அதன் பின் தற்போது எத்தனை மாதம் ஆகிறது , எந்தெந்த நாட்களில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று இங்கு இருக்கும் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எடை அதிகரிக்கிறது என்பதில் தொடங்கி சாப்பிட வேண்டியது என்ன, தவிர்க்க வேண்டியது என்ன , என்பது வரை அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். இதைத்தவிர கர்ப்ப காலத்தில் இருக்கும் மற்ற தாய்மார்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மருத்துவ முறையையும் பகிர்ந்து கொள்ளலாம், கர்ப்ப காலத்தில் இருக்கும் தாய்மார்கள் அழகான குழந்தை பெற்றெடுக்க பயனுள்ள பல அறிவுரைகளை இத்தளம் வழங்குகிறது.
நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.
மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.
மனித உடலின் தோலில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளைக்கும் படங்களுடன் தீர்வு சொல்லும் தளம்.
நம்மிடம் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பயனுள்ள இணையதளம்.
வின்மணி இன்றைய சிந்தனை மானம் உள்ள மனிதர் தவறு செய்வதைப்பற்றி யோசிப்பது கூட இல்லை,மானம் இல்லா மனிதர் தவறைப்பற்றி கவலைப்படுவதில்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியவர்கள் யார் ? 2.பிற்கால சோழப்பேரரசை உருவாக்கியவர் யார் ? 3.பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ள இடம் எது ? 4.மலைக்கள்ளன் என்ற நாவல் ஆசிரியர் யார் ? 5.தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஏற்றப்பட்ட ஆண்டு ? 6.இலவச கலர்டிவி முதன் முதலில் கொடுக்கப்பட்ட ஆண்டு ? 7.தர்மபுரியில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டம் ? 8.புனித டேவிட் கோட்டை உள்ள இடம் எது ? 9.வேலையில்லா இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை முதன் முதலில் கொடுக்கப்பட்ட ஆண்டு ? 10.சைமன் குழு சென்னைக்கு வந்த ஆண்டு ? பதில்கள்: 1.பாண்டிய மன்னர்கள், 2.விஜயாலயன், 3.திருச்சி, 4நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, 5. 1994, 6.2006, 7.கிருஷ்ணகிரி, 8.கடலூர், 9.2006, 10.1929.
இன்று ஜூலை 17
பெயர் : பாரதிராஜா, பிறந்ததேதி : ஜூலை 17, 1941 தமிழ்த் திரைப்பட இயக்குநர்.அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகளை உணர்வுப் பூர்வமாக படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தாய்மார்களுக்கு உதவும் கர்ப்ப கால அறிவுரைகளை துல்லியமாக கொடுக்கும் மருத.
Subscribe to the comments via RSS Feed