வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.
ஜூலை 18, 2011 at 3:53 பிப 12 பின்னூட்டங்கள்
வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மென்பொருள் தறவிரக்க முகவரி : http://www.lightworksbeta.com
இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி இன்றைய சிந்தனை எதையும் எதிர்பார்க்காத அன்பு ஒன்று தான் சில நேரங்களில் பல நல்ல நண்பர்களை நமக்கு கொடுக்கிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சோழர்களின் கொடியில் உள்ள விலங்கு எது ? 2.தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டதிருத்தம் ஏற்பட்ட ஆண்டு ? 3.சென்னை மாகாணத்தின் முதல் பிரபு யார் ? 4.மாலிகாபூரின் மதுரை படையெடுப்பு நடந்த ஆண்டு ? 5.இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே தமிழர் யார் ? 6.தமிழ்நாடுஅரசு குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு? 7.தலைக்கோட்டை போர் நடந்த ஆண்டு ? 8.தமிழ்நாட்டின் மைய நூலகம் எது ? 9.தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை யார் ? 10.இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது ? பதில்கள்: 1.புலி, 2.2006, 3. அஸீம் ஷா, 4.கி.பி.1311, 5.இராஜாஜி, 6.1971, 7.கி.பி.1565, 8.கன்னிமாரா பொதுநூலகம் (சென்னை), 9.வ.உ.சிதம்பரம் பிள்ளை, 10.சின்ன மருதூர்.
இன்று ஜூலை 18
பெயர் : நெல்சன் மண்டேலா, பிறந்ததேதி : ஜூலை 18, 1918 தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்..
1.
Nakinam Sivam | 5:37 பிப இல் ஜூலை 23, 2011
வாழ்த்துக்கள் நண்பரே தமிழர்க்கு மாபெரும் தொண்டு செய்து வருகிறீர். வாழ்க வளர்க
2.
winmani | 5:38 பிப இல் ஜூலை 23, 2011
@ Nakinam Sivam
மிக்க நன்றி
3.
selvamurali | 11:57 முப இல் ஜூலை 24, 2011
அருமையான பதிவு அண்ணா
4.
winmani | 12:18 பிப இல் ஜூலை 24, 2011
@ selvamurali
மிக்க நன்றி
5.
paari chelian | 12:16 பிப இல் ஜூலை 24, 2011
mikka nadri thoalar
6.
winmani | 12:19 பிப இல் ஜூலை 24, 2011
@ paari chelian
மிக்க நன்றி
7.
paari chelian | 11:17 பிப இல் ஜூலை 26, 2011
vedio editing பல முறை ஆனால் download ஆகவில்லை download
கொஞ்சம் விளக்கமாக சொன்னால்
பயன்படும்
8.
winmani | 11:27 பிப இல் ஜூலை 26, 2011
@ paari chelian
Register என்பதை சொடுக்கி ஒரு புதிய பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொண்டு Download என்பதை சொடுக்குங்கள் வலது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் Download என்று ஒரு பட்டன் இருக்கும் இதைச்சொடுக்கி தறவிரக்கலாம். மேலும் ஏதெனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.
மிக்க நன்றி
9.
krishnamoorthy.s | 4:09 பிப இல் ஜூலை 27, 2011
it takes some time to download. but thanks for the information
10.
winmani | 1:37 முப இல் ஜூலை 28, 2011
@ krishnamoorthy.s
மிக்க நன்றி
11.
sathish | 7:32 பிப இல் ஜூலை 30, 2011
super winmani,,,,,,,
12.
winmani | 8:22 முப இல் ஜூலை 31, 2011
@ sathish
மிக்க நன்றி