நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.

ஜூலை 16, 2011 at 2:35 பிப பின்னூட்டமொன்றை இடுக

புதிதாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் முதலில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப் பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையதளம் ஆரம்பிப்பதும் வீடுகட்டுவதும் ஒன்று தான் வீடு கட்டும் போது ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி வீட்டிற்கு எந்த அழகான வண்ணம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்கவே நமக்கு காலம்  அதிகமாக செலவாகிறது இதே முறை தான் இணையத்திலும் நமக்கு விருப்பமான வண்ணம் அல்லது டிசைன் பேக்ரவுண்ட்-ல்  இருந்தால் நன்றாக இருக்கும் எண்ணுபவர்களுக்கு உதவுவுதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://bgmaker.ventdaval.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு விருப்பமான வண்ணத்தை கொடுத்து பார்க்கலாம் ஒவ்வொரு வண்ணமும் தேர்ந்தெடுத்து  மேல் இருக்கும் + மற்றும் – என்பதை சொடுக்கி ஒரு அழகான டிசைன் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் உருவாக்கலாம். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, உருவாக்கிய டிசைனை  உடனுக்கூடன் பேக்ரவுண்ட்-ல் பார்த்துக்கொள்ளலாம். மில்லியன் கணக்கில் டிசைன் இதில்  ஒளிந்திருக்கிறது, அழகான டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்  சில மணி நேரம் செலவு செய்தால் தாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அழகான  டிசைன் உருவாக்கலாம். டிசைன் உருவாக்கியபின் Save image என்பதை சொடுக்கி  இந்தப்படத்தை PNG கோப்பாக சேமிக்கலாம். பின் நம் தளத்தில் Background image- என்பதில்  நாம் உருவாக்கியப் படத்தை வைக்கலாம். இணையதள வடிவமைப்பு வாசிகளுக்கும் புதுமை
விரும்பிகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் வலைப்பூவை படித்துக்கொண்டு இருப்பவர்களை அவர்கள் நாட்டு கொடியுடன் காட்டலாம்.

ஆங்கில வார்த்தைகளை ஒழுங்குபடுத்த வலைப்பூவுடன் வரும் கருவி

பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.

உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ

 
வின்மணி இன்றைய சிந்தனை
அன்பை மட்டும் எதிர்பார்க்கும் எல்லோருக்கும் ஆண்டவன்
எல்லாச் செல்வங்களையும் அள்ளி கொடுப்பான்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக ஆன ஆண்டு ?
2.கொடிகாத்த குமரன் தடியடிபட்டு மரணமடைந்த ஆண்டு ?
3.தமிழ்நாட்டில் காவேரி ஆறு ஏற்படுத்தும் நதித் தீவு ?
4.தக்கோலம் போர் நடந்த ஆண்டு ?
5.டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
6.புள்ளலூர் போர் நடந்த ஆண்டு ?
7.சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட
  ஆண்டு ?
8.தமிழில் வெளியான முதல் வார இதழ் ?
9.தந்தை பெரியார் மறைந்த ஆண்டு ?
10.தமிழ்நாட்டில் நான்காவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு ?
பதில்கள்:
1.1938, 2.1932, 3.ஸ்ரீரங்கம், 4.கி.பி.949, 5. 1987, 6.கி.பி.620,
7.1975 ,8.தினவர்த்தமானி, 9.1973,  10.1901.
 
இன்று ஜூலை 16 

பெயர் : டி.கே.பட்டம்மாள்,
மறைந்ததேதி : ஜூலை 16, 2009
ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். 1962-ம் ஆண்டில்
சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல்
பத்மபூசன்,1998ம் ஆண்டில் பத்மவிபூசன்,
தேசியகுயில்,சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல
விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி நித்யஸ்ரீ
மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap. தாய்மார்களுக்கு உதவும் கர்ப்ப கால அறிவுரைகளை துல்லியமாக கொடுக்கும் மருத்துவ காலண்டர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: