கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.
ஒக்ரோபர் 29, 2010 at 11:19 முப 2 பின்னூட்டங்கள்
கணினியில் நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Shortcut
விசைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து படித்து நம்
பொன்னான நேரத்தை மீச்சப்படுத்தாலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
மைக்ரோசாப்ட் வேர்டு- ல் கோப்பை திறக்க மற்றும் சேமிக்க மட்டும்
தான் Shortcut கீ உங்களுக்கு தெரிந்திருக்கிறதா இனி உங்களுக்கு
தெரிந்த தெரியாத அத்தனை ஷார்ட்கட் கீ -யையும் ஒரே இடத்தில்
இருந்து தெரிந்து கொள்ளலாம் இது மைக்ரோசாப்ட் வேர்டு-க்கு
மட்டும் அல்ல அத்தனை மென்பொருட்களுக்கும் உண்டான Shortcut
கீ -யும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
இணையதள முகவரி : http://www.shortcutworld.com
Shorcut World என்ற இந்த தளத்திற்கு சென்று நாம் Firefox 4 ,
Chrome 6 , Word 2010 , Excel 2010 , Photoshop CS5, After Effects CS5 ,
Windows 7 , GMail ,OneNote 2010 ,Internet Explorer 8 ,VLC Media Player
Ubuntu Desktop 9 , PowerPoint 2007 , Outlook 2010 , Windows Media
Player 11 இன்னும் பல மென்பொருட்களின் எளிய பயன்பாட்டு
ஷொர்ட்கட் கீ -க்களை தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தத்தளம்
கணினியே உலகம் என்று பயன்படுத்துபவர்களுக்கு நேரத்தை
மீச்சப்படுத்தும் ஒரு பொக்கிஷமான தளம்.
வின்மணி சிந்தனை செய்ய வேண்டிய முக்கிய வேலையை அப்போதே செய்யுங்கள் அதன் பின் சிரமம் இல்லாமல் இருக்கலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.நியான் விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 2.குரோனோ மீட்டரை கண்டுபிடித்தவர் யார் ? 3.ஒயிட்மேன் கோப்பை எந்த ஆட்டத்திற்காக வழங்கப்படுகிறது? 4.உகாண்டா எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது ? 5.அங்காரா நதி பாயும் நாடு எது ? 6.விண்வெளிக்கு சென்ற 100 வது வீரர் யார் ? 7.கிளிமாஞ்சாரோ எங்குள்ளது ? 8.கோடா புக்ஸி எரிமலை எங்குள்ளது ? 9.வெண்கடல் எங்கே உள்ளது ? 10.திருப்பாவை இயற்றிய ஆண்டாளின் இயற்பெயர் என்ன? பதில்கள்: 1.ஜார்ஜ் கிளாட், 2.ஜான் ஹாரிஸன்,3.டென்னிஸ், 4.1962,5.ரஷ்யா, 6.விக்டர் சாவினிக், 7.ஆப்பிரிக்காவில், 8.ஈக்வடார், 9.வட ரஷ்யாவில். 10.கோதை.
இன்று அக்டோபர் 29பெயர் : விஜேந்தர் குமார் , பிறந்த தேதி : அக்டோபர் 29, 1985 ஓர் இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர் ஆவார்.பெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்திய ஒலிம்பிக் அணியை சேர்ந்த விஜேந்தர் நடு எடை பிரிவு (middleweight) போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்..
1.
ஆகமக்கடல் | 6:43 முப இல் நவம்பர் 2, 2010
சார் எனக்கு ரெண்டு சந்தேகம் இருக்கு.பதில் தர முடியுமா?
1.NOKIA C3 என்ற மொபைலில் wifi இருக்கு.எனவே அதில் gtalk,skype,fring போன்றவற்றின் ஊடாக online voice chat செய்யமுடியுமா?
2.நெட்புக் கில் தமிழில் எழுதி,படிக்க முடியுமா?சென்னையில் சுமார் எவ்வளவு விலை முதல் கிடைக்கிறது?
பதில் அனுப்பமுடியுமா?
2.
winmani | 11:28 முப இல் நவம்பர் 2, 2010
@ ஆகமக்கடல்
விரைவில் ஒரு பதிவாக தெரியப்படுத்துகிறோம்.
நன்றி