Archive for ஒக்ரோபர் 19, 2010
உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ
அனைத்து நாடுகளிலும் இருக்கும் கால்பந்து விளையாட்டின்
ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்
இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு இணையதளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கிரிக்கெட் திருவிழாவைக் காட்டிலும் கால்பந்து திருவிழா பார்க்கும்
ரசிகர்கள் உலக அளவில் அதிகம். இப்படி உலக அளவில் இருக்கும்
கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் அனைவரையும் இணையத்தில்
ஒரே இடத்தில் இணைப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.footbo.com
இந்தத்தளத்திற்கு சென்று கால்பந்து விளையாட்டில் எந்த அணி
பற்றிய துல்லியமான விபரங்கள் வேண்டுமோ அந்த அணியின்
பெயரை கொடுத்து தேடலாம். நமக்கென்று புதிதாக இலவசமாக
ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உலகத்தின் எந்த
கால்பந்து அணியின் ரசிகராகவும் சேரலாம் அந்த அணியில்
தற்போதையை செய்திகள், மாற்றங்கள் அதோடு அந்த அணி
பற்றிய பிரபலங்களின் கருத்துக்கள் என அனைத்து தகவல்களையும்
ஒரே இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உலகில் எங்கெல்லாம்
எப்போது கால்பந்து போட்டி நடக்கிறது அந்த போட்டியில் பங்கு
பெற நாம் செய்ய வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கு
கிடைக்கிறது. கால்பந்து பற்றி நமக்கு எழும் அத்தனை
சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் ஒரு பயனுள்ள தளமாகவே
இது இருக்கிறது.
வின்மணி சிந்தனை தன்னைப் பற்றி கர்வம் கொள்ளாமல் இருக்கும் எவருக்கும் (கடவுளை நம்பாதவருக்கும் )இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தோலால் சுவாசிக்கும் உயிரினம் எது ? 2.ஆஸ்கார் விருதுக்கான சிலையை எந்த உலோகத்தில் செய்கின்றனர் ? 3.அன்னை தெரசாவுக்கு இந்தியகுடியுரிமை எப்போது கிடைத்தது? 4.எந்த விஞ்ஞானியின் பிறந்த நாள் அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது ? 5.உலகிலேயே மிகப்பெரிய நாணயச்சாலை எங்குள்ளது ? 6.தேசியக்கொடியில் பச்சை நிறம் மட்டுமே உள்ள நாடு எது ? 7.ஜெராக்ஸ் மிஷினை கண்டுபிடித்தவர் யார் ? 8.இந்தியாவில் வாஸ்கோடாகாமா நகரம் எந்த மாநிலத்தில் இருக்கிறது ? 9.பூமத்திய ரேகை எண்ணும் பெயர் கொண்ட நாடு எது ? 10.ஒரு நாளிகை என்பது எத்தனை நிமிடம் ? பதில்கள்: 1.மண்புழு,2.வெண்கலம், 3.1962,4.சர்.சிவி.ராமன், 5.பிலடெல்பியா-அமெரிக்கா,6.லிபியா,7.செஸ்டர் கார்ல்சன், 8.கோவா, 9.ஈகுவடார், 10.24 நிமிடம்.
இன்று அக்டோபர் 19பெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர், பிறந்த தேதி : அக்டோபர் 19, 1910 இவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார். இந்தியாவில் லாகூரில் பிறந்தவர்.விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.