Archive for ஒக்ரோபர் 1, 2010
கடிதம் எழுத ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி உதவுகிறது கூகிள்.
வின்மணி தொடங்கி இன்றோடு 300 வது நாள் மற்றும் 300 வது
பதிவும் கூட , எல்லைகளையும் தேசங்களையும் கடந்து நமக்கு
அன்பையும் வாழ்த்துக்களையும் , அறிவுரைகளையும் வழங்கி வரும்
அனைத்து உலகத்தமிழ் நண்பர்களுக்கும் இந்த வெற்றியை
சமர்ப்பிக்கிறோம், வெளிநாட்டில் இருந்தும் தங்களின் வேலைப்
பளுக்களுக்கு மத்தியிலும் நமக்கு இமெயில் மூலமும் தொலைபேசி
வாயிலாகவும் அன்பையும் ஆதரவையும் கொடுத்த நம்
சகோதரர்களுக்கும் தோழிகளுக்கும் என்றும் நன்றி. மீடியா எக்ஸ்பிரஸ்,
விகடன், இன்ட்லி, தமிழ்மணம் மற்றும் நமக்கு ஆதரவு அளித்து வரும்
அனைத்து பத்திரிகைகளுக்கும், வலைப்பதிவர்களுக்கும் மனமார்ந்த
நன்றி. 9 நாடுகளில் தினமும் சராசரியாக 2000 பேர் படிக்கும்
வலைப்பூவாகவும், மின்னஞ்சல் சந்தாதாரர்கள் 1 இலட்சத்தை
நெருங்குகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாய்ப்பை நமக்கு கொடுத்த எல்லாம்
வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றி..
ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும் என்றால் கூகுள் ஒவ்வொரு
வார்த்தைகளாக சொல்லி நம்மை கடிதம் எழுத வைக்கிறது எப்படி
என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும் என்றால் உடனடியாக நாம்
செல்வது மைக்ரோசாப்ட் வேர்ட் தான் காரணம் எழுத்துப்பிழை
இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் என்ற காரணத்திற்காக
ஆனால் தற்போது கூகுளில் இருந்து புதிதாக ஒரு சேவை
வெளிவந்துள்ளது கூகுள் ஸ்க்ரைப் ( Google Scribe ). கூகுள்
ஸ்க்ரைப் -ன் உதவியுடன் நாம் கடிதம் எழுதினால் எழுத்துப்பிழை,
இலக்கண பிழை மட்டுமல்லாமல் ஒவ்வொரு வார்த்தைக்கு
அடுத்து என்ன வார்த்தை வந்தால் நன்றாக இருக்கும் என்று
சொல்லி நம்மை எழுத வைக்கிறது. பலதரப்பட்ட மக்கள்
பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன என்பதை துல்லியமாகவும்
நேர்த்தியாகவும் காட்டுகிறது. இனி இதை எப்படி பயன்படுத்துவது
என்று பார்ப்போம்.
முகவரி : http://scribe.googlelabs.com
கூகுள் ஸ்க்ரைப் -ன் இந்தத் தளத்திற்கு சென்று நாம் கட்டுரையின்
முதல் எழுத்தை தட்டச்சு செய்ததும் நாம் தட்டச்சு செய்யவிருக்கும்
வார்த்தை எதுவாக இருக்கலாம் என்று தோராயமாக உதவி (Suggestion)
காட்டுகிறது படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தையையும்
தட்டச்சு செய்து முடித்தது சிறிது இடைவெளி விட்டதும் அடுத்த
வார்த்தை இதுவாக இருக்கலாம் என்று உதவியில் நமக்கு காட்டுகிறது.
ஆங்கிலத்தில் எந்ததுறையில் கட்டுரை எழுத வேண்டும் என்றாலும்
இனி கூகுள் ஸ்க்ரைப் உதவியுடன் எளிதாக எழுதலாம்.
வின்மணி சிந்தனை உண்மையும் நேர்மையும் வெற்றிக்கு நம்மை அழைத்து செல்லும் எளிய வழி.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் நிலவியல் பெயர் என்ன ? 2.பாபிலோனியாவின் சிறப்பம்சமாக விளங்குவது ? 3.உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது ? 4.தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது ? 5.இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது ? 6.மனித உடலில் பெருமளவு உள்ள தாது உப்பு எது ? 7.சூரியனுக்கு மிகவும் தொலைவில் உள்ள கோள் எது ? 8.இந்தியாவின் தேசிய விளையாட்டு எது ? 9.சலவைச் சோடா என்பது என்ன ? 10.சிறுநீரில் உள்ள அமிலம் எது ? பதில்கள்: 1.தீபகற்பம், 2.தொங்கும் தோட்டம்,3.சஹாரா, 4.யமுனை, 5.தார் பாலைவனம்,6.கால்சியம்,7.புளூட்டோ, 8.ஹாக்கி, 9.சோடியம் கார்பனேட்,10.யூரிக் அமிலம்.
இன்று அக்டோபர் 1பெயர் : சிவாஜி கணேசன், பிறந்த தேதி : அக்டோபர் 1, 1927 புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர்.பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். நடிகர் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.