Archive for ஒக்ரோபர் 27, 2010
இணையதளத்தின் முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரிபார்க்கலாம்.
புதிதாக இணையதளம் தொடங்குபவர்கள் தங்கள் இணையதளத்தின்
அனைத்து பக்கங்களும் சரியாகத் தெரிகிறதா என்ற சந்தேகம்
இருக்கும் இதற்காக நாம் ஒவ்வொரு பக்கமாக சென்று சொடுக்கி
பார்க்க வேண்டாம் ஒரே நிமிடத்தில் நம் இணையதளத்தின்
முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரி பார்க்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையதள வடிவமைப்பாளர்கள் முதல் இணையதளம் வைத்து
இருப்பவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான
சந்தேகம் நம் இணையதளத்தின் எல்லா பக்கங்களும் வேலை
செய்கிறதா என்ற கேள்வி இருக்கும். முழு இணையதளத்தை
உருவாக்குபவருக்கு அதில் ஒவ்வொரு பக்கமாக சென்று
எல்லா இணைப்பும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க
நேரம் கிடைப்பதில்லை இந்த சிறிய வேலைக்கு உதவ ஒரு
இணையதளம் உள்ளது.