Archive for ஒக்ரோபர் 9, 2010
ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விருப்பப்படி தோன்ற செய்யலாம்.
தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்கள் என்று தோன்றும் வலைப்பூ
உலகத்தில் நமக்கு பிடித்த வலைப்பதிவர்களின் வலைப்பூவை நம்
விருப்பப்படி நம் வலைப்பூவில் தெரியவைக்கலாம் எப்படி என்பதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஒருவருடைய feed மட்டும் தான் கொடுத்து அவருடைய புதிய பதிவை
மட்டும் தான் வலைப்பூவில் காட்டமுடியும் என்று இருந்த நேரத்தில்
கூகுளின் இலவச Feed டூல் மூலம் நாம் விரும்பும் பதிவர்களின்
பதிவுகளை சேர்க்கலாம் என்ற சேவை மகிழ்ச்சிகரமாக தெரிந்தது
ஆனால் இப்போது அதையும் தாண்டி பதிவர்களின் Feed அனைத்தையும்
ஒன்றாக்க்கி ஒரே feed ஆக மாற்ற முடியும் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.feedmingle.com

படம் 2
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி விரும்பும்
பதிவர்களின் Feed Url முகவரியை Feed urls என்ற கட்டத்திற்குள்
கொடுக்கவும் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு Feed முகவரி கொடுத்து
Mingle Now என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான் அடுத்து
வரும் திரை படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது. இதில் நாம் கொடுத்த
அனைத்து வலைப்பதிவர்களின் Feed -ம் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு
Feed முகவரியாக உருவாக்கப்பட்டிருக்கும் அதற்கு அடுத்து widget
என்பதில் கொடுக்கப்பட்டிருக்கும் Code – ஐ காப்பி செய்து நாம் விரும்பும்
நம் வலைப்பூவில் விரும்பும் இடத்தில் இட்டு செய்து பயன்படுத்திக்
கொள்ளலாம். நம் வலைப்பூவில் இந்த Feed எப்படி தெரியும்
என்பதற்கான preview -ம் இதனுடன் காட்டப்படும். கண்டிப்பாக
இந்தப்பதிவு வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும்.
வின்மணி சிந்தனை காலம் கனிந்து வரும் இறைவனின் ஆசியும் அன்பும் நமக்கு விரைவில் கிடைக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஹம்பர்க் நகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது ? 2.உலோக நாணயத்தை முதன் முதலாக வெளியீட்ட நாடு எது? 3.இந்தியாவில் சிறந்த நூல்களுக்கு தரப்படும் உயர்ந்த விருது என்ன ? 4.உலகிலேயே மிகப்பெரிய மலைச்சரிவு எங்குள்ளது ? 5.சோடாவில் குமில்கள் உருவாகி நுரைப்பது எதனால் ? 6.’பணத்தோட்டம்’ என்ற நூலை எழுதியவர் யார் ? 7.டாக்சோபிலி என்று அழைக்கப்பட்ட விளையாட்டு எது ? 8.தாவரங்களின் ஒளிச்சேர்க்கை எளிமையாக நடைபெற உதவுவது எது ? 9.கம்பாலா என்பது எந்த நாட்டின் தலைநகர் ? 10.பென்குவின் பறவைகள் எங்கு காணப்படுகின்றன ? பதில்கள்: 1.ஜெர்மனியில்,2.அமெரிக்கா,3.ஞானபீட விருது, 4.இமயமலையில், 5.கார்பன்டை ஆக்ஸைடால், 6.அறிஞர் அண்ணா,7.வில்வித்தை,8.குளோரோபில், 9.உகாண்டா, 10.தென் துருவப்பகுதியில்.
இன்று அக்டோபர் 9பெயர் : எம்.பக்தவத்சலம், பிறந்ததேதி : அக்டோபர் 9, 1897 தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர்.1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். நேர்மையின் சிகரம். இந்திய தேசத்திற்காக பாடுபட்ட உங்களை மரியாதையுடன் வணங்குகிறோம்.