Archive for ஒக்ரோபர் 6, 2010
சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்.
சீன மொபைல்களின் சற்று நம்பகத்தன்மையும் வரும் Gfive
நிறுவனத்தின் மொபைல்களுக்கான PC Suite கணினியில்
பயன்படுத்தக்கூடிய மென்பொருளை இலவசமாக தரவிரக்கலாம்
இதைப்பற்றிய சிறப்பு பதிவு.
சீனா மொபைல்களின் ஆதிக்கமும் அதிரடியான விலை குறைப்பும்
அளவற்ற சலுகைகளும் பெரும்பாலான மக்களை தன் பக்கம்
ஈர்த்துள்ளது என்றாலும் வாரண்டி என்ற ஒன்றை இதில் எதிர்பார்க்க
முடியாத காரணத்தால் இதை கணினியில் பயன்படுத்த உதவும்
PC Suite மென்பொருளை தரவிரக்க பல தளங்களில் தேடினாலும்
கிடைப்பதில்லை. சீன மொபைல்களில் சற்று அதிகமான வேகத்தில்
விறபனையாகும் ஜீஃபைவ் ( Gfive ) நிறுவனத்தின் கணினிக்கான
மென்பொருளை தரவிரக்குவது எப்படி என்பதைப்பற்றிப் பார்ப்போம்.
PC Suite பயன்படுத்துவதன் முதல் காரணம் நம் மொபைலில் உள்ள
குறுஞ்செய்தி ( SMS ) முதல் அலைபேசி எண்கள் ( Address book ) ,
புகைப்படங்கள் ( Photos ) , ரிங்டோன் ( Ringtone ) வரை உள்ள
அத்தனையும் நம் கணினியில் சேமித்து வைக்கவும், கணினி மூலம்
இண்டெர்நெட் இணைப்பு பயன்படுத்துவதற்கும் முக்கியமாக இந்த
பிசி சூட் பயன்படுகிறது. இணையத்தில் தேடினாலும் கிடைக்காத
G’five நிறுவனத்தின் பல முக்கியமான மாடல் மொபைல் போனுக்கான
ஒரே PC Suite எந்தெந்த மாடல்களுக்கு துணை செய்யும் என்பதை
இங்கு கொடுத்துள்ளோம்.
G’Five D10 , G’Five7610 , G’five7620 , G’Five7630 , G’Five6700i,
G’Five7310I , G’FiveAP3 , G’FiveAP7 , G’FiveE71 , G’FiveE72I ,
G’FiveG3000 , G’FiveG5000I , G’FiveG9000 , G’FiveG9000I ,
G’FiveG9700i , G’FiveH800 , G’FiveM8, G’FiveM73, G’FiveM99,
GFiveMINIE72I , G’FiveN79 , G’FiveN79i , G’FiveS66 , G’FiveS8 ,
G’FiveS80 , G’FiveS85 , G’FiveS9 , G’FiveT550+ , G’FiveTV80 ,
G’FiveU777 , G’FiveU800 , G’FiveU808 , G’FiveU878 ,
G’FiveU999 , G’FiveV80 , G’FiveM77 , G’FiveN70 , G’FiveN80 ,
G’FiveU717.
Gfive the above all Model PC Suite
Download
G’five மற்ற மாடல் PC Suite தரவிரக்க இந்த முகவரியை சொடுக்கி
எந்த மாடலுக்கான Pc Suite வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து
தரவிரக்கிக்கொள்ளவும்.
முகவரி :
http://www.gfivemobile.com/support/default.aspx
குறிப்பு :
தினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்
வருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம்
உருவாக்கியுள்ளோம்.
முகவரி : https://winmani.wordpress.com/website-doubts/
இதில் இணையதளம் குறித்த உங்கள் அத்தனை சந்தேகங்களையும்
கேட்கலாம்.
இமெயில் சந்தாதாரர்கள் கவனத்திற்கு :
இமெயில் மூலம் அனுப்பப்படும் நம் முதல் பதிப்பில் பிழைகள் ஏதாவது
இருந்தால் வலைப்பூவில் உடனடியாக திருத்திக்கொள்ளப்படும்
அதனால் முடிந்தவரை நேரம் கிடைத்தாலும் மேலும் தகவல்கள்
தெரிந்து கொள்ளவும் வலைப்பூவில் https://winmani.wordpress.com
சென்று பதிவுகளைப் பாருங்கள்.
நன்றி
வின்மணி சிந்தனை விளம்பரம் இருந்தால் எந்தப் பொருளை வேண்டுமானாலும் விற்கலாம், இதில் தரமான பொருளாக இருந்தால் வேகமாக விற்பனை ஆகும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.’மகதநாடு’ என்று அழைக்கப்பட்ட பகுதி இன்று எந்த மாநிலமாக உள்ளது ? 2.இந்திய அரசியல் சட்டத்தை திருத்த எத்தனை முறைகள் கையாளலாம் ? 3.டைபர்காம் கார்டன்ஸ் எங்கு அமைந்துள்ளது ? 4.எந்தப் பறவை ஓட்டகப்பறவை என்று அழைக்கப்படுகிறது ? 5.ஆசியாவில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்திய முதல் நாடு எது ? 6.திருமுருகாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார் ? 7.மிகவும் குளிர்ச்சியான கிரகம் எது ? 8.எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் அமெரிக்கர் யார் ? 9.இந்திய தேசிய அறிவியல் பதிவு மையம் எங்குள்ளது ? 10.பெப்கின் என்ற மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ? பதில்கள்: 1.பீஹார், 2.மூன்று,3.அமெரிக்கா, 4.நெருப்புக்கோழி, 5.தாய்லாந்து, 6.நக்கீரர்.1958,7.புளூட்டோ, 8.டாஸ்மென், 9.புது டெல்லி,10.பன்றியின் இரைப்பையில் இருந்து.
இன்று அக்டோபர் 6பெயர் : பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், மறைந்த தேதி : அக்டோபர் 6, 1905 ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும் பயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார். இவர் புவியியல், நிலவியல், பொருளியல், இனவியல் (ethnology) தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.ஐக்கிய அமெரிக்காவில்,கலிபோர்னியாவில் தங்கவயல்களைக் கண்டுபிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார்.