இணையதளத்தின் முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரிபார்க்கலாம்.
ஒக்ரோபர் 27, 2010 at 1:53 பிப 1 மறுமொழி
புதிதாக இணையதளம் தொடங்குபவர்கள் தங்கள் இணையதளத்தின்
அனைத்து பக்கங்களும் சரியாகத் தெரிகிறதா என்ற சந்தேகம்
இருக்கும் இதற்காக நாம் ஒவ்வொரு பக்கமாக சென்று சொடுக்கி
பார்க்க வேண்டாம் ஒரே நிமிடத்தில் நம் இணையதளத்தின்
முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரி பார்க்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
இணையதள வடிவமைப்பாளர்கள் முதல் இணையதளம் வைத்து
இருப்பவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான
சந்தேகம் நம் இணையதளத்தின் எல்லா பக்கங்களும் வேலை
செய்கிறதா என்ற கேள்வி இருக்கும். முழு இணையதளத்தை
உருவாக்குபவருக்கு அதில் ஒவ்வொரு பக்கமாக சென்று
எல்லா இணைப்பும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க
நேரம் கிடைப்பதில்லை இந்த சிறிய வேலைக்கு உதவ ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://validator.w3.org/checklink/

படம் 2
இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை கொடுக்க வேண்டும்.
அடுத்து நமக்கு தேவையான ஆப்சன்-ஐ தேர்ந்தெடுத்து விட்டு
Check என்ற பொத்தானை அழுத்த வேண்டும். ஒரு சில
நிமிடங்களில் நாம் கொடுத்திருக்கும் இணையதளத்தின்
அத்தனை லிங் (Link)-ம் வேலை செய்கிறதா அல்லது
எத்தனை லிங் சரியாக இல்லை என்று அடுத்தப் பக்கத்தில்
அதன் முகவரியுடன் காட்டும். ( படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது)
இணையதளத்தை புதிதாக வடிமைக்கும் நபர்களுக்கு
இந்ததளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை அடுத்தவர் பொருட்களுக்கு முடிந்த வரை சேதம் விழைவிக்க கூடாது. நம் பொருட்களை போலத்தான் அவர்கள் பொருட்களும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார் ? 2.பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதியவர் யார் ? 3.இந்திரா காந்தியின் தாயார் பெயர் என்ன ? 4.வானில் பறக்கும் பொருட்களை எதன் மூலம் அறியமுடிகிறது? 5.இந்தியாவின் முதல் மருத்துவ மேதை யார் ? 6.கிராண்டஸ்லாம் என்பது எந்த விளையாட்டை குறிக்கிறது ? 7.நெல்சன் மண்டேலா எந்த நாட்டை சேர்ந்தவர் ? 8.டார்வின் கொள்கை எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது ? 9.இந்தியாவில் காண்டா மிருகம் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது ? 10.பரத முனிவர் இயற்றிய முக்கிய நூல் எது? பதில்கள்: 1.மேரிக்யூரி - பியரிக்யூரி, 2.பாரதியார், 3.கமலா நேரு, 4.ரேடார்,5.சரகா, 6.டென்னிஸ், 7.தென் ஆப்பிரிக்கா, 8.1859, 9.அஸ்ஸாம். 10.நாட்டிய சாஸ்திரம்.
இன்று அக்டோபர் 27பெயர் : பேரரசர் அக்பர், மறைந்த தேதி : அக்டோபர் 27, 1605 1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். ஒரு சிறந்த கலைஞர், சிறந்த போர்வீரர்,கலைஞானி,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனமும் படைத்தவர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இணையதளத்தின் முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரிபார்க்கலாம்..
1.
M.Gurupara Ramalingam | 12:39 பிப இல் நவம்பர் 4, 2010
Dear Sir,
I did not have any url.Please send your bloggings to my mail id without fail.Your messages and links along with the guidelines are superb.
yours,
Ramalingam MG